Sunday 13 July 2014

Tagged Under: ,

அப்போ போட்டோகிராஃபர் இப்போ நடிகர்!

By: Unknown On: 10:44
  • Share The Gag
  • சினிமா வில்லன்களுக்கே உரிய நீளமான முடி, மாவு மெஷினில் ஜல்லி அரைத்தது போன்ற குரல், அச்சுறுத்தும் கண்கள் என 'நான் மகான் அல்ல’வில் இருந்து 'வடகறி’ வரைக்கும் டெரர் முகம் காட்டும் ராமச்சந்திரனிடம் பேசினேன்.

     ''தேனி மாவட்டம் உத்தமபாளையம் பக்கத்தில் இருக்கிற கோம்பைதான் என் ஊர்.  கோயம்புத்தூர்ல சர்வீஸ் இன்ஜினீயரா வேலை பாத்தேன். அப்போ தொழில் விஷயமா மெட்ராஸ¨க்கு வந்தேன். அந்தத் தொழிலை விட்டு சினிமா கத்துக்கிட்டேன்.

    போட்டோகிராஃபி என்னோட ஹாபி. சென்னை வந்த புதுசில் நிறைய புகைப்படப் போட்டிகளில் கலந்துக்கிட்டேன். வெங்கட்ராம், கே.வி.ஆனந்த், ரத்னவேல் இவங்ககிட்டே எல்லாம் பரிசு வாங்கியிருக்கேன். எழுத்தாளர் வசுமித்ரவும் நானும் ரூம்மேட்ஸ். அவர் மூலமா 'கோலங்கள்’ சீரியல் இயக்குநர் திருச்செல்வம் பழக்கமானார். அப்போ நான் கோலங்கள் சீரியலுக்கு ஸ்டில்ஸ் எடுத்துட்டிருந்தேன். திருச்செல்வம்தான் என்னை அசிஸ்டென்ட் டைரக்டரா சேர்த்துக்கிட்டார். அந்த சீரியல்ல நடிச்சேன்.

    அடுத்து  சுசீந்திரனோட 'வெண்ணிலா கபடிக் குழு’ கதை விவாதத்தில் கலந்துக்கிட்டேன். இருந்தாலும் 'நான் மகான் அல்ல'தான் எனக்கு அடையாளத்தைத் தந்தது.

    'நேரம்’ பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனோட 'எலி’ குறும்படத்தில் நடிச்சேன். அதை பாத்துட்டு 'பீட்சா’ டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் சார் என்கிட்ட  பேசினார். 'பீட்சா’ படத்தில் நடிக்க சான்ஸ் கொடுத்தார். ஆனா என்னால அப்போ போக முடியலை. அடுத்து 'பாண்டிய நாடு’ படத்தில் நான் வேலை பாத்துட்டு இருந்தப்போ 'ஜிகர்தண்டா’ படத்துக்காக மறுபடியும் என்னைக் கூப்பிட்டார்.

    அதுல ராசுங்கிற ஒரு நல்ல  கேரக்டர் கொடுத்திருக்கார். என்னை ஒரு நடிகனா பார்த்த ஒரே டைரக்டர்னா, அது கார்த்திக் சுப்புராஜ்தான். பெரும்பாலும் நெகட்டிவ் கேரக்டர் பண்ணிட்டிருக்கிற நான், 'சதுரங்க வேட்டை’ படத்தில் பாசிட்டிவ் ரோலும் பண்ணியிருக்கேன்.

    இந்த மாதிரி ரோல்கள்தான் பண்ணணும்னு லட்சியமெல்லாம் கிடையாது. நடிகன்னா எல்லா கேரக்டரும் பண்ணணும். என்ன நான் சொல்றது?'' என்கிறார்.

    0 comments:

    Post a Comment