Monday 16 December 2013

Tagged Under: , , ,

ஸ்மார்ட்போனின் அப்டேட்டை விரலில் அலர்ட் அனுப்பும் ‘ஸ்மார்டி ரிங்’

By: Unknown On: 19:36
  • Share The Gag



  • இப்போதைய அவசரயுகத்தில் மொபைல் ரிங்டோனை எல்லாம் கவனிக்க நேரமில்லாமல் அவ்வப்போது நம்முடைய முக்கியமான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை(text) மிஸ் பண்ணி விடுகிறோம். இதைக் கவனத்தில் கொண்டு ஒரு புதிய ப்ளூடூத் செயல்படுத்தப்பட்ட வியரபுள்(wearable) மோதிரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பயனர்கள்(users) தங்கள் விரலில் இருந்து ஸ்மார்ட்போனின் இன்கம்மிங் அழைப்புகளை அலர்ட் செய்யவும் மற்றும் அதனை மேனேஜ் செய்யவும் அனுமதிக்கிறது.


    பயனர்கள் மொபைல் அப்ளிக்கேஷனில் இருந்து இந்த ஸ்மார்டி ரிங் என்று அழைக்கப்படும் கேஜெட்டின் செட்டிங்களை(settings) மேனேஜ் செய்ய முடியும் மற்றும் வாட்ச், டைமர், அல்லது ஃபோன் தேடல் என்று சாதனத்தை பயன்படுத்தவும் முடியும். பயனர்கள் அவரது ஃபோன் இருக்கும் இடத்திலிருந்து 30-க்கும் மேற்பட்ட அடி கடந்து செல்லும் போது, அவருக்கு பின்னால் ஏதோ விட்டு போய் விட்டார் என்று மோதிரம் அவரை எச்சரிக்கை பீப் செய்து நினைவுப்படுத்தும் .


    இதையெல்லாம் விட முக்கியமாக இந்த கேஜெட் குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல் செய்திகளை அலர்ட் செய்யவும் மற்றும் இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் அழைப்புகளின் அறிவிப்புகளையும் பயனர்களுக்கு அப்டேட் செய்து கொண்டே தக்க வைத்திருக்கும். மேலும் இது பேஸ்புக், ட்விட்டர், ஹேங்கவுட் – ஸ்கைபில் இருந்து ரியல் டைமின் அப்டேட்களையும் கொடுக்கிறது. இந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் 24 மணி நேர பேட்டரி ஆயுள் கொண்டுள்ளது. இது ப்ளூடூத் 4.0 திறன்களையும், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனம் ஆகிய இரண்டுக்கும் இணக்கத்தன்மை கொண்டதாக உள்ளது.


    0 comments:

    Post a Comment