Monday 25 August 2014

Tagged Under: ,

தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க!

By: Unknown On: 22:00
  • Share The Gag
  • இரவில் நிம்மதியான உறக்கம் வேண்டும் என்பவர்கள் சில உணவுகளை தவிர்க்கவேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கண்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உறக்கம் தொலைந்துவிடும். ஜீரணமாகாத உணவு நெஞ்செரிச்சல்,வயிற்றுப் பொருமல் போன்றவற்றையும் ஏற்படுத்தி இரவு முழுவதும் தூங்கவிடாமல் செய்துவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

    எந்தமாதிரியான உணவுகளை சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

    பழங்கள் வேண்டாம்

    இரவில் பழங்கள் சாப்பிடுவதனால் வாயுத்தொல்லை ஏற்படும் என்கின்றனர். பழங்களில் உள்ள அமிலங்கள் தொந்தரவுகளை ஏற்படுத்திவிடும். ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, பெர்ரீ ஆகிய பழங்களை இரவு நேரத்தில் சாப்பிடுவதை விட பகல்நேரத்தில்தான் சாப்பிடவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

    பீட்ஸா தொடக்கூடாது

    பீட்ஸா என்பது இரவு உணவுக்கு ஏற்றதல்ல. சாஸ், தக்காளி, சீஸ், மைதா போன்றவைகள் கலந்த இத்தாலிய உணவுவகையான பீட்ஸாவை இரவில் சாப்பிட்டால் அது எளிதில் ஜீரணமாகாது. இரவு நேரத்தில் உணவு ஜீரணமாகாத காரணத்தினால்தான் தொப்பை போடும் உடல் குண்டாகும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் கான்ப்ளக்ஸ் போன்ற காலையில் டிபன் உணவுக்கு சாப்பிடுபவைகளை இரவில் சாப்பிடக்கூடாது என்பது நிபுணர்களின் அறிவுரையாகும். தானியங்கள் நிறைந்த அந்த உணவுகளில் தேன் கலந்திருக்கும். அதேபோல் கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிட்டால் உடனே உறங்கப் போகக்கூடாது நடைப்பயிற்சியோ, ஓட்டப்பயிற்சியோ மேற்கொள்ளவேண்டும் இல்லையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.

    மாமிசஉணவுகள்

    இரவுநேரங்களில் அதிக கொழுப்புள்ள மாமிச உணவுகளை உட்கொள்ளக்கூடாது என்பது நிபுணர்களின் அறிவுரையாகும். ரெட்மீட் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் அதிக கொழுப்பு சேர்ந்துவிடும். காலையில் சாப்பிடுதற்கு ஏற்ற அந்த உணவுகளை இரவில் சாப்பிடுவது உகந்ததல்ல. எனவே இரவில் மாமிசம் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள்.

    சாக்லேட் கேண்டி

    இரவில் படுக்கைக்குப் போகும்முன் அதிகம் கேண்டி சாப்பிடவேண்டாம். ஏனேனில் அதில் உள்ள சர்க்கரை அப்படியே ரத்தத்தில் கலக்க வாய்ப்புள்ளது. இதனால் இரவில் தூக்கமிழக்க நேரிடலாம்.
    எனவே இரவு நேரத்தில் நிம்மதியான உறக்கம் வேண்டும் என்பவர்கள். உடல் குண்டாகாமல் டயட்டில் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் மேற்கூறிய உணவுகளை இரவில் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். முயற்சி செய்து பாருங்களேன். ஆழ்ந்த அமைதியான உறக்கம் உங்களுக்கு கிடைக்கும்.

    0 comments:

    Post a Comment