Tuesday 31 December 2013

Tagged Under: , , , ,

முதல் பெண் நீதிபதி நியமனம் -பாகிஸ்தானின் புரட்சி..!

By: Unknown On: 17:49
  • Share The Gag


  • பாகிஸ்தானில் இஸ்லாமிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் ஷரியா நீதிமன்றம் கடந்த 1980 ஆம் வருடம் ஏற்படுத்தப்பட்டது. அப்போது பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளராக இருந்த ஜெனரல் ஜியா-உல்-ஹக் பாகிஸ்தானிய நிறுவனங்களை இஸ்லாமிய திட்டங்களுக்கு மாற்றும் விதமாக இந்த நீதிமன்றத்தை தோற்றுவித்தார். குற்றவியல் சட்டங்களுக்கு இணையாக இஸ்லாமிய மதத்தில் காணப்படும் ஹுடூட் விதிமுறைகளைப் பின்பற்றி இந்த நீதிமன்றம் இயங்கி வருகின்றது.

    நேற்று இந்த நீதிமன்றத்திற்கு புதிய பெண் நீதிபதி நியமிக்கப்பட்டார்.

    தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகப் பணி புரிந்துவந்த அஷ்ரப் ஜெஹான்(56) கராச்சியில் உள்ள இந்த நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.

    கடந்த 33 வருடங்களில் இஸ்லாமிய நீதிமன்றத்திற்கு ஒரு பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும். பத்திரிகையாளர்களிடம் அரிதாகவே பேசும் ஷரியத் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஆகா ரபிக் அஹமது இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்விற்காக தான் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.

    திறமையான பெண்ணான அஷ்ரப் இஸ்லாமிய நீதிமன்றத்தில் இணைந்துள்ளார். ஆண், பெண் என்ற பிரிவினை இஸ்லாமிய சட்டத்தில் இல்லை. அதனால் ஒரு பெண் நீதிபதி இங்கு செயல்படுவதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

    தான் இதற்கான முதல் முயற்சியை எடுத்து உலகம் முழுமைக்கும் தங்களது முற்போக்கான எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளதாகவும், தங்கள் நாட்டினரைப் பற்றிய பல தவறான கருத்துகள் இந்த நடவடிக்கை மூலம் மாறக்கூடும் என்றும் அவர் கூறினார்.

    0 comments:

    Post a Comment