Monday 16 September 2013

Tagged Under: , ,

எச்.ஐ.வி.,யை அழிக்க புதிய மருந்து: அமெரிக்க ஆய்வாளர்கள் சாதனை!

By: Unknown On: 07:33
  • Share The Gag





  • அமெரிக்க ஆய்வாளர்கள், எச்.ஐ.வி., வைரசை அழிக்கும், புதிய மருந்துப் பொருளை, கண்டுபிடித்து உள்ளனர்.


    எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான, எச்.ஐ.வி., வைரசை அழிப்பதில், மருத்துவர்களும், மருந்துப் பொருள் தயாரிப்பாளர்களும், இன்னும் தங்கள் ஆய்வில், 100 சதவீத வெற்றியை அடையவில்லை என்றே கூறலாம். அமெரிக்காவில் உள்ள, மின்னிசோட்டா பல்கலைக்கழக மருந்துப்பொருள் தயாரிப்புத் துறை ஆய்வாளர்கள், எச்.ஐ.வி., வைரசை அழிக்கும் மருந்துப் பொருளைக் கண்டுபிடிக்கும் ஆய்வில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களின் ஆராய்ச்சியின் பலனாக, எச்.ஐ.வி.,யைக் கட்டுப்படுத்தும், இரு திரவ மருந்துகளின் கலவையில் புதிய மருந்துப் பொருளைக் கண்டுபிடித்து உள்ளனர்.


    ஆய்வாளர்கள், தங்கள் ஆய்வுக் கட்டுரையில் கூறியுள்ளதாவது: புற்று நோயைக் கட்டுப்படுத்த, "டெசிடேபைன், கெம்சிடேபைன்' என்ற இரு திரவ மருந்துப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்துப் பொருட்கள், எச்.ஐ.வி., வைரசை அழிக்கும் ஆற்றலையும் பெற்றுள்ளன. இந்த மருந்துகள், நோயாளிகளுக்கு, ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இதனால், பெரும் நேர விரயமும், பொருட் செலவும் ஏற்படுகிறது.




     இந்த சிகிச்சை பெறும் நோயாளிகள், சிகிச்சை முடியும் வரை, எவ்வித வேலையிலும் ஈடுபட முடியாமல், படுக்கையிலேயே இருக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால், இந்த இரு மருந்துப் பொருட்களையும் ஒன்றாக்கி, மாத்திரை வடிவில் புதிய மருந்துப் பொருள் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், நோயாளிகளின், பொருள் மற்றும் நேரம் மிச்சப்படுத்தப்படும். எனினும், முதற்கட்ட சோதனைகளுக்குப் பின்னரே, நோயாளிகளுக்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்படும். புதிதாக உருவாக்கப் பட்டுள்ள மருந்து, சோதனையில் வெற்றி பெற்றால், எய்ட்ஸ் நோய்க்கான மருந்துப் பொருள் தயாரிக்கும் ஆராய்ச்சியில் இந்த கண்டுபிடிப்பு ஒரு மைல் கல்லாய் அமையும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    0 comments:

    Post a Comment