Tuesday 28 May 2013

Tagged Under:

ஒரு கம்ப்யூட்டரின் விலை ரூ. 3.5 கோடி - ஆப்பிள்!!!

By: Unknown On: 03:48
  • Share The Gag







  •                 ஆப்பிள் நிறுவனம் தயாரித்த ஒரு கம்ப்யூட்டர், 3.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டிருக்கிறது.



                      1976-ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் முதன்முதலாக தயாரித்த 200 கம்ப்யூட்டர்களில் இதுவும் ஒன்று என்பதுதான் இந்த அதிக விலைக்கு காரணம். 



                              எனினும், இந்த 200 கம்ப்யூட்டர்களில் வேலை செய்யும் நிலையில் உள்ளவை 6 மட்டுமே. அதில் ஒன்றுதான் மூ்ன்றரை கோடி ரூபாய்க்கு விலை போயுள்ளது.










                             ஜெர்மனியைச சேர்ந்த ப்ரெகர் (Breker) என்ற நிறுவனம் நடத்திய ஏலத்தில் ஆசிய கண்டத்தை சேர்ந்த அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத ஒருவர் இந்த கம்ப்யூட்டரை விலைக்கு வாங்கியுள்ளார்.




                         ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை ஸ்டீவ் ஜாப்சுடன் இணைந்து தொடங்கிய வாஸ்னியாக் (Wozniak) இதில் கையெழுத்திட்டுள்ளார் என்பது இதன் கூடுதல் சிறப்பு. 









                       இதுபோன்ற பழமையான ஒரு ஆப்பிள் கம்ப்யூட்டர் கடந்தாண்டு 3 கோடி ரூபாய்க்கு விலை போனது.

    0 comments:

    Post a Comment