Tuesday 19 August 2014

Tagged Under: ,

பட்டினியால் மீசை தாடி ..!

By: Unknown On: 18:12
  • Share The Gag
  • பெண்களுக்கு ஒரு வார்த்தை!

    தனது உடலை மெலிய வைத்துக் கொள்வதுதான் அழகு என்று எண்ணிப் பல பெண்கள் பட்டினி கிடக்கிறார்கள். பட்டினி கிடந்தால் உடல் பாரம் குறைகிறதாம். அப்படிகிடந்தால் உடல் பருமன் குறையலாம்; ஆனால் உள்ளபாரம் ஏறிவிடும் நிலை இருக்கிறது.

    ஆம்!

    அதிகப் பட்டினி கிடக்கும் பெண்களுக்கு மீசை முளைக்கிரதாம். ஏன், இன்னும் அதிகமாய் போனால் தாடி கூடத் தலைக் காட்டுமாம். இப்படிப் பட்டினி கிடந்து தன்னை மெலிவாக வைத்துக்கொள்ள விரும்பும் வியாதிக்கு 'அனாரேக்சிய நெர்வோஸா' என்று பெயர்.

    யாராவது தன்னைப் பட்டினி போட்டு வருத்தக் கொள்வார்களா என்றுதானே கேட்கத் தோன்றுகிறது.

    ஆனால் அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேல் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவிலும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் புள்ளி விவரம் கிடைக்கவில்லை.

    விரதம் என்பது வேறு; பட்டினி கிடப்பது என்பது வேறு. அது ஓரிருநாள் விவகாரம். ஆனால் 'அனாரேக்சிய நெர்வோஸா' என்ற மனோவியாதியால் பட்டினி கிடப்பதால் மெலிகின்ற உடல்; உடல் கொழுப்பை இழப்பதனால்; இழந்த வெப்பத்தைச் சமநிலைப்படுத்திக் கொள்வதற்காக உடம்பில் உரோமம் அதிகமாகத் தோன்றச் செய்கிறது என்று சொல்கிறார் ஆங்கில மருத்துவர் ஹூபர்ட் லேசி.

    அதிகமாக உண்டால் உடல் பெருக்கலாம். பட்டினி கிடந்தால் அழகு கெட்டு விடலாம் எனவே அளவோடு உண்பது அனைவர்க்கும் நல்லது.

    0 comments:

    Post a Comment