Thursday 28 November 2013

Tagged Under: , , ,

விடா முயற்சி..!

By: Unknown On: 23:48
  • Share The Gag

  • "எப்போதும் தோற்காதவர்கள் யாரெனில், எப்போதும் முயற்சி செய்யாதவர்களே" - இந்தக் கருத்தைப் பற்றி பார்ப்போம்.

    என்னிடம் ஒரு வெற்றியாளரைக் காண்பியுங்கள் 'ஒரே இரவில் வெற்றி' என்பது எவ்வளவு போலியானது என்று நான் காண்பிக்கிறேன்.  ஒவ்வொரு வெற்றியாளனும் தோற்க துணிந்தால்தான் வெற்றி பெறுகிறான்.  பின்வரும் சம்பவங்களைக் கவனியுங்கள்.

    இரண்டாம் உலகிப்போரின்போது டொயோட்டோ மோட்டார் கார்ப்பரேஷனில் பொறியாளர் வேலைக்கு நடந்த இன்டர்வியூவில் சொயிசிரோ தேறவில்லை.  ஆனாலும் அவர்நம்பிக்கை இழக்கவில்லை.  ஹோண்டா நிறுவனத்தை ஆரம்பித்தார்.

    கவர்ச்சியாக இல்லை என்று டிவென்டியெத் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தால் அவர் நிராகரிக்கப்படார். பல ஆண்டுகள் கழித்து மர்லின் மன்றோ எல்லோரும் நேசிக்கும் ஹாலிவுட் நடிகையாக விளங்கப்போகிறார் என்று ஃபாக்ஸுக்குத் தெரியவில்லை.
    அவருடைய இசை ஆசிரியர் 'இசையமைப்பாளராக நீ ஜெயிக்க முடியாது' என்று கூறினார். பித்தோவனின் இசை இன்றும் வாழ்கிறது.

    இவர்கள் அனைவருமே உலகத்துக்கு ஒரு விஷயத்தை நிரூபித்தார்கள்.  உங்கள் மீது நம்பிக்கை இருந்தால், உலகம் என்னதான் சொன்னாலும், உங்களால் முடியும் என்று நம்புகிற விஷயத்தைத் தொடர்ந்துவிடா முயற்சியோடு செய்தால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.  வெற்றிகரமான மனிதர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு என்பது பலமில்லாதது அல்ல.  அறிவில்லாதது அல்ல, ஆனால் விடாமுயற்சி இன்மைதான்.

    உங்களுக்கு நிறைய வேட்கை இருக்கலாம்.  ஒவ்வொரு முறையும் மிகச் சிறப்பாக செயல்படலாம்.  ஆனால் நீண்ட காலத்தில் இதற்கு எந்த மதிப்பும் இல்லை. ஒவ்வொரு முறையும் முடிந்த அளவுக்கு சின்சியராகச் செயல்படுவதே முக்கியம்.  அப்போதுதான் நீங்கள் மிக நன்றாகத் தீட்டப்பட்ட வைரமாக இருக்க முடியும்.  தீட்டப்படுவது என்பதற்கு அர்த்தம், கடின உழைப்பு.

    0 comments:

    Post a Comment