Monday 1 September 2014

Tagged Under:

உற்சாகமாக பணியாற்ற முட்டை சாப்பிடுங்கள்

By: Unknown On: 17:29
  • Share The Gag
  • பள்ளி, கல்லூரி, அலுவலகத்தில் எப்போதும் தூங்கி வழிகிறீர்களா… உடல் எப்போதும் சோர்வாக இருப்பதாக உணர்கிறீர்களா? சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் ஆம் என்பது பதில் என்றால், உங்கள் உணவில் முட்டையை சேர்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

    ஆம் முட்டையில் அதுவும் வெள்ளைக் கருவில் உள்ள புரதச் சத்து உங்களை மிகவும் உற்சாகமாக வைத்துக் கொள்ளும்.

    உடனடியாக உடலுக்கு சக்தியை வழங்கும் சாக்கலேட், பிஸ்கெட், இனிப்புப் பண்டங்களில் உள்ள கார்போஹைட்ரேட்டை விட, முட்டையில் உள்ள புரதச் சத்து உடலுக்குத் தேவையான கலோரிகளை சமச்சீரான விகிதத்தில் பயன்படுத்த உதவிபுரிகிறது.

    முட்டையில் உள்ள புரதச்சத்தை சக்தியாக மாற்றிக் கொண்டு, நமது உடல், சீரான அளவில் அதனை கலோரிகளாக எரிக்கின்றன. இதனால் தொடர்ந்து சீரான வேகத்தில் இயங்க நமது உடலுக்குத் தேவையான சக்தியை மூளை கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

    பொதுவாக நாம் உண்ணும் உணவைப் பொருத்துத்தான் நமது மூளை உடலின் செயல்திறனை அமைக்கிறது. நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை சக்தியாகப் பெறும் மூளை, அதனை அடிப்படையாக வைத்து உடல் இயக்கத்தை மாற்றி அமைக்கிறது.

    ஆனால் உடலில் அதிகமான கொழுப்பு உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும், இதய பாதிப்பினை ஏற்படுத்தும் என்று முட்டையை தவிர்த்து விடுவார்கள். ஆனால், புகைப்பிடிப்பது, உடல் பருமன், உடற்பயிற்சி இன்மை ஆகியவற்றால் ஏற்படும் பிரச்சினைகளோடு ஒப்பிடும் போது முட்டை மிகக் குறைந்த அளவிற்கே பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால், முட்டைக்கு ஓகே சொல்லலாம் தவறில்லை.

    0 comments:

    Post a Comment