Monday 28 July 2014

Tagged Under: ,

நீங்கள் பால் கொடுக்கும் போது கோபப்பட்டால் அந்த பாலே குழந்தைகளுக்கு விஷமாகி விடுமாம்..!

By: Unknown On: 21:33
  • Share The Gag
  • கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள் அந்த பாலையே நஞ்சாக்கி, குழந்தை இறக்கும் வாய்ப்பை கூட ஏற்படுத்துகிறதாம். எனவே தாய்மார்கள் பாலூட்டும் போது அமைதியான சூழ்நிலையில் தாய்ப்பாலுட்ட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

    கோபம் என்பது ஒரு உணர்வு. எரிச்சல், மனக்கடுப்பு, வருத்தம், சீற்றம், ஆத்திரம், ஆவேசம், பெரும்சினம் இவை எல்லாம் கோபத்தின் பெருவகைகள். கோபம் என்பது ஒரு சில இடங்களில் அவசியம்தான் அதேசமயம் எதற்கெடுத்தாலும் கோபம், எப்போதும் கோபம் என்று இருக்கக் கூடாது.

    கோபம் ஏற்படும் போது மனதை அமைதியாக வைத்திருக்க பழகவேண்டும். கோபம் வரக்கூடாது. வந்தாலும்கூட நீண்ட நேரம் இருக்கக் கூடாது. அவ்வாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கோபம் உடனே மறைந்து விட வேண்டும். திரும்ப திரும்ப பேசியதைப் பேசி கேட்பவரையும் கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்று தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடாது. கோபம் உடலில் பல கெடுதல்களை ஏற்படுத்துகிறது.

    கோபத்தோடு தன் குழந்தைக்கு தாய்பால் அந்த கோப உணர்ச்சியானது பாலையே நஞ்சாக்கிவிடுமாம்.கோபத்தினால் நம்முடைய சக்தி வீணாகிறது. நரம்பு மண்டலம் முழுவதும் சீர்குலைகிறது. உடல் பதறுகிறது. உடலில் சோர்வு ஏற்படுகிறது. மறுபடியும் உடல் தன்னிலைக்கு வர பல மணி நேரங்கள் ஆகின்றன. எனவே உங்கள் உடலை நோய்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ளவும்.

    தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கவும் கோபம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். கோபம் வரும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் நம்முடைய மூச்சுக்காற்றை கவனிக்க வேண்டும். மூச்சு உள்ளே போவதையும், வெளியே வருவதையும் சில நிமிடங்கள் கவனித்து வந்தீர்களானால் கோபம் வராது வந்தாலும் அடங்கிவிடும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் கோபத்தை கட்டுப்படுத்த தியானம் சிறந்த வழி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

    0 comments:

    Post a Comment