Tuesday 8 October 2013

Tagged Under:

பெட்ரோலில் இயங்கும் இயந்திரங்களை டீசலில் இயக்க முடியாது ஏன்?

By: Unknown On: 12:27
  • Share The Gag

  • பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களைக் கொண்டு இயங்கும் இரு இயந்திரங்களும் ஒரே மாதிரியானவை தான். இருப்பினும் இரண்டும் வெவ்வேறு வடிவ அமைப்புகளைக் கொண்டவை. ஒவ்வொரு எரிபொருளும் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் தான் எரியத் துவங்கும். இதனைப் பற்றல் வெப்பநிலை என்பர். இது பெட்ரோலுக்குக் குறைவாகவும், டீசலுக்கு மிகுதியாகவும் தேவைப்படும். 
     
     


     
     
    அடுத்து பெட்ரோல் இயந்திரத்தில் எரிபொருள்-காற்றுக் கலவையைப் பற்றவைக்கும் செயலை மேற்கொள்வது தீப்பொறிச்செருகி ஆகும். மேலும், இவற்றில் எரிபொருள்-காற்றுக் கலவையைப் பற்ற வைப்பதற்கு முன்னால் தேவைப்படும் அழுத்த அளவு அதாவது அழுத்த விகிதம் குறைவு. இந்நிலையில், பெட்ரோல் இயந்திரத்தில் டீசலை எரிபொருளாகப் பயன்படுத்தும்போது பற்ற வைக்கும் வெப்பநிலை போதுமான அளவு இல்லாத காரணத்தால் எரிபொருள் பற்றவே பற்றாது. 


     
     
    அடுத்து டீசல் இயந்திரத்தில், பெட்ரோல் இயந்திரத்தில் இருப்பது போல் தீப்பொறிச்செருகி கிடையாது. இங்கு எரிபொருள் பற்றவைப்பு மிகுந்த அழுத்தத்தின் விளைவாக நடைபெறும். இவ்வாறு பெட்ரோல், டீசல் இயந்திரங்களுக்கு இடையேயுள்ள வடிவமைப்பு வேறுபாட்டினாலும், பற்றவைப்பு வெப்பநிலை வேறுபாட்டினாலும் பெட்ரோலுக்குப் பதிலாக டீசலையோ, டீசலுக்குப் பதிலாகப் பெட்ரோலையோ பயன்படுத்த இயலாது.


    0 comments:

    Post a Comment