Saturday 9 November 2013

Tagged Under: , , ,

ஜிமெயிலில் விளம்பரங்களை தடுப்பது எப்படி!

By: Unknown On: 16:56
  • Share The Gag
  • ஜிமெயிலை பயன்படுத்தும் போது இன்பாக்சில் தோன்றும் விளம்பரங்களை சகித்து கொள்ள வேண்டும் ,அல்லது கண்டும் காணாமல் இருந்தாக வேண்டும். இதைத்தவிர வேறு வழியில்லையா? இருக்கிறது!.

    ஜிமெயிலில் கூகுலால் தோன்றச்செய்யும் விளம்பரங்களை தடுப்பது சாத்தியம் தான் தெரியுமா? இதற்கு மூன்று சுலபமான வழிகள் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறது டெக்ரிசார்ட்ஸ் இணையதளம்.
    முதல் வழி மிகவும் சுலபமானது. அதாவது எச்.எடி.எம்.எல் வடிவத்தற்கு மாறிவிடுவது. ஜிமெயிலை எச்.டி.எம்.எல் வடிவில் பார்க்கும் வசதி தொடர்பான குறிப்பை நீங்களே கூட அடிக்கடி பார்த்திருக்கலாம். இண்டெர்நெட் இணைப்பின் வேகம் போதுமானதாக இல்லாத நிலையில், மெயிலின் பக்கங்கள் விரைவாக டவுன்லோடு ஆக, இப்படி எச்.டி.எம்.எல் வடிவத்தை பயன்படுத்தி கொள்ளலாம். வழக்கமான கிராபிக்கஸ் மற்றும் கூடுதல் அம்சங்கள் இல்லாமல் மெயிலின் அடிப்படையான விஷயங்களை மற்றும் எச்.டி.எம்.எல் வடிவில் பார்க்க முடியும்.

    இந்த வசதியை எத்தனை பேர் பயன்படுத்தியிருப்போம் என்று தெரியவில்லை. இந்த முறையில் மெயிலை அணுகும் போது எதிர்பாராத இன்னொரு அணுகூலம் இருக்கிறது. ஆம் எச்.டி.எம்.எல் வடிவில் பார்க்கும் போது விளம்பரங்கள் அதில் தோன்றாது. இதற்கான வசதி வலது மூளையில் இருக்கும். இந்த வசதியை தேர்வு செய்து கொண்டால் கூகுல் விளம்பரங்களில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் ஒன்று , அரட்டை வசதி, குறுஞ்செய்தி வசதி போன்றவையும் இருக்காது.

    மாறாக, ஜிமெயிலின் எல்லா அம்சங்களும் வேண்டும்,ஆனால் விளம்பரங்களில் இருந்தும் தப்பிக்க வேண்டும் என நினைத்தால் அதற்கும் வழி இருக்கிறது. மெயில் பெட்டியில் விளம்பரங்கள் தோன்றும் போது அதன் அருகிலேயே, ஏன் இந்த விளம்பரம் , என்று ஓய் திஸ் கொலவெறி போல கேட்கப்படுவதை பார்த்திருக்கிறீர்களா ? அதில் கிளிக் செய்தால் விளம்பரங்களுக்கான தேர்வு நிர்வாகம் வரும் .அதில் விளம்பரம் வேண்டாம் என்று கிளிக் செய்தால் விளம்பரங்களை தடுத்து விடலாம். ஆனால் இந்த முறையில் 500 விளம்பரங்கள் வரை தான் தடுக்க முடியும்.

    விளம்பரமே முற்றிலும் வேண்டாம் என நினைத்தால், பயர்பாக்ஸ் உலாவியில் உள்ள விளம்பரங்களை தடுப்பதற்கான நீட்சி வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.

    https://addons.mozilla.org/en-US/firefox/addon/adblock-plus/

    0 comments:

    Post a Comment