Wednesday 20 August 2014

Tagged Under: ,

வீட்டு உணவுகளே விஷமாகிறது - ஜாக்கிரதை !

By: Unknown On: 10:33
  • Share The Gag
  • வித்தியாசமான உணவை, ருசியாக சாப்பிட எல்லோரும் விரும்பத்தான் செய்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் அந்த சுவை மிகுந்த உணவே விஷமாகி, உடலை கடுமையாக பாதித்துவிடுகிறது. பெரும்பாலும் வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகள் உடலுக்கு ஏற்புடையதாக இருக்கிறது.

    எந்தெந்த உணவுகள் நமது உடலுக்கு ஏற்றதாக இருக்குமோ, அதில் நமக்கு பிடித்த மசாலாக்கள் சேர்த்து சமைப்பதால் வீட்டு உணவுகள் பெரும்பாலும் உடலுக்கு பிரச்சினை தராததாக இருக்கிறது. வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகள் சிறந்ததாக இருந்தாலும், அது முழு ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும் என்றால், அதிலும் கவனிக்கவேண்டிய விஷயங்கள் சில உண்டு.

    * காய்கறிகளை நன்றாக கழுவவேண்டும். நன்றாக கழுவாவிட்டால் அதில் அழுக்கும், பயன்படுத்தப்பட்ட பூச்சி மருந்துகளின் தாக்கமும் இருக்கும். அதனால் பெயரளவுக்கு கழுவாமல் நன்றாக கழுவவேண்டும். காய்கறிகளை சிறிது நேரம் மஞ்சள் தூள், உப்பு கலந்த நீரில் போட்டுவைத்துவிட்டு பின்பு கழுவி, நறுக்குங்கள். அவ்வாறு செய்தால் பூச்சிக் கொல்லி மருந்துகளால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் அகன்றுவிடும்.

    * வேலைக்கு போகும் அவசரத்திலோ, பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் அவசரத்திலோ காய்கறிகளை சுத்தம் செய்து சமைக்காதீர்கள். அதை சாப்பிடும்போது குறிப்பாக உங்கள் குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்படலாம்.

    * பெரும்பாலான சாலையோரக் கடைகள் தூய்மையாக இருப்பதில்லை. அவர்கள் தரமான உணவுப் பொருட்களை வாங்கி, சுகாதாரமாக உணவுகள் தயாரிப்பதும் இல்லை. பழைய உணவுகளையும் வழங்கிவிடுகிறார்கள். அது விஷத்தன்மை கொண்டதாகிவிடுகிறது.

    * எண்ணெய்யில் பொரிக்கப்படும் உணவு வகைகள் வாய்க்கு ருசியாக இருந்தாலும் வயிற்றுக்கு தொந்தரவாகவும், ஆரோக்கியத்திற்கு கெடுதியாகவும் மாறிவிடுகிறது. ஏற்கனவே பொரித்த எண்ணெய்யில் மீண்டும் மீண்டும் சமைப்பதால் ஏற்படும் விளைவு மிக மோசமானது.

    * சாலையோர கடைகளில் பஜ்ஜி, பக்கோடா, சமோசா போன்றவை அமோகமாக விற்பனை யாகிறது. பொரித்துக்கொண்டே இருக்கும் போது, எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும்போது ஒருசில கடைகளில், பாலிதீன் கவரில் இருக்கும் எண்ணெய்யை, வெட்டி அதன் உள்ளே ஊற்றுவதற்கு பதில், ஏற்கனவே கொதித்துக்கொண்டிருக்கும் எண்ணெய்யில் பாக்கெட்டின் ஓரத்தை அப்படியே காட்டிவிடுகிறார்கள்.

    பாலிதீன் கவர் உருகி எண்ணெய் உள்ளே பாய்கிறது. பாலிதீன் எண்ணெய்யில் கலப்பதும், அதை மக்கள் வாங்கி சுவைப்பதும் திகிலான விஷயம். ஆபத்தான நோய்களை இது உருவாக்கும். இது மட்டுமல்ல, இதுபோன்ற ஆபத்தான அதிரடி வேலைகள் பலவற்றை சாலையோர கடைகளில் செய்கிறார்கள்.

    * உயர்ரக ஓட்டல்களில் மக்கள் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். வாடிக்கையாளர்களின் தேவைக்காக அங்கே கோழி, மீன் போன்றவைகளை பதப்படுத்திவைத்திருக்கிறார்கள். அவைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் சமைத்திடவேண்டும்.

    சமைத்ததை அதிகம் தாமதிக்காமல் வாடிக்கையாளர்கள் சாப்பிடவும் வேண்டும். ஒருசில ஓட்டல்களில் காலங் கடந்த உணவுகளில் வாசனைப் பொருட்களை கலந்து புதியதுபோல் வழங்கிவிடுகிறார்கள். அதுவும் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.

    * கீரை வகைகளை சமைக்கும்போது குறிப்பிட்ட நேரம் வரை அதை வேகவிட வேண்டும். குறைந்த நேரமே வேகவைத்து அவசரமாக சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல.

    0 comments:

    Post a Comment