Tuesday 22 July 2014

Tagged Under: , ,

ஒண்ணுமே இல்ல..! ‘இருக்கு ஆனா இல்ல’ - திரைவிமர்சனம்!

By: Unknown On: 08:08
  • Share The Gag

  • என்ஜினியரிங் முடித்து ஒரு ஐ,டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் நாயகன் விவாந்த். யாரிடமும் சகஜமாக பழகாத இவருக்கு ஒரேயொரு நண்பனாக ஆதவன். இவர்களுடன் நாயகி மனிஷா ஸ்ரீயும் அதே கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    வாழ்க்கையில் எவ்வித சுவாரஸ்யம் இல்லாமலும், எந்தவொரு பிடிப்பும் இல்லாத நாயகன் நண்பனுடன் சேர்ந்து தினமும் குடியும், கும்மாளமுமாக இருக்கிறார்.

    ஒருநாள் நாயகன் பாரில் தண்ணியடித்துவிட்டு பைக்கில் தனிமையில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது ஒரு லாரி இவரின் பைக்கையும், அருகில் சென்ற ஆட்டோவையும் உரசி விபத்து ஏற்படுத்திவிட்டு சென்றுவிடுகிறது.

    இதில் ஆட்டோ கவிழ்ந்துவிடுகிறது. அதில் பயணம் செய்த மற்றொரு நாயகி ஈடன் சம்பவ இடத்திலேயே இறந்துபோகிறாள். இதைப் பார்த்ததும் நாயகன், அங்கிருந்து வீட்டுக்கு கிளம்பி போய்விடுகிறார். வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் இவர் அருகில் யாரோ படுத்திருப்பதுபோல் உணர்கிறார்.

    இதனால் பயந்துபோய் வீட்டுக்கு வெளியே வந்து படுத்து தூங்கி விடுகிறார். மறுநாள் அவரது வீட்டுக்கு வரும் ஆதவனிடம் நடந்தவற்றை கூறும் போது அவன் நாயகனிடம் இதெல்லாம் பொய் என்று கூறுகிறான்.

    மறுநாளும் அதே போல் ஒரு உருவம் தன் கூடவே உலாவுவது போல் தோன்றுகிறது நாயகனுக்கு. இதனால் பயந்து போன அவன், மறுநாள் ஆதவனை அழைத்துக் கொண்டு மனோதத்துவ டாக்டரான ஒய்.ஜி.மகேந்திரனிடம் செல்கிறான். அவர் பேய் இருப்பதெல்லாம் உண்மை தான். நிறைவேறாத ஆசைகளுடன் இறக்கின்ற ஆன்மாக்கள் பேயாக நம் கூடவே பயணம் செய்யும் என்று அவர்களிடம் விளக்குகிறார்.

    நாயகனுடைய கண்ணுக்கு மட்டுமே தெரியும் அந்த ஆவி, அவனிடம் பேச்சுக் கொடுக்கிறது. அது, இறந்துபோய்விட்டதால் நான் யாரென்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய வீட்டில் உள்ளவர்கள் யாரென்றும் தெரியவில்லை.

    ஆகையால், அவர்களை கண்டுபிடித்துக் கொடுத்தால் உன்னை விட்டு சென்றுவிடுவேன் என்று கூறுகிறது. இதை ஒய்.ஜி.மகேந்திரனிடம் சென்று நாயகனும் ஆதவனும் சொல்கிறார்கள். அவரும் அந்த ஆவியின் ஆசையை நீ நிறைவேற்றிவிட்டால் அது உன்னை விட்டு சென்றுவிடும் என்று கூறுகிறார்.

    அதன்படி, ஆவியின் ஆசையை நிறைவேற்ற அவளுடைய வீட்டு முகவரியை தேடி அலைகிறான் நாயகன். அப்போது, இரட்டை குழந்தைகளில் இறந்து போன ஈடனின் அக்காவான மற்றொரு ஈடன் ஆஸ்பத்திரியில் கோமா நிலையில் இருப்பதை கண்டுபிடிக்கிறான். இந்நிலையில், நாயகன் வேலை செய்யும் கம்பெனியில் அவனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வருகிறது.

    ஆனால், ஈடனின் அக்காவுக்கு வேண்டிய உதவிகளை செய்வதற்காக அந்த வாய்ப்பை உதறித் தள்ளுகிறான். இதற்கிடையில், ஈடனின் அக்காவுடைய இருதயத்தை எடுத்து மற்றொருவருக்கு பொருத்த அந்த மருத்துவமனையின் டாக்டர் நினைக்கிறார்.

    இறுதியில், நாயகன் அந்த மருத்துவரின் திட்டத்தை முறியடித்தாரா? ஈடனின் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றி வைத்தாரா? என்பதே மீதிக்கதை.

    நாயகன் விவாந்த் புதுமுகமாக இருந்தாலும் சில இடங்களில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சில இடங்களில் இவர் பேசும்போது நடிகர் ஜெய்யை நினைவுபடுத்துகிறார். அப்பாவித்தனமான முகத்தோற்றத்தில் பளிச்சிடுகிறார். ஈடன் படம் முழுக்க ஆவியாக வந்தாலும் அழகாக இருக்கிறார்.

    படம் ஆரம்பித்தவுடனேயே இவர் இறந்துவிடுவதால் படத்தில் நடிக்க ரொம்பவும் வாய்ப்பு குறைவு. எமோஷனலான காட்சியில் நடிக்க கொஞ்சம் திணறியிருக்கிறார். ஆதவன் முழு நீள காமெடியனாக வந்து போயிருக்கிறார். மனிஷா ஸ்ரீ ஒருசில காட்சிகளே வந்தாலும் பளிச்சிடுகிறார். ஒய்.ஜி.மகேந்திரன் மனோதத்துவ மருத்துவராக மனதில் பதிகிறார்.

    விறுவிறுப்பு இல்லாத காட்சிகளாக படத்தை இயக்குனர் எடுத்திருப்பதால் படம் ரொம்ப நீளமாக இருப்பதுபோல் தெரிகிறது. ஷமீர் இசையில் பாடல்கள் பரவாயில்லை.

    பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பாடல் காட்சிகளில் மட்டும் கிரிஷ் ஏ.சந்தரின் ஒளிப்பதிவு பளிச்சிடுகிறது.

    மொத்தத்தில் ‘இருக்கு ஆனா இல்ல’ ஒண்ணுமே இல்ல.

    0 comments:

    Post a Comment