Wednesday 11 September 2013

Tagged Under:

இலவச மொபைல்போன், கம்ப்யூட்டர்கள்: தொலை தொடர்பு ஆணையம் அனுமதி!

By: Unknown On: 20:50
  • Share The Gag



  • கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கு, இலவச மொபைல் போன்கள், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச டேப்லெட் கம்ப்யூட்டர்களை வழங்குவதற்கு, தொலைதொடர்பு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்கள், 2.5 கோடி பேருக்கு, மொபைல் போன்கள் வழங்கவும், அரசு பள்ளிகளில் படிக்கும், பிளஸ்-2 மாணவர்கள், 90 லட்சம் பேருக்கு, டேப்லெட் கம்ப்யூட்டர்கள் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இத் திட்டம், அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்கு முன், துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து, தொலைதொடர்பு துறையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பான தொலை தொடர்பு ஆணையம் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இறுதியில் இத் திட்டத்திற்கு ஆணையம் ஒப்புதல் வழங்கியது. இது விரைவில், மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பபடும் என தொலை தொடர்பு துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

    மொபைல் போன் மற்றும் டேப்லெட் கம்ப்யூட்டர்கள், மூன்றாண்டு உத்தரவாதம் கொண்டவை. மொபைல் போன்கள், முதலாண்டு, 25 லட்சம் பேருக்கும், இரண்டாம் ஆண்டு, 50 லட்சம் பேருக்கும், மூன்றாண்டாம் ஆண்டு, 75 லட்சம் பேருக்கும், நான்காம் ஆண்டு, ஒரு கோடி பேருக்கும் என நான்கு கட்டமாக வழங்கப்பட உள்ளது. அதே போல், கம்ப்யூட்டர்கள் மூன்று கட்டமாக வழங்கப்பட உள்ளன.

    0 comments:

    Post a Comment