Thursday 7 August 2014

Tagged Under: ,

பிரசவ வலிக்கு பயந்து குழந்தை பெற்றுகொல்ல்வதை தள்ளிபோடும் பெண்கள் படிக்கவேண்டிய பதிவு !!

By: Unknown On: 17:04
  • Share The Gag
  • பிரசவம்’ என்றாலே அது ஒரு பரவச அனுபவம். ஆனால், அந்த கணநேர வலிக்குப் பயந்தே குழந்தைப் பெற்றுக்கொள்வதைத் தள்ளிப்போடும் பெண்கள் இன்று அதிகரித்து வருகின்றனர். இங்கிலாந்தின் இளவரசியான கேத் மிட்டல்டன் முதல் சாதாரணப் பெண்கள் வரை அனைவரும் வலியில்லா பிரசவத்தையே விரும்புகின்றனர். சமீபத்தில் ஆண் குழந்தைப் பெற்ற இங்கிலாந்து இளவரசி கேத் ‘ஹிப்னோபெர்த்திங்’ (Hypnobirthing)என்ற முறையில் குழந்தை பெற்றதாக செய்திகள் வெளியாயின. ஹாலிவுட் நடிகை ஜெஸிகா ஆல்ஃபா, மிராண்டா கேர் போன்ற பல பிரபலங்கள், இந்த முறையில்தான் குழந்தை பெற்றுள்ளனர்.

    தமிழகத்திலும் ஹிப்னோபெர்த்திங் முறையில் சுகப் பிரசவங்கள் சில நடந்துள்ளன. ஆனால், இதுபற்றிய விழிப்பு உணர்வு இல்லை. தமிழ்நாட்டில் ஹிப்னோபெர்த்திங் தெரப்பிஸ்ட் பயிற்சி பெற்ற ஒரே மருத்துவரான ரேகா சுதர்சனிடம் இதுபற்றிப் பேசினோம். ‘இது ஒரு வித்தியாசமான ஹிப்னாடிசம். தியானம், ஹிப்னாடிஸ் போன்ற முறைகளிலிருந்து வேறுபட்டது. இந்தச் சிகிச்சைமுறையில், கர்ப்பிணியின் மனதை ஒருநிலைப்படுத்தி, அவர்களை தியானம் போன்று ஆழ்ந்த சிந்தனைக்குக் கொண்டுசெல்லாமல், அவர்களுடைய மனசின் வாயிலாக உற்சாகப்படுத்துகிறோம்.

    எட்டாத உயரத்தையும் எட்டவைக்கும் ஏணிதான். நேர்மறையான (Positive thinking)எண்ணங்கள். அந்த பாசிட்டிவ் எண்ணங்களை, பிரசவத்துக்கு எதிர்நோக்கியிருக்கும் கர்ப்பிணியின் மனசில் விதைப்பதுதான் ஹிப்னோபெர்த்திங்கின் முக்கிய நோக்கம். வேதனையோ, சோதனையோ நினைக்க நினைக்கத்தான் அதன் வீரியம் கூடும். பிரசவ நேரத்தில் பயமும், அதனை பற்றிய வேதனையும் மனதில் அதிகமாகும்போது, அது உடம்பில் வலியாக மாறும். இதே மாதிரிதான் பெண்களுக்கு ‘பிரசவ வலி’ என்பது கஷ்டமானது என்று நம்முடைய மக்களை நினைக்கவைத்துள்ளது. அது தவறானது. குழந்தையைப் பெற்றெடுத்த பின் பெண்கள் அடைகின்ற சந்தோஷத்தை, அது வயிற்றில் தவழும்போதே ஹிப்னோபெர்த்திங் மூலம் உணர முடியும்.

    இந்தப் பயிற்சியின் மூலம் பயம் நீங்கிவிடுவதால், பெரும்பாலும் வலி குறைந்துவிடும். இதனால், பிரசவம் என்பது எல்லாப் பெண்களுக்கும் சுகமானதாகவே அமையும். குழந்தை பிறந்த அரை மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்கச் சொல்வார்கள். அப்போது அதிக வலியினால் சில தாய்மார்கள் கஷ்டப்பட்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால், அந்த வலிக்கு முட்டுக்கட்டை போட்டு தாய்மார்களை சந்தோஷப்படவைத்திருக்கும் சிறந்த வலி நிவாரணியாக இந்த ஹிப்னோபெர்த்திங் முறை இருக்கிறது. மேலும், குழந்தை பெற்ற பிறகு, பெண்களுக்கு உண்டாகும் முதுகு வலி, மூட்டு வலி போன்ற அனைத்து உடம்பு வலிகளையும் இது நீக்கிவிடும்.

    ‘சுக’மான பயிற்சி!

    பெண்கள் கருவுற்ற 21-வது வாரத்திலிருந்து 27-வது வாரம் வரை, அந்த நேரத்தில் அவர்களால் செய்யகூடிய உடற்பயிற்சிகள், சுவாசப் பயிற்சிகள் மற்றும் குழந்தை பிறப்பிலிருந்து தாய்ப்பால் கொடுப்பது பற்றிய முழுமையான வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

    28-வது வாரத்திலிருந்து மனதை அமைதியாக்கும் வழிமுறைகள் கற்றுத்தரப்படுகின்றன.மனதில் பாசிட்டிவ் சிந்தனைகளை ஏற்படுத்தும் பயிற்சிகள் 38-வது வாரம் வரை கற்றுத்தரப்படும்.இந்த வகுப்புகள், வாரத்துக்கு ஒருநாள் ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரத்துக்கு எடுக்கப்படும்.

    இந்தப் பயிற்சியில் கணவன்-மனைவி இருவரும் கலந்து கொள்ளவேண்டும். கணவன் கூடவே இருப்பதால், பெண்களுக்கு வலி குறைவதுடன் தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது.

    பிரசவத்தின்போது அதிக உயர் ரத்த அழுத்தம் அல்லது சர்க்கரை நோய் உள்ள பெண்கள் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப் பெற்று, இந்த வகுப்பில் பங்கேற்கலாம்.இரண்டாவது பிரசவத்தைச் சந்திக்கும் பெண்கள்கூட, இந்தப் பயிற்சியை மேற்கொள்வது நல்ல பலனைத் தரும்.

    0 comments:

    Post a Comment