Tuesday 24 December 2013

Tagged Under: , , ,

கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பை சரியாக கணிக்க ஸ்மார்ட் ஃபோனே போதும்.!.

By: Unknown On: 00:46
  • Share The Gag



  • அநேக பேருக்கு முக்கிய பிரச்சினை கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு உடம்பில் அதிகம் இருப்பது. இது இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உண்டு. HDL & LDL எனப்படும் இந்த இரண்டு வகையினால் தான் பெரும்பாலோருக்கு இதய நோயான ஹார்ட் அட்டாக் முதற் கொண்டு பல நோய்கள் வருகிறது. இது போக ட்ரைகிளய்சிரேட்ஸ் என்னும் இன்னுமொரு மோசமான கொழுப்பு கட்டிகள் தான் கண்டிப்பாய் பலருக்கு எமனாகிறது.


    இதை கண்டறிய அதிகாலை சாப்பிடாமல் ரத்தம் கொடுத்தால் 1 -3 நாட்கள் வரை லேப் எடுத்து கொள்ளும். அது போக இந்த வகை பரிசோதனைக்கு பெயர் “லிப்பிட் புரஃபைல் டெஸ்ட்” என்பதாகும். இதற்க்கு செலவு 900 ரூபாய் முதல் 2800 வரை வசூலிக்க படுகிறது. இனிமேல் இதெல்லாம் தேவையில்லை.


    ஸ்மார்ட் கார்ட் என்னும் இந்த சிறிய விஷயத்தை ஐஃபோனில் மாட்டி ஒரு துளி வேர்வை / எச்சில் அல்லது ஒரு துளி ரத்ததை இதன் மேல் வைத்தால் உடனுக்குடன் உங்கள் நல்ல கொழுப்பு / கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரை கிளைசிரெட்ஸ் எம்புட்டு என்பதை புட்டு புட்டு வைத்து விடும். வர வர லேபுக்கு மூடு விழா நடத்த வேண்டியது தான் போல. இதை கண்டு பிடித்திருப்பது அமெரிக்காவின் கார்னல் பல்கலைகழகம்ங்கோ.

    0 comments:

    Post a Comment