Wednesday 18 September 2013

Tagged Under: ,

துாக்க மாத்திரை இல்லாமலே நிம்மதியான தூக்கத்தை தரும் மல்லிகை...

By: Unknown On: 08:01
  • Share The Gag

  • News Service


     

















    சிலர் எப்போது பார்த்தாலும், ஒருவித டென்சனுடன் காணப்படுவார்கள். அத்தகைய டென்சன் ஏற்படும் போது, அதனை குறைப்பதற்கு எத்தனையோ வழிகளைக் கையாள்வார்கள். சிலர் உணவுகள், பானங்கள் சாப்பிடுவது, வெளியே செல்வது என்பனவற்றை மேற்கொள்வார்கள். சிலர் நறுமணங்கள் மூலம் சரிசெய்வார்கள். அந்த ஒரு பிரச்சனையால் மட்டும் அனைவரும் பாதிக்கப்படவில்லை. இது போன்ற பல்வேறு பிரச்சனைகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகையவற்றிற்கு ஒருவகையான தீர்வு என்னவென்று பார்த்தால், அது ஒருசிலப் பொருட்களின் நறுமணங்கள் தான். மேலும் அனைத்து நறுமணங்களும் அனைவருக்குமே பிடிக்கும் என்று சொல்ல முடியாது. உதாரணமாக, பெட்ரோல் வாசனை சிலருக்கு பிடிக்கும், சிலர் அதனை வெறுப்பார்கள்.


    ஆனால் ஒருசில பொருட்களின் வாசனையை பிடிக்காது என்று யாரும் சொல்லமுடியாது. அவ்வாறு உள்ள பொருட்களின் வாசனை, சோர்வு, மயக்கம், மனஅழுத்தம், தூக்கமின்மை, இரத்த அழுத்தம், தெளிவற்ற மனம் போன்ற பல பிரச்சனைகளை சரிசெய்யும். இப்போது அந்த மாதிரியான உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் வாசனைப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

    காபி

    உண்மையில் காப்பியின் சுவையை விட, அதன் நறுமணம் மிகவும் அருமையாக இருக்கும். மேலும் அதன் நறுமணமே உடலில் ஏற்படும் சோர்வை நீக்கி, அதிக புத்துணர்ச்சியை தரும்.

    லாவெண்டர்

    லாவெண்டரின் மணமானது டென்சனால் ஏற்படும் மனஅழுத்தத்தை குறைக்கும் தன்மையுடையது. எனவே அதிகமாக டென்சன் அடையும் போது, அப்போது லாவெண்டர் எண்ணெயை தலைக்கு தடவி, ஊற வைத்தால், மனம் அமைதியடையும்.

    சிட்ரஸ்

    சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் நறுமணத்தை நுகர்ந்து பார்த்தால், குமட்டல் வருவதை தடுக்கும். மேலும் இந்த நறுமணம் மனதிற்கு ஒருவித சந்தோஷத்தை தரும்.

    யூகலிப்டஸ்

    அதிகமான குளிர்ச்சியினால், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகல் போன்றவை இருந்தால், அதனை சரிசெய்ய, 2 துளிகள் யூகலிப்டஸ் எண்ணெயை சிறு துணியில் விட்டு, அதனை அவ்வப்போது நுகர வேண்டும்.

    மல்லிகை

    தூக்கம் சரியாக வரவில்லையா? அதற்கு தூக்க மாத்திரை போடாமல், மல்லிகையை நுகர்ந்தால், நல்ல அமைதியான மற்றும் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

    புதினா

    புதினாவின் நறுமணம் புத்துணர்ச்சி மற்றும் தெளிவான மனதை தரும். மேலும் இதன் மணமானது படிக்கும் குழந்தைகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் அவற்றை படிக்கும் போது நுகர்ந்தால், படிப்பில் அதிக ஆர்வம் ஏற்படும்.

    ரோஜா

    இரவில் தூங்கும் போது மனம் வருத்தத்தால், கெட்ட கனவுகள் வருகிறதா? அப்படியெனில் இரவில் தூங்கப் போகும் போது, ரோஜாவை நுகர்ந்து பார்த்து, மனம் அமைதியடைந்து, இரவில் நல்ல இனிமையான கனவுகள் வரும்.

    சாக்லேட்

    சாக்லேட்டின் நறுமணத்தை நுகர்ந்து பார்த்தால், உடலில் உள்ள வலியானது பறந்து போய்விடும். அதிலும் மனஅழுத்தத்தினால் தசைப்பிடிப்பு ஏற்பட்டிருந்தால் அப்போது சிறிது சாக்லேட்டை நுகர்ந்து பாருங்கள்.

    சந்தனம்

    சந்தனம் என்று சொன்னாலே, அது மனமை அமைதிப்படுத்தும் என்று நன்கு தெரிகிறது. எனவே தெளிவாக மனம் மற்றும் ஆர்வத்தை அதிகப்படுத்த, இந்த பொருள் சிறந்தது.

    குங்குமப்பூ

    பெண்களுக்கு ஒரு நல்ல செய்தி. அது என்னவென்றால், மாதவிடாய் வருவதற்கு முன்னர், பெண்கள் ஒருவித மனஅழுத்தத்திற்கு உள்ளாவார்கள். ஆகவே அத்தகைய மனஅழுத்தத்தை போக்க குங்குமப்பூவை நுகர்ந்தால், தவிர்க்கலாம்.

      

    0 comments:

    Post a Comment