Friday 8 November 2013

Tagged Under: ,

வாழ்வை மாற்றும் 10 வாக்கியங்கள்

By: Unknown On: 20:07
  • Share The Gag
  • அடுத்து வரும் வாக்கியங்கள் வாசிக்க மட்டுமல்ல. யோசிப்பதற்காகவும் கூட. அவற்றைப் புரிந்து கொண்டால் பார்வை விரியும். பார்வை விரிந்தால் பாதை தெரியும்.


    1.பணிவு

    பணிவு எப்போதும் தோற்றதில்லை; பயம் ஒருபோதும் வென்றதில்லை


    2.கல்வி

    தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்; வெற்றியின் போது அதை நினைவில் வைத்துக் கொள்


    3.படைப்பு

    காற்றால் நிரம்பிய வானத்திலும் கல்லாய் இறுகிய பாறையிலும் எதுவும் விளைவதில்லை


    4.படிப்பு

    யோசிக்க வைக்காத புத்தகம் உபயோகமில்லாத காகிதம்


    5.தேடல்:

    பேணி வளர்க்க வேண்டிய உறவுகள் மூன்று

    உங்களுக்கும் மனதிற்குமான உறவு;

    உங்களுக்கும் உலகிற்குமான உறவு;

    உங்களுக்கும் கடவுளுக்குமான உறவு


    6..இலக்கு

    நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருப்பவர்கள் நிலவை ரசிக்கத் தவறிவிடுகிறார்கள்


    7.முயற்சி

    பனி பெய்து குடம் நிரம்பாது. கோஷங்கள் மட்டுமே லட்சியங்களை வென்றெடுக்காது


    8.சாதனை

    மைல் கற்கள் பயணிப்பதில்லை சாதனைகளைக் கடப்பதுவே சாதனை


    9. எதிர்காலம்

    எதிர்காலத்தை நம்புங்கள்; எறும்புகள் கூட சேமிக்கின்றன


    10.நாளை

    நாளை என்பது இன்று துவங்குகிறது.

    0 comments:

    Post a Comment