Monday 16 September 2013

Tagged Under: ,

ஹெட்போன் மூலம் இலவச மின்சாரம்!

By: Unknown On: 20:59
  • Share The Gag


  • செல்பேசிகள் மற்றும் எம்பி3 பிளேயர்களில் கேட்பதற்குப் பயன்படும் ஹெட்போன் மூலம் சூரியசக்தி மின்சாரம் தயாரித்து, அவற்றின் மின் தேவையை நிறைவு செய்யலாம் என்று புதிய ஆராய்ச்சி சொல்கிறது. இந்த புதிய கண்டுபிடிப்பு 2014-ம் ஆண்டு விற்பனைக்கு வரலாம்.


    ஹெட்போனின் இரண்டு பக்கங்களின் மேற்பரப்பில் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் மின்கலங்கள் பொறுத்தப்பட்டிருக்கும். இந்த ஹெட்போன்களை மாட்டிக்கொண்டு நீங்கள் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தால், உங்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் மின்சாரம் உற்பத்தி ஆகிக் கொண்டிருக்கும் என்கிறார் இதைக் கண்டுபிடித்த பிரிட்டனைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஆண்டர்சன்.


    ஏற்கெனவே அமெரிக்காவில் மனிதர்கள் நடப்பதை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் கருவி விற்பனையில் உள்ளது. மனிதர்களின் காலணிக்குள் இருக்கும் இந்த சின்னஞ்சிறு கருவி, நடக்கும்போது ஏற்படும் அழுத்தத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிறது.


    இந்தச் சிறப்புக் காலணிகளை அணிந்துகொண்டு ஒருவர் இரண்டரை கிலோமீட்டர் முதல் ஐந்து கிலோ மீட்டர் நடந்தால் ஐபோனை சார்ஜ் செய்யமுடியும்.


    உலக அளவில் மாற்று மின்சாரத்தின் தேவை குறித்த விழிப்புணர்வு அதிகரித்துவரும் நிலையில், இது போன்ற வித்தியாசமான கண்டுபிடிப்புகளுக்கான மதிப்பும் கூடி வருகிறது.


    0 comments:

    Post a Comment