Sunday 24 November 2013

Tagged Under: , , ,

மருதாணியின் மருத்துவக் குணம்!

By: Unknown On: 16:49
  • Share The Gag

  •  சிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல் காணப்படும். இதற்கு நல்ல கை மருத்துவம் உள்ளது.

    மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர்த்து அரைத்து பூசி வர விரைவில் கருந்தேமல் மறையும்.

    சில பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு, வெள்ளைப்பாடு ஆகியவை குணமாக, மருதாணி இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு பசும்பாலில் கலந்து இருவேளை வீதம் 3 நாட்கள் சாப்பிட்டால் விரைவில் குணம் கிடைக்கும்.

    ஆனால், இதனை உண்ணும் போது உணவில் புளியை சேர்த்துக் கொள்ளக் கூடாது.

    உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில் குணமாகும்.

    இதேப்போல காலில் ஆணி ஏற்பட்டவர்கள் அந்த இடத்தில் நசுக்கிய பூண்டை வைத்துக் கட்டி வந்தாலும் குணம் கிடைக்கும்.

    0 comments:

    Post a Comment