Monday 18 August 2014

Tagged Under: ,

மக்களே… தெருவில் இறங்கி போராடுங்க! இசைஞானி இளையராஜாவின் பேச்சால் குலுங்கிய ஆன்மீக நகரம்!

By: Unknown On: 07:25
  • Share The Gag
  • அருணகிரி நாதர் அறக்கட்டளை சார்பில் ஆன்மீக இலக்கிய திருவிழா திருவண்ணாமலையில் நடந்தது. ஆறுபதாண்டுகளுக்கு முன் மழையில்லாமல் திருவண்ணாமலை வாடியதாகவும், அப்போது அருணகிரிநாதர் எழுதிய பாடல் இசைக்கப்பட்டு அதற்கப்புறம் மழை வந்து மக்கள் பிழைத்ததாகவும் ஒரு ஐதீகம் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் அதே நாளில் இந்த விழா நடைபெறும். விழா முடிந்ததும் மழை பிய்த்துக் கொண்டு ஊற்றும். இந்த விந்தை கடந்த அறுபதாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறதாம் அங்கே.

    இந்த நிகழ்ச்சிக்கு இந்த வருடம், இசைஞானி இளையராஜா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். எப்போதும் மலையை சுற்றி வந்து வணங்கும் வழக்கம் கொண்டவர் அவர். இந்த முறை பேரதிர்ச்சி காத்திருந்தது அவருக்கு. அந்த ஆன்மீக மலையின் மீது வீடுகளை கட்ட மாநாகராட்சி அனுமதி வழங்கி விட்டதாம். உலகின் மிக முக்கியமான ஆன்மீக தலங்களில் திருவண்ணாமலையும் ஒன்று. சிவனே ஆனந்த சயனத்தில் இருப்பதை போன்ற தோற்றமுடைய அந்த மலையில் ஆங்காங்கே வீடுகள் முளைத்தால் எப்படியிருக்கும்? அதுவும் அந்த மலையை சிவனாக நினைத்து ஒவ்வொரு பவுர்ணமியும் லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்று வழிபட்டுக் கொண்டிருக்கும் போது? அதிர்ச்சியடைந்த இளையராஜா தனது ஆன்மீக சொற்பொழிவுக்கு மத்தியில் இந்த விஷயத்தையும் கையில் எடுத்துக் கொண்டார்.

    உங்கள் ஊரில் இப்படியொரு அநியாயம் நடைபெறுகிறது. இதை யாரும் தட்டிக் கேட்க மாட்டீங்களா? சிவனை சுற்றுகிற பக்தர்கள் இவர்களையும் சுற்றி வணங்க வேண்டுமா? இதை கண்டித்து நீங்களெல்லாம் வீதியில் இறங்கி போராட வேண்டாமா? என்றெல்லாம் அந்த பெரும் கூட்டத்தில் கேள்வி எழுப்ப, ‘ஆமாம்… விட மாட்டோம்’ என்று இசைஞானியின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தார்கள் மக்கள்.

    ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இல்லாத வழக்கம் இப்போது திடீரென தோன்றி புனிதமான ஸ்தலத்தையும் பொழுதுபோக்கு பூங்காவாக்கிவிடக் கூடாது என்பதுதான் பக்தர்களின் கவலை. பூனைக்கு யார் மணி கட்டுவது என்று காத்திருந்தவர்களுக்கு இளையராஜாவின் பேச்சு பெரும் வேகத்தை கொடுத்திருக்கக் கூடும். இசைஞானியின் குரல், இந்நேரம் அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் கேட்டிருந்தால், தானாகவே முன் வந்து சரி செய்துவிடுவதுதான் ஆன்மீகத்தின் மீது நம்பிக்கையுள்ள இந்த அரசுக்கும் நல்லது.

    0 comments:

    Post a Comment