Sunday 8 December 2013

Tagged Under:

குற்றவாளிகளும் கோடீஸ்வரர்களும் நிறைந்த மாநிலங்களவை!

By: Unknown On: 14:02
  • Share The Gag


  • மாநிலங்களவை உறுப்பினர்களில் 38 எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 15 பேர் கொடூர குற்றங்களுக்கான வழக்குகள் உள்ளது என்றும் இதில் 67 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் எனவும் ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு என்ற தன்னார்வ அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்பிக்கள் உள்ளனர். இவர்களில் 12 பேர் நியமன உறுப்பினர்கள். 6 இடங்கள் காலியாக உள்ளன. எஞ்சியுள்ள 227 எம்பிக்களின் சொத்து மதிப்பு மற்றும் குற்ற பின்னணி குறித்த விவரங்களை ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு என்ற தன்னார்வ அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தமுள்ள 227 எம்பிக்களில் 67 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். இவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 20 கோடி. காங்கிரஸ் எம்பிக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 16.74 கோடி. இதற்கு அடுத்தபடியாக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்பிக்களின் சராசரி மதிப்பு ரூ. 13.82 கோடி.


    பாஜ எம்பிக்களின் சொத்து மதிப்பு ரூ. 8.51 கோடி. ராஜ்யசபா எம்பிக்களில் மிகப்பெரும் செல்வந்தராக இருப்பவர் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த மகேந்திர பிரசாத். இவருக்கு ரூ. 683 கோடி மதிப்புக்கு சொத்து உள்ளது. இவருக்கு அடுத்தபடியாக கர்நாடகாவை சேர்ந்த சுயேட்சை எம்பி விஜய் மல்லய்யாவுக்கு ரூ. 615 கோடி சொத்து உள்ளது. சமாஜ்வாடி உறுப்பினரும் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சனுக்கு ரூ. 493 கோடி சொத்து இருக்கிறது. 38 எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 15 பேர் கொடூர குற்றங்களுக்கான வழக்குகள் உள்ளது.

    0 comments:

    Post a Comment