Sunday 5 January 2014

Tagged Under: , , ,

அறிஞர்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள் - சர். ஐசக் நியூட்டன்

By: Unknown On: 00:21
  • Share The Gag


  • அமெரிக்க விஞ்ஞானி சர். ஐசக் நியூட்டன் பூமிக்கு புவியீர்ப்பு சக்தி இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னவர்.
    அவர் ஒரு சமயம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பொழுது அவரைப் பார்க்க நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் அங்கிருந்த அறைக் கதவில் பெரியதும் சிறியதுமாக இரண்டு துவாரங்கள் வட்டமாக இருந்ததைப் பார்த்தார்.

    'அறைக் கதவில் இரண்டு துவாரங்கள் போட்டிருக்கின்றீர்களே அது ஏன்?' என்று நியூட்டனிடம் கேட்டார். அதற்கு நியூட்டன் சொன்னார்: நான் சிறியதும், பெரியதும் என்று இரண்டு பூனைகள் வளர்க்கின்றேன். வீட்டின் அந்த அறையைப் பூட்டிக் கொண்டு வெளியில் போய் விட்டால் பெரிய துவாரம் வழியாக பெரிய பூனையும், சிறிய துவாரம் வழியாக சிறிய பூனையும் அறைக்குள் வருவதற்காகவே இந்த இரண்டு துவாரங்களையும் போட்டிருக்கிறேன்' என்று.

    அதற்கு இரண்டு துவாரங்கள் தேவையில்லையே? பெரிய துவரம் வழியாகவே இரண்டு பூனைகளும் வந்து விடலாமே' என்று நண்பர் கூறியதும், விஞ்ஞானி நியூட்டன் திடுக்கிட்டார். 'ஆமாம், நீங்கள் சொல்வது சரி தான். எனக்கு இந்த யோசனை தோன்றவில்லையே' என்று கூறியவர் சிறிய துவாரத்தையும் அடைக்கச் சொன்னார்.

    0 comments:

    Post a Comment