Wednesday 13 August 2014

Tagged Under: ,

மனைவி மீது உங்களுக்கு ‘இன்டரஸ்ட்’ குறைய ஆரம்பிச்சிருச்சா…?

By: Unknown On: 18:25
  • Share The Gag
  • உங்களது கணவர் இப்போதெல்லாம் முன்பு போல உங்களிடம் நெருங்கி வருவதில்லையா…உங்களுடன் அதிக நேரம் செலவிடாமல் ஒதுங்கிப் போகிறாரா… முத்தமிடுவதில்லையே, அன்பு காட்டுவதில்லையா, உங்களை விட்டு விலகிப் போவது போல உணர்கிறீர்களா… இது பல குடும்பங்களில் இன்று அரங்கேறிக் கொண்டிருக்கும் விஷயம்தான்..ஆனால் இதை நீங்கள் தைரியமாக சந்திக்க முன்வர வேண்டும்.

    மீண்டும் உங்கள் பக்கம் உங்களது கணவரைத் திருப்ப முடியும். அதற்கு நம்பிக்கையும், சில மெனக்கெடல்களும் மட்டுமே தேவை.

    முதலில் ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்பதற்கான காரணத்தைப் பார்ப்போம்…

    படுக்கை அறை விளையாட்டில் மனைவியிடமிருந்து போதிய ஈடுபாடு வராமல் போகும்போது ஆண்களுக்கு மனைவி மீதான ஈர்ப்பு குறையலாம். மனைவி தனக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என்ற ஏமாற்றம் அவர்களை மனைவியிடமிருந்து விலகிப் போக உந்தலாம்.

    திருமணத்திற்குப் பிறகு, குழந்தை பெற்ற பிறகு பெரும்பாலான பெண்கள் ஏகத்துக்கும் குண்டடித்து விடுகிறார்கள். இதுவும் கணவர்கள், மனைவியரை விட்டு விலக ஒரு முக்கியக் காரணமாம். பல பேர் அப்படி இல்லை என்றாலும் மெஜாரிட்டி ஆண்களுக்கு மனைவி எப்போதும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம். இப்படி குண்டாக இருக்கும் பெண்களிடம் செக்ஸ் அப்பீல் குறைவதால்தான் அவர்கள் கணவர்கள் பார்வையில் சற்று சலிப்பை ஏற்படுத்துவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    குழந்தை பிறப்புக்குப் பின்னர் பெரும்பாலான பெண்களுக்கு பிறப்புறுப்பு தளர்ந்து, பெரிதாகி விடும். இதனால் உடல் உறவின்போது போதுமான சந்தோஷம் ஆண்களுக்குக் கிடைப்பதில்லை. ஆரம்பத்தில் இருந்ததைப் போல பெண்ணுறுப்பு இறுக்கமாக இல்லாதது பல ஆண்களுக்கு சோர்வைத் தருகிறதாம்.

    கணவர் மோகத்துடன் நெருங்கி வரும்போது பெண்கள் விலகிப் போக ஆரம்பித்தால் அது கணவர்களை அப்செட் ஆக்கி விடுமாம். இதுவும் கூட மனைவியரிடமிருந்து ஆண்கள் நழுவிச் செல்ல ஒரு காரணமாம்.

    பல கணவர்களுக்கு அலுவலக வேலை மண்டையைப் பிய்ப்பதாக இருக்கும். மாங்கு மாங்கென்று வேலை பார்த்து ஆய்ந்து ஓய்ந்து வீடு திரும்புபோதும் பிழியப்பட்ட கரும்பு போல மாறியிருப்பார்கள். எனவே செக்ஸ் மூடு அவர்களை அண்டுவது கடினம். இதுபோன்ற ஆண்களுக்கு செக்ஸ் மீதே ஒரு வெறுப்பு வந்து மனைவியரிடம் நெருங்காமல் தள்ளிப் போக ஆரம்பிப்பார்கள், உறவுகளை தள்ளிப் போடவும் செய்வார்கள்.

    இது சில காரணம்தான், இதையும் தாண்டி பல காரணங்கள் இருக்கலாம். இப்படிப்பட்ட காரணங்களால்தான் கணவர்கள், பெரும்பாலும் மனைவியரை விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கிறார்களாம். உங்க வீட்டுக்காரர் இந்த லிஸ்ட்டில் வருகிறாரா என்று பாருங்கள், வந்தால் உடனே சரி செய்யப் பாருங்கள்…

    0 comments:

    Post a Comment