Tuesday 10 December 2013

Tagged Under: , ,

குரல் வளத்தை பெருக்கும் மாந்தளிர்!"

By: Unknown On: 21:53
  • Share The Gag



  •  மாம்பழத்தில் விட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. மாந்தளிரை நன்றாக காய வைத்து பொடித்து வைத்துக்கொண்டு தண்ணீரில் மூன்று சிட்டிகை கலந்து குடித்தால் தொண்டை சம்பந்தப்பட்ட எந்த நோயும் நெருங்காது. அதோடு குரல் வளமும் பெருகும்.


    மா இலை சாற்றுடன் அதே அளவு தேன் பால் பசும் நெய் கலந்து சாப்பிட்டால் கட்டை குரலும் இனிமையாக மாறும். மா இலையை சுட்டு தேனில் வதக்கி சாப்பிட்டு வந்தால் தொண்டைக்கட்டு கரகரப்பு சளி நீங்கும். மா இலையை பொடியாக்கி பற்களில் தேய்த்து வர பல்லில் உள்ள காரை மறைந்து பற்கள் முத்து போல ஜொலிக்கும்.


    மாம்பழ மலமிளக்கியாக செயல்படுவதுடன் முகத்தில் உள்ள பருக்களையும் போக்ககூடியது. சூடு உடல் கொண்டவர்கள் மாம்பழம் சாப்பிட்டதும் ஒரு டம்ளர் பாலை பருகினால் சூடு பிடிக்காது.


    ஒரு டீஸ்பூன் மாங்கொட்டை பொடியுடன் ஒரு துளி நெய் கலந்து சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி தொல்லை இருக்காது. நகத்தின் மேல் இருக்கும் வெள்ளை புள்ளிகள் நக வெட்டு தோலில் உள்ள வெள்ளை திட்டுகளும் நீங்கிவிடும்.


    மா மரத்தின் பட்டையில் வடியும் பாலை கால் வெடிப்பில் தடவினால் வெடிப்பு மறைந்து பாதம் பட்டு போல் மாறிவிடும்..


    ஒரு சிட்டிகை மா மர பிசினை ஒரு டம்ளர் மாம்பழ ஜீஸீடன் கலந்து சாப்பிட்டால் தேமல் தழும்பு படை நீங்கி தோல் மிருதுவாகும்.

    0 comments:

    Post a Comment