Saturday 31 August 2013

Tagged Under:

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள டெக்னிகல் பணி வாய்ப்பு!

By: Unknown On: 20:53
  • Share The Gag



  • மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் பார்க் (பி.ஏ.ஆர்.சி.,) என்ற பெயரால் நம்மால் அதிகமாக அறியப்படுகிறது. பாபா அடாமிக் ரிசர்ச் சென்டர் சர்வ தேச அளவில் நியூக்ளியர் ரிசர்ச் துறையில் அறியப்படுகிறது. இந்த மையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள டெக்னிகல் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

    பிரிவுகளும் காலி இடங்களும்: பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பிளாண்ட் ஆப்பரேட்டர் பிரிவில் 69ம், லேபரட்டரி பிரிவில் 41ம், லைப்ரரி சயின்ஸ் பிரிவில் 4ம், கெமிக்கல் பிளாண்ட் ஆப்பரேட்டர் பிரிவில் 7ம், பிட்டர் பிரிவில் 17ம், மில் ரைட் பிரிவில் 3ம், மெஷினிஸ்ட் பிரிவில் 13ம், வெல்டரில் 9ம், டர்னரில் 4ம், ஏ.சி., மெக்கானிக்கில் 24ம், இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 7ம், எலக்ட்ரிகலில் 61ம், எலக்ட்ரானிக்ஸில் 9ம், மெக்கானிகல் டிராப்ட்ஸ்மேனில் 10ம், சி.என்.சி., ஆபரேட்டரில் 1ம் காலி இடங்கள் உள்ளன.

    31 - vazhikatti bhabha


    தகுதிகள்: பார்க் நிறுவனத்தின் மேற்கண்ட காலி இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 22 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி கல்வித்தகுதி மாறுபடும் என்ற போதும் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் ப்ளஸ்டூ படிப்பு முடித்திருக்க வேண்டும். இதன் பின்னர் தொடர்புடைய துறையில் என்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற தகுதி தேவைப்படும். எனவே சரியான தேவைகளை இணையதத்திலிருந்து அறியவும். 

    இதர அம்சங்கள்: பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இந்தப் பதவிக்கு மாதம் ரு.6 ஆயிரத்து 200 ஸ்டைபண்டாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு அடிப்படையில் இந்தப் பணி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்படுபவர்கள் பிணைய அடிப்படையில் பணி புரிய வேண்டியிருக்கும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்-லைன் முறையிலேயே தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். முதலில் பின்வரும் இணையதளத்திற்கு சென்று முழுமையான விபரங்களை அறிந்து அதன் பின்னரே விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும். 

    விண்ணப்பிக்க இறுதி நாள் : 10.09.2013 

    இணையதள முகவரி : http://www.barc.gov.in/

    0 comments:

    Post a Comment