Wednesday 9 October 2013

Tagged Under: , ,

வேதியியல் துறையில் 3 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு!

By: Unknown On: 22:47
  • Share The Gag

















  • வேதியியலுக்கான நோபல் பரிசு 3 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் மார்டின் கார்பிளஸ், மைக்கேல் லெவிட், ஏரி வால்ஷெல் ஆவார்கள். ரூ.7.75 கோடி ரொக்கப்பரிசை 3 பேரும் பகிர்ந்து கொள்கிறார்கள்.மூலக்கூறு வடிவமைப்பு மாதிரி ஆராய்ச்சிக்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    இது தொடர்பாக நோபல் பரிசு வழங்குகிற ராயல் சுவிடிஸ் அறிவியல் அகாடமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘‘மார்டின் கார்பிளஸ், மைக்கேல் லெவிட், ஏரி வால்ஷெல் ஆகிய 3 விஞ்ஞானிகளும் ரசாயன செயல்பாடுகளை புரிந்து கொள்ளவும், யூகிக்கவும் பயன்படுகிற விதத்தில் கணினிகளை மேம்படுத்த அஸ்திவாரம் போட்டுள்ளனர்; நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கிற கணினி மாதிரிகள், ரசாயன துறையில் முன்னேற்றங்கள் காண்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன’’ என கூறப்பட்டுள்ளது.

    0 comments:

    Post a Comment