Tuesday 31 December 2013

Tagged Under: , ,

மாமனிதர் ரஜினி; தைரியமளித்தவர் சூர்யா: அமீர்கான்

By: Unknown On: 15:52
  • Share The Gag



  • தமிழ் நடிகர்களில் எனக்குப் பிடித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான். அவரது மனித நேயமும் எளிமையும் என்னை மிகவும் பிடிக்கும். அவருடன் பணியாற்றிய நாட்களை நினைத்தால் பெருமையாக உள்ளது, என்று பிரபல பொலிவூட் நடிகர் அமீர்கான் கூறினார்.

    கஜினி ரீமேக்கில் நடிக்கத் தயங்கிய என்னை, அந்த திரைப்படத்தில் தைரியமாக நடியுங்கள், பொருத்தமாக இருப்பீர்கள் என்று சொன்னதே நடிகர் சூர்யாதான் என்றும் ஆமீர்கான் கூறினார்.

    அமீர்கான், அபிஷேக் பச்சன், கத்ரீனா கைப் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் தூம் 3. நாளை மறுநாள் உலகெங்கும் வெளியாகிறது. ஹொலிவூட் திரைப்படங்களுக்கு நிகரான அக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை விஜய்கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கியுள்ளார்.

    தூம் 3 திரைப்படம் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவருகிறது. ஆமீர்கான் படம் தமிழில் டப் செய்யப்படுவது இதுவே முதல் முறை. இதையொட்டி ஆமீர்கான், அபிஷேக் பச்சன், கத்ரீனா கைப், இயக்குநர் விஜய்கிருஷ்ணா ஆச்சார்யா ஆகியோர் நேற்று இரவு சென்னை கிராண்ட் சோழாவில் நிருபர்களைச் சந்தித்தனர்.

    அப்போது ஆமீர்கானிடம், தமிழில் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டது. சற்றும் தாமதிக்காமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று பதிலளித்தார் ஆமீர்கான். தொடர்ந்து அவர் பேசுகையில், 'நான் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகன். அவர் நடித்த உத்தர் தக்ஷன், கிராப்தார் ஆகிய படங்களை பார்த்ததில் இருந்து அவருடைய ரசிகனாகி விட்டேன்.

    தமிழில் எனக்குப்பிடித்த நடிகர் ரஜினிகாந்த் முதன்முதலாக அவருடன் ஆதங்கி ஆதங் என்ற படத்தில் நான் சேர்ந்து நடித்தேன். அவர் மிகப்பெரிய நடிகர் என்பதால் எனக்கு அவருடன் சேர்ந்து நடிப்பதற்கு பதற்றமாக இருந்தது. அவர் என்னை தைரியப்படுத்தி நடிக்க வைத்தார். அவருடைய எளிமையும், மனித நேயமும் என்னைக் கவர்ந்தவை. எனக்கு அவர் மீது மரியாதை அதிகரித்தது.

    எனக்குத் தெரிந்து நேரம் தவறாமையிலும், தொழில் பக்தியிலும் அவருக்கு இணையாக யாரையும் சொல்ல முடியாது. ஆச்சர்யமான மனிதர். ஒரு கலைஞனால், மனிதால் எப்போதும் இத்தனை இனிய சுபாவத்தோடு இருக்க முடியுமா என்று ஆச்சர்யமாக உள்ளது. அவருடன் பணியாற்றிய நாட்களை இப்போது நினைத்தாலும் நம்ப முடியவில்லை, பெருமையாக உள்ளது' என்றார்.

    தமிழ் படங்களை 'ரீமேக்' செய்வதாக இருந்தால் எந்த படத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த ஆமீர்கான், 'இந்தப் படம்தான் குறிப்பிட்டு சொல்ல முடியாது. அந்த நேரத்தில் எது மனதைக் கவர்கிறதோ அந்தப் படத்தை தேர்வு செய்யக் கூடும்.

    உண்மையில் கஜினி ரீமேக்கில் நடிக்கும் முன் எனக்கு நிறைய தயங்கங்கள். இந்த மாதிரி கதைக்கு நான் பொருந்துவேனா, சூர்யா அளவு நடிக்க முடியுமா? என்ற சந்தேகங்கள் இருந்தன. வில்லன்களை துரத்தி அடித்து பழி வாங்குவது போல் இதற்கு முன்பு நான் நடித்ததில்லை. அதனால் சூர்யாவுடன் மொபைலில் பேசினேன். என்னால் உங்கள் அளவுக்கு நடிக்க முடியுமா? என்று அவரிடம் கேட்டேன்.

    நிச்சயமாக உங்களால் நடிக்க முடியும் என்று அவர் தைரியம் சொன்னார். சூர்யா கொடுத்த தைரியத்தில்தான் அந்த படத்தில் நான் நடித்தேன். இதுபோல படங்கள் அமைந்தால் அவற்றில் நடிப்பது பற்றி யோசிப்பேன்,' என்றார்.

    கே.பாலசந்தரின் உன்னால் முடியுமா தம்பி என்ற படத்தின் ரீமேக்கில் நீங்கள் நடிப்பதாக ஒரு தகவல் வெளியானதே? என்ற கேள்விக்கு, 'இல்லை.. அப்படி எதுவும் சொன்னதாக எனக்கு நினைவில்லை. 'தாரேஜமீன்பர்' படத்தை நான் இயக்கியதற்காக சென்னையில் எனக்கு ஒரு விருது வழங்கினார்கள். அந்த விருதை இயக்குநர் கே.பாலசந்தர் வழங்கினார். அப்போது அவர் பேசும்போது என் நடிப்பை மிகவும் புகழ்ந்து பாராட்டினார். எனக்கு கண்ணீர் வந்துவிட்டது.

    சமீபத்தில் சர்வதேச படவிழாவிற்காக நான் சென்னை வந்த போது கே.பாலசந்தரை நேரில் சந்தித்து பேசினேன். அப்போது அவர் தூம்௩ படத்தை பற்றி கேட்டு எனக்கு வாழ்த்து சொன்னார். அவருடைய 'உன்னால் முடியும் தம்பி' படத்தின் ரீமேக்கில் நான் நடிப்பதாக வந்த தகவல் வெறும் வதந்திதான்' என்றார்.

    நேரடி தமிழ் படத்தில் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு, 'எனக்கு தமிழ் தெரியாததால் தயக்கமாக இருக்கிறது. தமிழ்ப் படத்தில், தமிழே தெரியாத ஒரு கதாபாத்திரமாக இருந்தால் நான் நடிக்க தயாராக இருக்கிறேன்,' என்றார்.

    0 comments:

    Post a Comment