Friday 11 October 2013

Tagged Under: ,

இன்னொருவர் வங்கி கணக்கில் பணம் செலுத்தணுமா? அப்ப இதைப் படிங்க!

By: Unknown On: 10:46
  • Share The Gag

  • வங்கிகள்  தங்கள் வாடிக்கையாளர் குறித்த உண்மை விவரங்களை வைத்திருப்பதுடன்  முறைகேடான பண பரிமாற்றத்தை தடுக்க கவனமாக செயல்பட வேண்டும்’ என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதை பின்பற்றி பல வங்கிகள் புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்த துவங்கியுள்ளன
    இப்போதெல்லாம் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் லஞ்ச பணத்தை தருவோரிடம் தங்கள் உறவினர் பெயரில் டிபாசிட் செய்ய சொல்கின்றனர். 


    பின்னர் சி.பி.ஐ.,அல்லது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையின் போது பணம் செலுத்திய நபரின் விவரங்களை வங்கிகளிடம் கேட்கின்றனர். எனவே தான் வங்கி வாடிக்கையாளராக இல்லாதோர் வங்கி வாடிக்கையாளர் கணக்கில் பணம் செலுத்தும் போது அடையாள ஆவணங்கள் வாங்கப்படுகின்றன. இதன் மூலம் முறைகேடான பண பரிமாற்றம் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.


    முதல் கட்டமாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.,) அதன் வாடிக்கையாளராக இல்லாதவர்கள் வெளியூரில் உள்ள அதன் வாடிக்கையாளருக்கு பணம் செலுத்தும் போது அந்த நபரின் விவரங்களை அறியும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர் கணக்கில் பணம் செலுத்துவோர் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஏதேனும், ஒரு அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் வங்கியில் வழங்கப்படும்,


    11 - money rupee

     



    அந்த கிரீன் ரெமிட் கார்டு’ விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். பின் வங்கியில் இருந்து ‘கிரீன் ரெமிட் கார்டு’ என்ற கார்டு வழங்கப்படுகிறது. இதற்கு தற்போது 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு கார்டு மூலம் ஒருவர் கணக்கில் மட்டுமே பணம் செலுத்த முடியும். அதிலும் ஒரு மாதத்திற்கு ஒருவர் கணக்கில் அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தலாம். இதற்காக எஸ்.பி.ஐ. கிளைகளில் தனி கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு வரவேற்பு காணப்பட்டாலும், பணம் செலுத்த வழங்கப்படும் ‘கிரீன் ரெமிட் கார்டு’க்கு கட்டணம் வாங்காமல் இலவசமாக வழங்குவதுடன் பொது மக்களிடம் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    Know about Green Channel Counter of SBI


    *************************


    State Bank of India has started ‘Green Channel Counter’ on 1st July, 2010, at 57 Pilot branches across the country, as an innovative step towards paperless ‘Green Banking’ for deposit, withdrawal and remittance transactions. Based on the Customers favourable response, this initiative has now been rolled out to more number of branches.


    0 comments:

    Post a Comment