Sunday 25 August 2013

Tagged Under:

ஒரே கடிதத்தில் ‘நாசா’ வை கலக்கிய சிறுவன்!

By: Unknown On: 18:11
  • Share The Gag

  • இங்கிலாந்தை சேர்ந்த ஒரு சிறுவன், வருங்காலத்தில் தான் விண்வெளி வீரர் ஆகவேண்டுமென்றால் என்ன செய்யவேண்டுமென ‘நாசா’ மையத்திற்கு கடிதம் எழுதி அசத்தியுள்ளார். 7 வயது சிறுவன் டெக்ஸ்டர், இவருக்கு வருங்காலத்தில் விண்வெளி வீரர் ஆகவேண்டுமென்பதுதான் லட்சியம். இது தொடர்பாக இவர் அண்மையில் அமெரிக்காவின ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். விண்வெளி வீரராகவேண்டுமென்ற ஆர்வத்தை பாராட்டி ‘நாசா’ மையம் இந்த சிறுவனின் கடிதத்திற்கு ஒரு பதிலையும், விண்வெளி புகைப்படங்களையும் அனுப்பியுள்ளது.

    நாசாவிற்கு எழுதிய கடித்தத்தில், அச்சிறுவன், ‘‘அன்புள்ள நாசா, எனது பெயர் டெக்ஸ்டர். நீங்கள் செவ்வாய் கிரகத்துக்கு 2 பேரை அனுப்பப் போவதாக அறிந்தேன். எனக்கும் செவ்வாய் கிரகத்துக்கு செல்ல ஆசையாக உள்ளது. ஆனால் எனக்கு 7 வயது தான் ஆகிறது. எனவே, நான் வருங்காலத்தில் விண்வெளிக்கு செல்ல ஆசைப்படுகிறேன். நான் ஒரு விண்வெளி வீரர் ஆக என்ன செய்ய வேண்டும்?” எனக் கேட்டிருந்தார். இதற்கு பதிலதித்த நாசா, சிறுவனை ஊக்கப்படுத்தும் விதத்தில் பதிலளித்திருந்தது. இது டெக்ஸ்டரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    Parents News, Boy Mars Letter, Boy Nasa Mars, Boy Nasa Mars Letter, Dexter Nasa Mars, Dexter Nasa Mars Letter, Katrina Anderson, Nasa Mars Letter, Photos, Parents News

    இதுக்குறித்து தெரிவித்த டெக்ஸ்டரின் தாய் கத்ரினா, டெக்ஸ்டரின் ஆர்வத்திற்கு ‘நாசா’அளித்துள்ள பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த கடிதத்தை பிரித்து படித்ததும் டெக்ஸ்டர் மகிழ்ச்சி அடைந்தான். அங்கிருந்து அனுப்பப்பட்ட புகைப்படங்களை தனது அறையில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான் எனக் கூறினார்

    0 comments:

    Post a Comment