Sunday 15 December 2013

Tagged Under: , , , ,

அன்பு என்றால் என்ன ?

By: Unknown On: 09:04
  • Share The Gag


  • அன்பு நம்மில் பலர் இறைவனை நம்புகிறோம் சிலர் நம்புவதில்லை. இருப்பினும் நம் அனைவருக்கும் அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்தி நம்மை ஆட்டுவிப்பதாக நம்புகின்றோம். அந்த சக்தியை நாம் ஏன் அன்பென்று எண்ண கூடாது ?


    பலவிதமான மனித உறவுகளிடமும் நாம் எதிர்பார்ப்பதும், பெற விரும்புவதும் அன்புதான். மனிதர்களான நாம் மட்டுமின்றி விலங்கினங்களும் அன்பை தான் எதிர்பார்க்கின்றது. துன்பமும் பயமும் நிறைந்ததாக நாம் எண்ணுகின்ற வாழ்வில் அன்புதான் நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.


    அன்பு என்றால்  என்ன ?


    பல அர்த்தங்கள் பொதிந்த வார்த்தை இது. இதுதான் அன்பு என அவ்வளவு எளிதில் சொல்ல முடியாது. மேலும், அந்த அளவிற்கு ஆழமான வார்த்தை அன்பு. அன்பைப் பற்றி பேசாதவர்களே இல்லை.


    நம் தாய் தந்தையை நேசிக்கிறோம், சகோதர சகோதரிகளுடம் பாசம் கொள்கிறோம், ஒருவன்/ ஒருத்தியை காதலிக்கிறோம், நட்பு கொள்கிறோம். அன்பு, காதல், பாசம், நேசம்,  நட்பு என்று பல்வேறு பெயர்களில் நாம் அழைத்தாலும் எல்லாமே அன்பு என்பதைத்தான் மையப்படுத்துகிறது.


    மனிதனின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை அளிக்கக்கூடியது அன்பு மட்டும்தான். இதில் என்ன பிரச்சனையென்றால் அன்பாக இருப்பது எப்படி என்பதை நாம் உணராமலிருப்பதுதான்.


    அன்பை நாம் எப்படி உணரப்போகிறோம் ? அன்பாக இருப்பதுதான் அன்பு என்பதை நாம் உணர வேண்டும். பலரிடமும் நாம் அன்பாக இருப்பதாக சொல்கிறோம், பேசுகிறோம். ஆனால் உண்மை என்ன ?


    உதடுகள் சிரிப்பதை விடுங்கள். பொய்யாக சிரித்து போலியாக புகழ வேண்டிய கட்டாயம் பலருக்கும் வாழ்வின் பல நிலைகளிலும் ஏற்பட்டிருக்கலாம். நம்மில் எத்தனை பேர் சந்திக்கின்ற அனைவரிடமும் அன்பாக இருந்திருப்போம்?


    மனம் நிறைந்த அன்பு மட்டுமே பலனைத் தரும். உள்ளன்போடு செய்யும் எந்தச் செயலும் மன மகிழ்வைத் தரும்.


    எவ்வளவு துன்பங்கள், பிரச்சனைகள் இருப்பினும் அனைத்தையும் மறந்து மகிழ்ந்திருக்கச் செய்கிற சக்தி அன்பிற்கு மட்டும்தான் உண்டு. அன்பிற்கு மட்டுமே வாழ்வை இனிமையாக்க கூடிய சக்தி உண்டு.

    0 comments:

    Post a Comment