Wednesday 2 October 2013

Tagged Under:

அமெரிக்காவின் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இந்தியா பகிர்ந்துகொள்கிறது!

By: Unknown On: 22:12
  • Share The Gag
  • அமெரிக்காவின் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இந்தியா பகிர்ந்துகொள்கிறது



    அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளின் வட்டத்தில் இந்தியா இருக்கிறது. அமெரிக்கா, தனது பாதுகாப்பு தொழில்நுட்பங்களை அதன் நெருங்கிய நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள ஒத்துக்கொண்டுள்ளது.

    ஐ.நா. பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்ற இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், இந்திய அமெரிக்க உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் வர்த்தக அடிப்படையில் இல்லாமல், பாதுகாப்பு துறையில் உற்பத்தி மற்றும் மேம்பாட்டில் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

    இந்நிலையில், அமெரிக்கா இராணுவத்தலைமையகமான பெண்டகன் அதன் 10 பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள ஒத்துக்கொண்டிருப்பதாக இந்திய தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் குறித்து இந்திய தரப்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும்,  விரைவில் அந்த தொழில் நுட்பங்களை இந்தியா ஏற்றுக்கொள்ளும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தியாவுடன் அடுத்தடுத்து பகிர்ந்துகொள்வதற்கான புதிய தொழில்நுட்பங்களை கண்டறியவும் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

    நெருங்கிய நட்பு நாடுகளின் வட்டத்தில் இந்தியா கொண்டுவரப்பட்டுள்ளதை உறுதிபடுத்திய அமெரிக்க துணை ராணுவ மந்திரி அஷ்டன் கார்டர், ஒபாமா நிர்வாகம் இப்பொழுது குரூப்-8 நாடுகளின் பட்டியிலில் இந்தியாவை இணைத்துள்ளது என்று கூறினார். இந்த நாடுகள் பாதுகாப்பு தொழில் நுட்பங்களை வணிக நோக்கில் அல்லாமல் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    0 comments:

    Post a Comment