Wednesday 6 August 2014

Tagged Under: ,

வி.ஐ.பி. வீட்டுப்பிள்ளைகளுக்கு மட்டுமே உதவி இயக்குநர் வாய்ப்பு!

By: Unknown On: 08:26
  • Share The Gag
  • கோடம்பாக்கத்தில் ஹீரோ சான்ஸ் கூட சுலபத்தில் கிடைத்துவிடும். உதவி இயக்குநராக வேலைக்கு சேருவதுதான் கஷ்டமோ..கஷ்டம். ஒரு காலத்தில் திறமையை மட்டுமே கருத்தில் கொண்டு உதவி இயக்குநராக சேர்த்துக் கொண்டார்கள் பிரபல இயக்குநர்கள். இப்போதெல்லாம் திறமைக்கு மதிப்பே இல்லை. சம்மந்தப்பட்ட இயக்குநரிடம் அவருக்கு வேண்டியப்பட்டவர்கள் யாராவது சிபாரிசு செய்தால்தான் உதவி இயக்குநராகவே சேர்த்துக்கொள்கிறார்கள். இந்த சூட்சுமம் தெரியாமல் தினமும் இயக்குநர்களின் அலுவலகத்துக்கு படை எடுத்துக்கொண்டும், அவர்களின் அலுவலக வாசலில் மணிக்கணக்கில் நின்று கொண்டும் எத்தனையோ பேர் காலத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    சில இளம் இயக்குநர்கள், தன்னிடம் உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டு வருபவர்களை கேவலமாக நடத்துவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஒரு இயக்குநர் என்ன செய்தார் தெரியுமா? உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்ட வந்தவர்களுக்கு தேர்வு நடத்தினார். அதாவது பரீட்டை வைத்து, கடைசியில் யாரும் பாஸாகவில்லை என்று அனுப்பி வைத்தார். இன்னொரு இளம் இயக்குநர் 100 பேர் வரை இண்டர்வ்யூ வைத்து யாரும் சரியில்லை என்று திருப்பி அனுப்பினார்.

    உதவி இயக்குநர்களை தேர்வு செய்வதில் வெற்றி இயக்குநர், ஒரு பாணியை பின்பற்றி வருகிறார். அதாவது வி.ஐ.பி.வீட்டுப்பிள்ளைகளை மட்டுமே அவர் உதவி இயக்குநராக வைத்துக்கொள்கிறார். இவர்களை வேலைக்கு வைத்தால் சம்பளம் கொடுக்க வேண்டிய தேவையில்லை. இயக்குநர்கள் வசந்த், ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோரது மகன்கள், இசையமைப்பாளர் தரணின் தம்பி என இந்த இயக்குநரிடம் உதவியாளராக உள்ள அனைவருமே வி.ஐ.பி.வீட்டு பிள்ளைகள்தான்.

    0 comments:

    Post a Comment