Tuesday 12 August 2014

Tagged Under: ,

விஷாலை சீண்டுகிறாரா சூர்யா? ஒரு பரபரப்பு பெருமூச்சு!

By: Unknown On: 06:54
  • Share The Gag
  • ‘உங்க கடையில இந்த மருந்து இல்லையா? சரி… விடுங்க. பக்கத்துல எங்க கிடைக்கும்?’ இப்படி ஏதாவது ஒரு மருந்து கடையில் கேட்டுப் பாருங்களேன். கடைக்காரர் அருகாமையில் இருக்கிற கடையை காட்டவே மாட்டார். ‘அதுவா, நாலு கிலோ மீட்டர் தள்ளிப் போனா ஒரு கடை இருக்கு. அங்க கிடைக்கும்’ என்று அனுப்பி வைப்பார். ஒருவகையில் இது தொழில் பாதுகாப்பு. அருகாமையிலிருக்கிற கடையை காட்டிவிட்டால், வாடிக்கையாளர் அதற்கப்புறம் அங்கேயே செல்ல நேரிட்டால்?

    சினிமாவிலும் அப்படியெல்லாம் பாதுகாப்புகள் உண்டு. ‘கோச்சடையான்’ படம் வெளியாகிற தேதிக்கு முன்னாலேயே ‘லிங்கா’ படம் டிசைன் செய்யப்பட்டு விட்டது. ஆனால் ‘கோச்சடையான்’ வெளியீட்டுக்காக காத்திருந்தார் ரஜினி. படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் போதுதான் ‘லிங்கா’ பட அறிவிப்பு வெளியே வந்தது. அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாருக்கே ஒரு தொழில் பாதுகாப்பு தேவைப்படுகிற காலம் இது. சரி, மெயின் விஷயத்திற்கு வருவோம்.

    விஷாலும் ஹரியும் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் படம் ‘பூஜை’. படத்தை தயாரிப்பதும் விஷாலே! படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருக்கிறது. இந்த நேரத்தில்தான் படத்தின் வியாபார விஷயங்களையும் ஆரம்பிப்பார்கள். சரியாக இந்த நேரம் பார்த்து ‘சிங்கம் 3’ மீண்டும் துவங்கும் என்கிற மாதிரியான செய்திகளை சூர்யா வட்டாரங்களும், ஹரி வட்டாரங்களும் கசிய விடுவதுதான் விஷாலுக்கு ஷாக்! மார்க்கெட்டில் விஷாலுக்கு ஏறுமுகம் இருந்தாலும், சூர்யாவோடு ஒப்பிடும்போது சற்றே மாற்று கம்மிதான். இந்த நிலையில், ‘சூர்யா ஹரி படமே இந்த ரேட்டுன்னுதான் சொல்றாங்க. நீங்க ஏன் இவ்வளவு விலை கேட்கிறீங்க?’ என்று சும்மாவே ஒரு பொய்யை சொல்லி விலையை குறைப்பார்கள் வியாபாரிகள்.

    இப்படியெல்லாம் நடக்கும் என்று உணராதவரல்ல ஹரி. அப்படியிருந்தும் அவர் தனது அடுத்த படம் சூர்யாவுடன்தான் என்று பேட்டியளித்து வருவதை எந்த முகத்தோடு ஏற்றுக் கொள்வார் விஷால்? கடந்த சில தினங்களாகவே ஹரி மீது கடும் கோபத்திலிருக்கிறாராம் விஷால். சூர்யா பிராஜக்ட் இன்னும் முடிவாகல… என்று சொல்லிடுங்களேன் என்றும் வற்புறுத்துகிறாராம் ஹரியை. விஷாலுக்காக சூர்யாவை பகைத்துக் கொள்வாரா ஹரி.

    கண்ணாமூச்சு ஆட்டம் நடந்து கொண்டேயிருக்கிறதாம் இருவருக்கும் இடையில்!

    0 comments:

    Post a Comment