Sunday 3 November 2013

Tagged Under:

க்ரிஷ்-3 – திரை விமர்சனம்!

By: Unknown On: 00:47
  • Share The Gag
  • மும்பையில் வாழும் ஹிருத்திக் ரோஷன் மனநலம் குன்றியவராக இருக்கிறார். பெரியவனாக வளர்ந்தபின்னும் மனதளவில் அவர் குழந்தையாகவே இருக்கிறார். இந்நிலையில், விண்வெளியில் இருந்து பூமிக்கு வரும் வேற்றுக்கிரக வாசிகள் இவருக்கு ஒரு அதீத சக்தியை கொடுத்துவிட்டு செல்கின்றனர். இதனால், இவருடைய மூளை அதிக சக்தி பெற்று அறிவார்ந்தவராக மாறுகிறார்.

    இதையடுத்து, அவருக்கு திருமணமாகிறது. இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. இந்நிலையில் ஆராய்ச்சிக்காக ஹிருத்திக் ரோஷனை அவருடைய தந்தை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றுவிடுகிறார். மும்பையில் அவரது குழந்தை ஹிருத்திக் ரோஷனாகவே வளர்கிறது.

    அதிக சக்தி கொண்ட இக்குழந்தை க்ரிஷ் ஆக உருவெடுக்கிறான். இந்நிலையில், சிங்கப்பூர் சென்ற அப்பா ஹிருத்திக் ரோஷன் டி.என்.ஏ.விலிருந்து ஒரு குழந்தையை ஆராய்ச்சிக்காக அவருடைய அப்பா உருவாக்குகிறார். இது முழுமையாக வெற்றியடையாமல் கை, கால் செயலிழந்து, மூளை மட்டும் அதீத வளர்ச்சியுடன் வளர்கிறது. இவர்தான் விவேக் ஓபராய்.

    இந்நிலையில், தனது அதிக சக்தி படைத்த மூளையினால் விவேக் ஓபராய், செயலிழந்த தன்னுடைய கை, கால்களை செம்மைப்படுத்த பல ஆராய்ச்சிகளை செய்கிறார். இதனால், மிருகமும், மனிதனும் கலந்த மனிதர்கள் நான்கு பேரை உருவாக்குகிறார். அதில் ஒருவர்தான் கங்கனா ரனாவத்.

    தன்னுடைய ஆராய்ச்சியில் உருவாக்கிய மனிதர்கள் மூலம் விஷக்கிருமிகளை நாடு முழுவதும் பரப்பி, அதற்கு மாற்று மருந்து தயாரித்து அதன்மூலம் பணத்தை சம்பாதிக்க முடிவு பண்ணுகிறார் விவேக் ஓபராய். இதனால் மக்கள் பல பேர் உயிரிழக்க நேரிடுகிறது. இதற்கு காரணம் விவேக் ஓபராய்தான் என்பதை கண்டறியும் கிரிஷ், விவேக் ஓபராயை அழித்து மக்களைக் காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

    ஹிருத்திக் ரோஷன் முந்தைய படங்களில் நடித்ததைவிட இந்த படத்தில் ரொம்பவும் ஆக்ரோஷமாக நடித்துள்ளார். இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். மனைவியிடம் அன்பு காட்டும் சிறந்த கணவனாகவும், மகன்மீது பாசம் காட்டும் பண்புள்ள தந்தையாகவும், மக்கள் மீது பரிவு காட்டும் க்ரிஷாகவும் ஜொலித்திருக்கிறார். இவருடைய உடலமைப்பு ஹாலிவுட்டுக்கு இணையான நாயகன் என்பதை வெளிக்காட்டுகிறது.

    கங்கனா ரனாவத், பிரியங்கா சோப்ரா, விவேக் ஓபராய் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கின்றனர். குறிப்பாக விவேக் ஓபராய், கங்கனா ரனாவத் ஆகியோரின் திறமையான நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.

    இயக்குனர் ராகேஷ் ரோஷன் திறமையான கதையமைப்பில் உருவான இப்படம் ஆங்கிலப் படத்துக்கு விட்டிருக்கும் சவால். படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அமைந்த விதம் அருமை. ஹாலிவுட் தரத்துக்கு இணையாக படத்தை எடுத்திருக்கிறார். திரைக்கதையிலும் விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார்.

    மொத்தத்தில் ‘க்ரிஷ்-3’ தீபாவளி டிரீட்.

    0 comments:

    Post a Comment