Wednesday 20 August 2014

Tagged Under: ,

கடும் சிக்கலில் கத்தி, புலிப்பார்வை… ஒன்று திரண்ட 65 தலைவர்கள்

By: Unknown On: 09:12
  • Share The Gag
  • சர்ச்சைக்குரிய புலிப் பார்வை மற்றும் கத்தி திரைப்படங்களை வெளியிடக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் தனியரசு எம்.எல்.ஏ, புலவர் புலமைப்பித்தன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலர் கோவை ராமகிருட்டிணன் உட்பட 65க்கும் மேற்பட்ட இயக்கங்களின் தலைவர்கள் இணைந்து போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

    சென்னையில் தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள், மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் 65 பேர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா, கொங்கு இளைஞர் பேரவையின் எம்.எல்.ஏ தனியரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, முன்னாள் எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலர் கோவை ராமகிருட்டிணன், கூடங்குளம் அணு உலை இயக்க எதிர்ப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன், தமிழ்த் தேசப் பேரியக்கத்தின் பெ. மணியரசன், தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் தியாகு, திராவிடர் விடுதலை கழகத்தின் தபசி குமரன், புதுச்சேரி மீனவர் வேங்கைகள் அமைப்பின் மங்கையர்செல்வன், தமிழ்ப் புலிகள் திருவள்ளுவன், திராவிட முன்னேற்ற மக்கள் கழகத்தின் ஞானசேகரன், மே 17 இயக்கத்தின் திருமுருகன், இளந்தமிழகம் இயக்கத்தின் செந்தில்குமார், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் பொழிலன் என மொத்தம் 65 அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    இந்தக் கூட்டத்தில் கத்தி, புலிப்பார்வை ஆகிய திரைப்படங்களை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று முதல் கட்டமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையும் மீறி கத்தி, புலிப்பார்வை திரைப்படத்தை வெளியிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 65 அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடி ஆலோசித்து போராட்ட அறிவிப்பை வெளியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

    இதையடுத்து கத்தி புலிப்பார்வை திரைப்படம் சம்பந்தப்பட்டவர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள். எதிர்ப்பது வெறும் மாணவர் அமைப்புதானே என்று முன்பு அலட்சியம் காட்டிய அவ்விரு பட தயாரிப்பாளர்களும், இந்த 65 பேர் கொண்ட மாபெரும் போராட்டக்குழுவை எப்படி சமாளிப்பது என்று குழம்பி போயிருக்கிறார்களாம்.

    0 comments:

    Post a Comment