Saturday 19 July 2014

Tagged Under: , ,

அனல் பறக்கிறது - சதுரங்க வேட்டை - திரை விமர்சனம்

By: Unknown On: 13:18
  • Share The Gag
  • சதுரங்க ஆட்டத்தில் எதிரில் இருக்கும் அறிவாளியின் ஆசை தூண்டி ஒரு சிப்பாயை வெட்டு கொடுத்து பெரிய காய்யை வெட்டி வீழ்த்துவது போல மக்களின் ஆசையை தூண்டி அவர்களிடம் இருந்து மொத்தமாக வாரிக்கொண்டு ஒடுவதையே தொழிலாக செய்யும் காந்திபாபு (நட்டி என்கிற நட்ராஜ்). அவரது வாழ்க்கையில் வரும் பானு (இஷாரா) எப்படி மாற்றுகிறார், இதனால் காந்திபாபு சந்திக்கும் விளைவு என்ன என்பது ஃக்ளைமேக்ஸ்.

    அபார்ட்மெண்ட் வாடகையிலேயே மாதம் பல லட்சங்களை சம்பாதிக்கும் செட்டியாரருக்கு (இளவரசு) கோடிகளை சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை, (ஒருத்தன ஏமாத்தனும்னா அவனோட ஆசையை தூண்டனும்) என்பது போல் இவரை ஏமாற்றி பல லட்சணங்களை பறித்து கொண்டு ஓடும் காந்திபாபு , அடுத்து மக்கள் சமீபகாலமாக அதிகம் ஏமாந்த எம்.எல்.எம் என்ற கம்பெனியை ஆரம்பித்து மக்களிடம் பொய்யான பொருட்களை வித்து பணம் சம்பாதிக்கிறார். அப்போது அங்கு வேலை கேட்டு வரும் கிராமத்து பெண்ணான பானுவிற்கு வேலை கொடுக்கிறார் (உடனே காதல்னு நினைக்காதீங்க) அப்புறம் எதுக்காக வேலை தராறுனு தான கேக்குறீங்க.

    இவரை வைத்து அந்த பொருட்களை எல்லாம் நாசுக்காக பேசி விற்கிறார், இப்படி இருக்க அங்கு ஆட்களை சேர்த்தவர்களுக்கெல்லாம் கமிஷன் தர பொய்யான செக் கொடுக்கிறார்கள். இதை அறிந்தவர்கள் கம்பெனியை சுற்றி வளைக்க மொத்த பணத்தோடு மறைமுகமாகிறது காந்திபாபு கும்பல்.

    இவர்களை தேடி போலீஸ் அழையும் போது சிக்கிறான் காந்திபாபு, அப்போது தான் தெரிகிறது அவன் மேல் இருக்கும் பல வழக்குகள் எண்ணிக்கையில் அடங்காதவை. சும்மா விடுவாங்களா போலீஸ் வெளுத்து வாங்குகிறது அவனை பணம் எங்கே என்று கேட்டு, ஆனால் துளி கூட வாயயை திறந்து பணம் இருக்கும் இடத்தை சொல்லாத காந்திபாபுக்கு வாய்தா வாய்தா என அதுவே சதமே அடிக்கிறது. (நமக்கு தான் தெரியுமே கோர்ட்க்கு போன வாய்தா வாய்தா) அவன் சம்பாதித்த பணத்தை வைத்து ஜாமினில் எளிதாக வெளியில் வருகிறான்.

    ஜாமினில் வந்தவனை கடத்துகிறது வளவனின் கும்பல், ஏன் இந்த கடத்தல் என்றால் இவனால் பாதிக்கப்பட்ட ஒருவன் வளவனை வைத்து காந்திபாபுவிடன் இழந்த பணத்தை பெறுவதற்காக, ’உன்னை ஏமாத்துரவன் ஒரு வகைல உனக்கு குரு ஏன்னா பிழைக்குற தந்திரத்தை சொல்லிதரான்னு நினைச்சுகோன்னு’ காந்திபாபு சொல்லி வந்த வசனத்தை சொல்லி இவனுக்கு ஆப்பு வைக்கிறார்கள் கூட்டாளிகள், பணத்தை இழந்த வளவன் இவனை கொலை செய்ய முடிவு செய்யும் போது அவர்களின் ஆசையை தூண்டி ஒரு திட்டம் தீட்டுகிறான்.

    அதை செயல்படுத்துவதாக சொல்லி அவர்களிடம் இருந்து தப்பித்து பானுவை கல்யாணம் செய்து கொண்டு கிராமத்தில் திருந்தி வாழ்கிறான். இவனால் ஏமாற்றப்பட்ட அந்த வளவன் இவனை தேடி கிராமத்திற்கு வர அவர்களிடன் இருந்து இவன் தப்பித்தானா..?? பானுவின் நிலைமை என்ன என்பது மீதிக்கதை.

    காந்திபாபுவாக நடித்திருக்கும் நட்டியின் யதார்தமான முகத்தோற்றம், அலட்டிக்கொள்ளாத நடிப்பு, ஏமாற்ற அவன் போடும் திட்டம், அதை செயல்படுத்தும் விதம், டயலாக் டெலிவிரி என அனைத்திலும் அசத்திருக்கும் நட்டிக்கு பாராட்டு கலந்த கைத்தட்டல்கள். அதே போல் கதானாயகியாக நடித்திருக்கும் பானுவின் நடிப்பும் அற்புதம். இளவரசுவின் நடிப்பும், வில்லனின் தூய தமிழும் நமக்கு காமெடியை ஏற்ப்படுத்துகிறது.

    ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் எல்லாம் ஒகே ரகம் தான், பின்னனி இசையில் காட்சியின் விறுவிறுப்பை மெறுகேற்றி இருக்கும் இவருக்கு விசிலே போடலாம்.

    நாம் அனைவரும் பார்த்து ஏமாந்த ஒரு விஷயத்தை கதையாக எடுத்துக்கொண்டு, அதை அற்புதமான, விறுவிறுப்பான திரைக்கதையாக அமைத்திருக்கும் புதுமுக இயக்குனர் வினோத்துக்கு பாராட்டுக்கள் பின்னி எடுத்துடீங்க பாஸூ.

    நடிகர், இயக்குனர் என இருந்த மனோ பாலா இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார், முதல் படத்திலேயே கல்லாவை நிரப்பும் அவருக்கும் வாழ்த்துக்கள். இந்த வருடத்தில் இரண்டு மெகா ஹிட் வெற்றி படங்களை வெளியிட்ட லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இந்த படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றி பெறுவது உறுதி.

    மொத்தத்தில் சதுரங்க ஆட்டத்தை போல மெதுவாக இல்லாமல் சரக்கு ரயில் போல அனல் பறக்கிறது இந்த சதுரங்கவேட்டை.

    0 comments:

    Post a Comment