Sunday 22 December 2013

Tagged Under:

வர்மக்கலை! அதிசயம்!

By: Unknown On: 00:27
  • Share The Gag



  • வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது. டிராகன் டி. ஜெய்ராஜ் அவர்களின் வர்மக்கலை மர்மங்கள் 108 விளக்கப் படங்களுடன் இக் கலையை விளக்குகின்றது.


    வர்மம் என்றால் என்ன?

    உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே வர்மம் எனப்படும். உடல் சீராக இயங்குவதற்காக உடலின் 108 இடங்களில் நின்று இயங்கும் உயிர்நிலைகளே வர்மங்கள் எனப்படும். அதாவது உயிர்நிலைகளின் ஓட்டம் எனக் கூறுவர்.


    குண்டலினியும் வர்மக்கலையும்


    வர்மக்கலை பயில்பவர் முதலில் குண்டலினி யோக முறைகளைப் பற்றி அறிந்து வைத்திருத்தல் வேண்டும். குண்டலினி யோகம் மனித உடலின் 7 சக்கரங்களைப் பற்றியே கூறுகிறது. ஆனால் வர்மக்கலை 108 சக்கரங்களைப் பற்றிக் கூறுகிறது.


    வர்மத்தின் அதிசயங்கள்

    வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ, மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு

        * ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் வர்மக்கலையில் இருப்பது போல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.


        * வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் இரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.


        * ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவுமுறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.


        * ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.


        * நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும்.


        * மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.

    0 comments:

    Post a Comment