Saturday 6 September 2014

Tagged Under:

தண்ணீரை சுத்தப்படுத்தும் செம்பு, இனி செம்பு சொம்புல தண்ணீ குடிங்க...

By: Unknown On: 19:08
  • Share The Gag
  • பணத்தை வாரி இறைச்சு, தண்ணி சுத்தம் செய்யற கருவிகள் வாங்கறோம்.
    அது ரிப்பேர் ஆக ஒரே பிரச்சனை தான்.

    ஏன் நாம நமது முன்னோர்கள் செஞ்சத இப்படி அலட்சியம் பண்ணிட்டோம்.
    ஆஸ்திரேலியாவிலிருந்து ஆய்வுக்கு வந்துள்ள 3 பேர்களின் அறிக்கைய பாருங்க!

    *உயிர்காக்கும் செம்பு பாத்திரங்கள்**

    செம்பு டம்பளர், செம்பு குடம் அப்படின்னு நாம நீரை  செம்புல வெச்சிருந்தா,
    நீரில் இருக்கிற டைபாய்டு, காலரா, வயிற்று போக்கு போன்ற
    வியாதிகளை தரும் பாக்டீரியாக்களை இந்த செம்பு சாகடிச்சிடுமாம்.

    அந்த நாளில் நம் முன்னோர்கள் நீரை இதிலே தான் பிடித்து வைத்திருந்தனர்.

    * செம்பு தாழ்பாள், கதவு பிடி**

    அதே போல, கிருமிகள் அதிகம் வசிக்கும் இடம் கதவுதான். செம்பு தாழ்பாள், செம்பு கதவு பிடி தான்
    நம்மை பல நோய்களிலிருந்தும் காப்பாற்றும் குணம் கொண்டது.
    செம்பு பாத்திரத்தில் செம்பு 95 சதவீதம் இருக்க வேண்டும் 5 சதவீதம் துத்த நாகம் இருக்கலாம்.
    கலப்படம் இருக்க கூடாது. ‘கலப்படம் இல்லாத செம்பு பாத்திரத்தில்தான் கிருமிகள் வசிக்காது’
    என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.
    செம்புல தண்ணீர் பிடிச்சு, 24 மணி நேரம் கழிச்சு அந்த தண்ணீய குடிக்க வேண்டும்.

    0 comments:

    Post a Comment