Friday 11 October 2013

Tagged Under: ,

அமைதிக்கான நோபல் பரிசு!

By: Unknown On: 17:43
  • Share The Gag

  • 2013ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு O.P.C.W அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. நார்வே தலைமையகம் ஓஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசை பெற O.P.C.W அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, நோபல் பரிசு தேர்வுக்குழு அறிவித்தது. O.P.C.W அமைப்பு என்பது ரசாயன ஆயுதங்களை தடை செய்யும் அமைப்பு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசானது பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.7.70 கோடி ரொக்கப் பரிசு ஆகியவற்றைக் கொண்டதாகும்.

    11 - nobel pease winner

     


    இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகளைத் தொடர்ந்து இன்று அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயின் ஆஸ்லோ நகரில் அறிவிக்கப்பட்டது.

     
    இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ரசாயன ஆயுத தடுப்பு அமைப்புக்கு (ஓ.பி.சி.டபுள்யூ) வழங்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது. ரசாயன ஆயுதங்களை ஒழிப்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.


    நெதர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்த ரசாயன ஆயுத தடுப்பு அமைப்பில் 190 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பு 1997ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. ஐ.நா.வுடன் இணைந்து பணியாற்றும் இந்த அமைப்பின் ரசாயன ஆயுத ஒழிப்பு குழுவினர், தற்போது சிரியாவில் ரசாயன ஆயுத ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


    Nobel Peace Prize 2013:

    ******************************************
     

    The weapons watchdog the Organisation for the Prohibition of Chemical Weapons has been announced as the winner of the Nobel Peace Prize 2013.

    0 comments:

    Post a Comment