Sunday 10 August 2014

Tagged Under: ,

வாஷிங் மெஷின்’ செயல்படும் விதம்!--உபயோகமான தகவல்கள்..!

By: Unknown On: 21:08
  • Share The Gag
  • இன்று நடுத்தர வர்க்க வீடுகளிலும் அதிகமாக இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கிறது, `வாஷிங் மெஷின்’ எனப்படும் துணி துவைக்கும் எந்திரம். இது எவ்வாறு செயல்படுகிறது என்று தெரியுமா?

    வாஷிங் மெஷினில் துவைக்க வேண்டிய துணி, பல துளைகள் கொண்ட இரும்பு உருளைக்குள் போடப்படும். இது சுமார் நாலே கால் கிலோ எடையைத் தாங்கக்கூடியது.

    இந்த இரும்பு உருளைக்கு வெளியே மற்றொரு பாத்திரம் உருளையைத் தாங்கும். கதவை மூடிவிட்டு, எலக்ட்ரோ மெக்கானிக்கல் நேரங்காட்டியில் தேவையான நேரத்தை `செட்’ செய்து வைத்துவிட வேண்டும்.

    இந்த எலக்ட்ரோ மெக்கானிக்கல் நேரங்காட்டி, பல்வேறு வேலைகளைச் செய்யும். அதாவது, துணியை நனைப்பது, நீரின் சூட்டை நிலைநிறுத்துவது, அலசப்பட வேண்டிய, பிழியப்பட வேண்டிய அளவு, துணியின் தரத்தைப் பொறுத்து சுழல வேண்டிய நேரத்தைக் கணக்கிடுவது போன்று பல வேலைகள் உண்டு.

    வாஷிங் மெஷினின் பொத்தானை அழுத்தியதும் தண்ணீரானது தானியங்கி வால்வு வழியாகச் செலுத்தப்படும். நீரை நிறுத்திச் செலுத்த ஒரு பிரஷர் சுவிட்ச் உள்ளது. இது சிக்னலை அனுப்பும். பிரஷர் சுவிட்சில் உள்ள டயாபிரம், நீர்மட்டத்தில் உள்ள காற்றின் விசையால் மேலே தள்ளப்படுகிறது. பிறகு மைக்ரோ சுவிட்சு மூலம் தடுக்கப்பட்டு, மின் சுற்று முடிந்து வால்வு மூடிக்கொள்ளும். தண்ணீரின் மட்டம் சில்க், சிந்தெட்டிக் போன்ற வழவழப்பான துணிகளுக்கு அதிகமாகவும், பருத்தி போன்ற முரட்டுத் துணிகளுக்குக் குறைவாகவும் இருக்கும். இந்த நீர்மட்டத்தை குறிப்பாக அதிகரிக்க, குறைக்க மைக்ரோ சுவிட்சுகள் உண்டு.

    சலவை உருளையை உருளச் செய்வதற்கு என்று ஒரு மோட்டார் உள்ளது. இது சலவை செய்ய, காய வைக்க, அலச என்று எல்லாவற்றுக்கும் காரணமாகிறது. 1100 ஆர்.பி.எம். வேகத்தில் இது ஓடும். அலசிப் பிழிந்த தண்ணீரை அகற்ற ஓர் உறிஞ்சும் பம்பு உதவுகிறது. எலக்ட்ரோ மாக்னெட்டின் உதவியால் வேலை ஆரம்பிக்கும்போது கதவு மூடும்.

    வேலை முடிந்ததும் ஆட்டோமேட்டிக்காக கதவு திறக்கவும் செய்யப்படுகிறது. உருளை போன்ற சுழலும் பாகங்களின் இயக்கத்தைச் சமன் செய்து, அதிர்வைக் குறைக்க அதற்கேற்ற ஸ்பிரிங்குகள், அதிர்வுத் தடை உறிஞ்சிகள் உள்ளன.

    0 comments:

    Post a Comment