Wednesday 25 December 2013

Tagged Under: , , , , ,

விருந்து வித் வி.ஐ.பி!

By: Unknown On: 07:16
  • Share The Gag



  • ஆளுமைத் திறன் என்றதும் தகவல் தொடர்புத் திறன், உடல் மொழி, ஆடை நாகரிகம், தனி மனிதப் பண்புகள் ஆகியவற்றை வளர்த்துக்கொள்கிறோம். ஆனால், நம்மில் எத்தனை பேர் உணவு அருந்தும் ‘டேபிள் மேனரிஸம்’ என்பதில் அக்கறை காட்டுகிறோம்? தினமும் மூன்று வேளை உணவருந்தும் பழக்கம்கொண்டவர்கள் நாம். அந்தச் சமயங்களிலும் ஸ்கோர் செய்ய டிப்ஸ் தருகிறார் கோவை காருண்யா பல்கலைக்கழக மேலாண்மைத் துறைப் பேராசிரியர் ஆன்ட்ரூ ஃபிராங்க்ளின் பிரின்ஸ்.

    உணவு மேஜை மீது தட்டு, கரண்டி போன்றவற்றால் ஒலி எழுப்பாதீர்கள். அது அநாகரிகமான பழக்கம்.

    வாய் நிறையச் சாப்பாட்டுடன் பேசாதீர்கள். ஒன்று, பேசிவிட்டுச் சாப்பிடுங்கள். அல்லது, சாப்பிட்டவுடன் பேசுங்கள்.

    உங்கள் உதடுகளை மூடிக்கொண்டு உணவை மெல்லுங்கள்.

    சாப்பாட்டை அள்ளி வாயில் கொட்டிக்கொள்ளாதீர்கள். கொஞ்சமாக, நிதானமாகச் சாப்பிடுங்கள்.

    சாப்பிட்டவுடன் கைகளில் ஒட்டியிருக்கும் உணவுத் துகள்களை நக்குவது, பல்லிடுக்கில் நோண்டுவது போன்றவை அருகில் இருக்கும் யாருக்கும் அருவருப்பை ஏற்படுத்தும்.

    யாரேனும் சாப்பிடும் முன் நீங்கள் சாப்பிடாதீர்கள். நீங்கள் ஏற்பாடு செய்த விருந்தென்றால், உங்கள் விருந்தினர் சாப்பிடத் துவங்கும் வரை நீங்கள் ஆரம்பிக்காதீர்கள். நீங்கள்தான் விருந்தாளி என்றால், அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் இருந்து சிக்னல் வரும் வரை சாப்பிட வேண்டாம்.

    விருந்துகளில் பெண்களுடன் சாப்பிட நேரும்போது, ஆண்கள் அவர்களுக்கு முதலில் பரிமாற வேண்டும்.

    அடிக்கடி மற்றவர்களின் சாப்பாட்டுத் தட்டையோ அல்லது டேபிளையோ கவனிக்காதீர்கள். அது உங்கள் மீது ஒரு கீழ்த்தரமான எண்ணத்தை ஏற்படுத்திவிடும்.

    ஒரே சமயத்தில் நிறைய உணவை உங்கள் தட்டில் கொட்டிக்கொள்ளக் கூடாது. கட்டாயப்படுத்திச் சாப்பிட வைத்தால் ‘ஸாரி’ என்று மென்மையாகத் தவிர்த்துவிடுங்கள்.

    முன் பின் அறிமுகம் இல்லாத இடங்களில் கரண்டி, முள் கரண்டி, கத்தி ஆகியவற்றைப் பயன்படுத்தத் தெரியாமல் அல்லல்பட வேண்டாம்

    0 comments:

    Post a Comment