Tuesday, 27 August 2013

ஆன்லைனில் இலவசமாக பேக்ஸ்(Fax) அனுப்ப சிறந்த 10 தளங்கள்!

By: Unknown On: 21:31
  • Share The Gag

  • சில முக்கிய நகல்களை நாம் அவசரமாக அனுப்ப பேக்ஸ் மூலம் அனுப்புவோம். இதற்க்கு பணம் கொடுத்து தான் அனுப்ப வேண்டும். இலவசமாக அனுப்ப வேண்டுமென்றால் அந்த இயந்திரத்தை விலை கொடுத்து வாங்க வேண்டும். ஆனால் இந்த குறைகளை தவிர்க்க ஆன்லைனில் இலவசமாக அனுப்பலாம். இதற்க்கு பத்து சிறந்த தளங்களை கீழே வரிசை படுத்தி உள்ளேன்.

    1. eFax
    இந்த தளத்தில் 30 நாட்களுக்கு சுமார் 180 பக்கங்களை இலவசமாக பேக்ஸ் அனுப்பி கொள்ளலாம். இந்த தளம் சுமார் 15 வருடங்களாக இந்த சேவையை வழங்கி வருகிறது. உலகளவில் 49 நாடுகளில் இந்த சேவை உள்ளது. 30 நாட்களுக்கு பிறகு மாத கட்டணத்தை வசூலிப்பார்கள்.

    2. Super Fax
    இந்த தளம் இந்திய அளவில் மிக பிரபலமான தளம். உங்கள் ஈமெயிலை இதன் மூலம் பேக்ஸ் அனுப்பலாம்.  இந்த தளத்தில் மூன்று நாட்களுக்கு மட்டுமே இலவசமாக பேக்ஸ் அனுப்ப முடியும். சுமார் 10 முறை பேக்ஸ் அனுப்பலாம்.

    3. Faxmyway
    இந்த தளத்தில் 5 நாட்களுக்கு இலவசமாக பேக்ஸ் அனுப்பி கொள்ளலாம். இதுவும் ஒரு இந்திய நிறுவனமாகும். ஒரே நேரத்தில் பல பேருக்கு பேக்ஸ் அனுப்பும் வசதி இந்த தளத்தில் உள்ளது. 

    இது முழுக்க முழுக்க இலவச சேவையாகும். இதில் பேக்ஸ் அனுப்ப மட்டுமே முடியும், பெற முடியாது. உலகளவில் இலவசமாக இந்த தளம் மூலம் இலவசமாக பேக்ஸ் அனுப்ப இயலும். 

    இதில் இலவசமாக மூன்று நாட்களுக்கு பேக்ஸ் அனுப்பியும் பெற்றும் கொள்ளலாம். இது ஒரு இந்திய நிறுவனமாகும். மூன்று நாட்களுக்கு பிறகு ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திற்கான தொகையை கட்டினால் இந்த வசதியை தொடர்ந்து பெறலாம்.

    இந்தியர்களுக்கென்று பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட தளமாகும். இதில் இந்திய அளவில் இலவசமாக கணக்கில்லாமல் முழுக்க முழுக்க இலவசமாக பேக்ஸ் அனுப்பி கொள்ளலாம். இதில் பேக்ஸ் அனுப்புவது மிகவும் சுலபமாக இருக்கும்.

     20 நாடுகளில் 500 நகரங்களில் இந்த வசதி செயல்படுகிறது. இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் உங்கள் மொபைலில் இருந்து கூட பேக்ஸ் அனுப்பி கொள்ளலாம். இதுவும் உலகளவில் மிக பிரபலமான தளமாகும். 

    இதுவும் ஒரு இலவச சேவையாகும். இதில் கட்டண வசதியும் உள்ளது. இலவச சேவையில் தினமும் 2 பேக்ஸ் தான் அனுப்ப முடியும். மற்றும் இலவச சேவையில் நீங்கள் பேக்ஸ் அனுப்பினால் இந்த தளத்தின் லோகோ வாட்டர் மார்க்காக தெரியும். கட்டண வசதியில் இந்த பிரச்சினைகள் இல்லை.

    இந்த தளத்தில் பேக்ஸ் அனுப்பும் டாகுமெண்ட்டை எடிட் செய்து கொள்ளும் வசதி உள்ளது. இந்த சேவை 30 நாட்கள் வரை செய்து கொள்ளலாம். 

    இது உலகளவில் மிக பிரபலமான தளமாகும். இந்த தளத்தில் உங்கள் மொபைலில் இருந்து பேக்ஸ் அனுப்பலாம் உங்களுக்கு வரும் பேக்சை மொபைல் மூலம் பெறலாம். பிளாக்பெரி,ஐபோன் போன்றவைகளுக்கு மென்பொருள் இந்த தளத்தில் இருந்து தரவிறக்கி டவுன்லோட் செய்து கொண்டு இந்த வசதியை பயன்படுத்தலாம். 
     

    கணினிக்கு தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை கண்டறிந்து அழிக்க...

    By: Unknown On: 20:54
  • Share The Gag

  • கணினிக்கு மிகவும் அவசியமானது சாப்ட்வேர்கள் ஆகும். கணினியில் நம்முடைய வேலைகளை குறைக்கவும் சில அதிக்கப்படியான வசதிகளுக்கும் மென்பொருட்களை உபயோகிக்கிறோம். மென்பொருட்கள் இல்லாமல் கணினி இருப்பது வீண் தான். மென்பொருட்களை பிரபல கணிப்பொறி நிறுவனங்கள் தயாரித்து நமக்கு விலைக்கு தருகிறது. இந்த மென்பொருட்களை உபயோகித்தால் நம்முடைய எந்த பிரச்சினையுமின்றி பாதுகாப்பாக இருக்கும் ஆனால் நாம் பெரும்பாலும் மென்பொருட்களை காசு கொடுத்து வாங்காமல் கிராக் பதிப்பையோ அல்லது இணையத்தில் கொட்டி கிடக்கும் இலவச மென்பொருட்களை தரவிறக்கி உபயோகிக்கிறோம்.
    இப்படி இலவச மென்பொருட்களை உபயோகிக்கும் போது சில மால்சியஸ் மென்பொருட்களால் நம்முடைய கணினி பாதிக்கப்படும். ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்களும் இந்த மென்பொருட்களை கண்டறிய முடியாததால் கணினி மேலும் மேலும் பாதிக்கப்பட்டு நாளடைவில் முற்றிலுமாக செயலிழக்கும் அபாயம் உள்ளது. இந்த பிரச்சினைகளை தவிர்க்க
    மைக்ரோசாப்ட் நிறுவனம் மால்சியஸ் மென்பொருட்களை கண்டறிந்து அளிக்க ஒரு மென்பொருளை வெளியிட்டு உள்ளது. 

    • இந்த மென்பொருளை Malcious Software Removal டவுன்லோட் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்யும் போதே உங்கள் கணினியை ஸ்கேன் செய்ய ஆரம்பித்து விடும். 
    • உங்கள் கணினியில் உள்ள அனைத்து மென்பொருட்களும், எக்ஸ்கியுட்டபில் பைல்கள் அனைத்தும் ஸ்கேன் செய்யும். 
    • இதில் ஏதேனும் தீங்கு இழைக்க கூடிய மென்பொருட்கள் கணினியில் இருந்தால் அதை கண்டறிந்து அழித்து விடும். 
    • அப்படி உங்கள் கணினியில் எந்த மால்சியஸ் மென்பொருளும் இல்லை அனைத்து மென்பொருட்களும் நல்ல நிலையில் இருந்தால் உங்களுக்கு எந்த மென்பொருளும் பாதிக்க படவில்லை என்ற செய்தி வரும். 


    கணினியில் வைரஸினால் பழுதான பைல்களை ரிப்பேர் செய்து மீண்டும் செயல்படுத்த

    By: Unknown On: 17:55
  • Share The Gag
  •  
    கணினியில் சில நேரங்களில் நம்முடைய பைல்கள் சில எதிர்பாராத பிரச்சினைகளால் பழுதாகிவிடும். அந்த பைல் பழுதாகிவிட்டால் நாம் அந்த பைலில் சேமித்து வைத்திருக்கும் அனைத்து தகவல்களையும் இழக்கும் நேரிடும். நம்முடைய பைல்கள் பழுதாக சில காரணங்கள்  நம்முடைய கணினியில் வைரஸ் புகுந்து முக்கியமான பைல்களை அழித்து விடும், எதிர்பாராத மின் வெட்டு பிரச்சினை, தொழில் நுட்ப்ப கோளாறுகள் போன்ற காரணங்களால் தான் நாம் பெரும்பாலும் நம் முக்கியமான பைல்களை இழக்க நேரிடுகிறது. இது போன்று பிரச்சினைகளை தவிர்க்க ஒரு அருமையான இலவச மென்பொருள் உள்ளது.

    மென்பொருளால் ரிப்பேர் செய்யப்படும் பைல் பார்மட்கள்:
    • Word documents (.doc, .docx, .docm, .rtf)
    • Excel spreadsheets (.xls, .xla, .xlsx)
    • Zip or RAR archives (.zip, .rar)
    • Videos (.avi, .mp4, .mov, .flv, .wmv, .asf, .mpg)
    • Images (.jpg, .jpeg, .gif, .tiff, .bmp, .png)
    • PDF documents (.pdf)
    • Access databases (.mdb, .mde, .accdb, .accde)
    • PowerPoint presentations (.ppt, .pps, .pptx)
    • Music (.mp3, .wav)
    இப்படி பல வகையான பைல்களை மீண்டும் ரிப்பேர் செய்து உபயோகிக்க இந்த மென்பொருள் உதவி செய்கிறது.

    உபயோகிக்கும் முறை:
    • முதலில் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
    • பின்பு அந்த மென்பொருளை ஓபன் செய்து அதில் கீழே குறிப்பிட்டு இருக்கும் பட்டனை அழுத்தி உங்களின் பழுதான பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள். 
    • பழுதான பைலை தேர்வு செய்தவுடன் கீழே உள்ள Start Repair என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களுடைய பைல் ரிப்பேர் ஆகா தொடங்கி சிறிது நேரத்திலேயே முழுதும் சரிசெய்யப்பட்டு உங்களுடைய பைல் திரும்பவும் உங்களுக்கு கிடைக்கும்.

    இந்த மென்பொருளால் குறிப்பிட்ட பைல்களை ரிப்பேர் செய்ய முடியாவிட்டாலும் கூட இந்த முகவரிக்கு repair@filerepair1.com உங்களின் பழுதான பைலை அனுப்பினால் அவர்கள் அந்த பைலை திருத்தி மீண்டும் செயல்படுத்தி தருவார்கள் என்பது இந்த மென்பொருளின் கூடுதல் சிறப்பு.

    Download Link - File Repair
     

    கணினியை வைரஸிடம் இருந்து காப்பாற்ற 10 வழிகள்

    By: Unknown On: 17:47
  • Share The Gag
  • கணினியை வைரஸிடம் இருந்து காப்பாற்ற 10 வழிகள்

    அனைவரின் கணினியிலும் எழும் பொதுவான மிக ஆபத்தான பிரச்சனை வைரஸின் தாக்கமே!...ஒரு சில நிமிடங்களில் நமது கணினியையே காலி செய்துவிடும்...பாடுபட்டு உழைத்த தகவல்கள், முக்கிய ஆவணங்கள், ஆப்ரேட்டிங் சிஸ்டம் என அனைத்தும் பாதிபடைந்து தங்கள் கணினி முழுவதும் முடக்கப்படும்.

    இதற்கு தீர்வுதான் என்ன....பொதுவாக வைரஸையை தங்கள் கணினியில் நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்...ஏனெனில் அது வந்து பின்பு அதை கட்டுப்படுத்துவதும், நீக்குவதும் மிக மிக கடினம். இவற்றை தீர்ப்பதற்கான இலகுவான பத்து வழிகள்..


    01. தங்கள் கணினியில் தாங்கள் செய்ய வேண்டிய மிக முக்கிய ஒன்று ஓர் சிறந்த வைரஸ் தொகுப்பு மென்பொருளை நிறுவ வேண்டும். ஆன்டிவைரஸை நிறுவிட்டால் போதுமா! கணினியை வாரத்திற்கு ஒரு முறையாவது முழு வைரஸ் ஸ்கேன் செய்திட வேண்டும்.

    02. தங்களுக்கு வரும் இ-மெயில் ஒவ்வொன்றையும் ஸ்கேன் செய்ய மறந்து விடதிர்கள். தாங்கள் கணினிலியே இ-மெயில் மென்பொருள்களை பயன்படுத்தினால் கண்டிபாக ஸ்கேன் செய்ய வேண்டும். அதே மாறி தங்களுக்கு வரும் மெயில்களின் இணைந்து வரும் பைல்களை(ATTACHMENT FILES) கையாளுவதில் அதிக கவனம் தேவை.

    03. தங்கள் கணினியில் விண்டோஸ் தரும் FIREWALL யை தவிர்த்து வேறு சில சிறந்த FIREWALL பயன்படுத்துங்கள். ஏனெனில் விண்டோஸ் சிஸ்டம் தரும் FIREWALL அவ்வளவாக பாதுகாப்பு தருவதில்லை. உதரணமாக COMODO, ZONEALARAM போன்றவை.

    04. தங்கள் ஆன்டிவைரஸ் தொகுப்பை அதாவது மென்பொருளை கணினி இயங்கும் (START UP) போதே தானாக இயங்க்கும் படி அமைத்திடவும். மேலும் பூட் ஸ்கேன் செயல்படும் படி அமைத்து விடவும்.

    05. தங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள ஆண்டி வைரஸ் தொகுப்பை அடிக்கடி அடிக்கடி அப்டேட் (UPDATE) செய்யவும். தங்கள் நிறுவிய மென்பொருள் நிறுவிய தேதியின் நிலைமையும் பாதுகாப்பை மற்றும் பெற்றுயிருக்கும். அதன் பின்னர் பல சிறப்பு வசதிகளும், புதிய வைரஸ் தடுக்கும் திறனும் வெளியிடப்பட்டிருக்கும். தாங்கள் அப்கேர்ட் செய்வதில் புதிய திறனுடன் தங்கள் ஆண்டிவைரஸ் தொகுப்பு இயங்கும். இதனால் வைரஸ் பாதுகாப்பு இன்னும் அதிகரிக்கும். ஆண்டி வைரஸ் தொகுப்பை அடிக்கடி அடிக்கடி அப்டேட் (UPDATE) செய்யவும்.

    06. இணையத் தளங்களில் பார்வையிடும் போது தோன்றும் பாப் அப் விண்டோக்களை கிளிக் செய்வதில் கவனம் கொள்ளுங்கள். மேலும் ஆன்லைன்யில் தங்கள் கணினியை ஸ்கேன் செய்யவா என சில அறிவிப்புகளை தாங்கள் கண்டுயிருக்கலாம், இதில் தாங்கள் கிளிக் செய்தால் போதும் தங்கள் கணினி ஸ்கேன் செய்வதும் போன்றும் வைரஸ்யிருப்பதும் போன்றும் தோன்றும். ஆனால் இங்கு தான் சில விசமிகளின் செயல் உள்ளது. இவ்வாறு தாங்கள் ஆன்லைன்யில் தங்கள் கணினியை ஸ்கேன் செய்யும் போது தங்கள் கணினிக்கு அவர்கள் வைரஸ், மால்வேர், டிரோஜன் போன்றவற்றை அனுப்பிவிடுகின்றன. இவ்வாறனவற்றை பெரும்பாலும் தவிர்க்க பாருங்கள்.

    07. இணையம் மூலம் பைல்களை பதிவிறக்கும் போது நம்பிக்கை வாய்ந்த தளங்களில் இருந்து மட்டும் பைல்களை பதிவிறக்கவும். அந்த தளமானது தங்கள் தளத்தில் வைரஸ் எதுவும் இல்லை என உறுதியளிப்பு தரப்பட்டுள்ளதா என அறியவும். மேலும் .EXE OR .COM போன்ற பைல்களை பதிவிறக்குவதில் அதிக கவனம் தேவை.

    08. அதே மாறி இலவசமாக கிடைக்கிறது என சந்தையில் கிடைக்கும் தகவல்களை பறிமாறிக் கொள்ளும் சாதனங்களை பயன்படுத்துவதில் கவனம் அதிகம் தேவை...இலவசமாக சிடிகளில் பதிந்து தரப்படும் மென்பொருட்கள், தகவல்களில் தான் அதிக வைரஸ்கள் இடம் பெறுகின்றன.

    09. தங்கள் நண்பர்கள் முலம் சிடிகளை பகிர்ந்துக் கொள்வதில் கவனம் தேவை. சிடிகளின் இருக்கும் வைரஸ்கள் அவ்வளவாக தங்களை அடையாளம் காட்டிவதில்லை..தங்கள் கணினியை ஒவ்வொரு முறையும் அணைக்கும் SHUTDOWN செய்யும் போதும்..சிடி டிரைகளில் இருந்து சிடிகளை நிக்கிவிடுங்கள். எனெனில் தாங்கள் கணினியை பூட் செய்யும் போது சிடிகளில் இருக்கும் வைரஸ் தங்கள் கணினியில் பாதிப்பை ஏற்ப்படுத்தகூடும்.

    10. REMOVEBLE DRIVEகளான பென்டிரைவ், மெமரிகார்டை போன்றவற்றை பயன்படுத்தும் முன்பு கவனம் தேவை..ஏனெனில் அதிகமாக வைரஸ்கள் REMOVEBLE DRIVEகள் போன்றவற்றால் தான் பரவுகின்றன. ஒவ்வொரு முறை தாங்கள் இந்த REMOVEBLE DRIVE பயன்படுத்தும் போதும் அதை ஸ்கேன் செய்யவும். REMOVEBLE DRIVE என தனி ஆண்டிவைரஸ் மென்பொருட்களை பயன்படுத்துங்கள்.
     

    My Documents போல்டரை வேறு டிரைவுக்கு மாற்ற...

    By: Unknown On: 17:30
  • Share The Gag
  • My Documents போல்டரை வேறு டிரைவுக்கு மாற்ற...

    உங்கள் கணினியில் My documents போல்டர் வழக்கம் போல "C" டிரைவில்
    தான் அமைந்து இருக்கும். நண்பர்கள் எல்லோரும் தங்களது கோப்புகளையோ அல்லது வேறு ஏதேனும் பைல்களை சேமிக்கும் போது அவை எப்போதும்
    My documents போல்டரில் தான் சேமிக்கப்படும். நண்பர்களும் ஏதேனும் அவசரத்தில் சேமித்து விடுவார்கள். அதுவும் நல்லது தான். ஏன் என்றால் நமது பர்சனல் கோப்புகள் ஓரிடத்தில் தான் சேமித்து வைக்க விரும்புவோம். இதனால் ஒன்றும் தீமையும் இல்லை.

    ஆனால் எதாவது ஒரு நேரம் , உங்கள் கணினியை Format செய்யும் போது உங்கள் My documents இல் உள்ள கோப்புகள் மீட்டு எடுக்க முடியாமல் போய் விடலாம்.
    அல்லது வைரஸ் ஏதேனும் உங்கள் கணினியை செயல் இழக்க செய்து விட்டால்
    அந்த நேரத்தில் "C" டிரைவை மீட்பது என்பது கொஞ்சம் கஷ்டமான வேலையாக இருக்கும். அதனால் My documents போல்டரை அப்படியே உங்கள் கணினியில் வேறு டிரைவிற்கு மாற்றி விட்டால் இந்த பிரச்சனை வராது அல்லவா?

    1. டெஸ்க் டாப்பில் உள்ள My documents போல்டரை வலது கிளிக் செய்து அதில்
    properties என்பதை தேர்வு செய்யுங்கள்.


    2. Target என்ற இடத்தில் தற்போதைய My documents இன் முகவரி இருக்கும். நீங்கள் கீழே உள்ள Move என்ற பட்டனை கிளிக் செய்து புதிய முகவரியை
    கொடுக்கலாம்.

    3. உதாரணமாக நீங்கள் "C" டிரைவில் இருந்து "D" டிரைவிற்கு மாற்றுவதாய் இருந்தால் Target பிரிவில் இப்படி அடிக்க வேண்டும்.

    D:\My documents

    4. பின்னர் Apply கொடுத்தால் உங்கள் My documents கோப்புகள் எல்லாம் நீங்கள் விரும்பிய டிரைவிற்கு மாறி விடும்.இதற்கு பிறகு Format செய்ய வேண்டி வந்தாலும் உங்கள் My documents கோப்புகள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.நன்றி! 
     

    அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்

    By: Unknown On: 16:55
  • Share The Gag

  • இரண்டு நாட்களுக்கு முன்பு நான் அலுவலக பென் டிரைவில் வைத்திருந்த
    முக்கியமான சம்பளப்பட்டியல் எக்ஸ்செல் கோப்பை தெரியாமல்
    Format செய்துவிட்டேன். என்ன செய்தும் அதை திரும்ப பெறமுடியவில்லை.
    வலைப்பதிவு நண்பர்களிடமும் உதவி கேட்டேன். பல மென்பொருள்களை உபயோகப்படுத்தியும் அந்த கோப்புகளை மீட்க முடியவில்லை. இறுதியில் இந்த
    மென்பொருளை பயன்படுத்தி பார்க்கலாம் என்று முயற்சி செய்தேன். முடிவுகளோ நான் ஆச்சரியப்படும் விதம் அமைந்தன. மிக துல்லியமான வகையில் இந்த மென்பொருள் அழித்த கோப்புகளை மீட்டு எடுத்தது. அதுவும் நல்ல முறையில் கோப்புகளை திரும்பக்கிடைக்குமாறு செய்தது.இந்த நேரத்தில் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

    என்னவென்றால் Hard Disk இல் ஒரு தகவல்களை பதியும் போது அவை குறிப்பிட்ட செக்டார் களில் ( Sector ) பதியப்படுகின்றன. நீங்கள் ஒரு கோப்பை நிரந்தரமாக அழித்து விட்டாலும் அவை அந்த குறிப்பிட்ட செக்டார்களில் தான் இருக்கும். அடுத்து வேறு ஏதேனும் கோப்புகள் அந்த செக்டார்களில் பதியப்படும் வரை அவை அதே இடத்தில தான் இருக்கும். அதனால் உங்களுக்கு அழித்த கோப்புகள் திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கிடைக்க வில்லை எனில் வேறு கோப்புகள் அந்த இடத்தில் பதியப்பட்டுவிட்டன என்று அர்த்தம்.

    R-Linux Recovery



    இதன் தரவிறக்க சுட்டி : RLinux

    இந்த மென்பொருள் Hard Disk மட்டுமின்றி பென் டிரைவ் மற்றும் மெமரி
    கார்ட்களிலும்,செயல்படக்கூடியது. நீங்கள் தெரியாமல் அழித்து விட்டாலோ ,
    Format செய்து விட்டாலோ, அல்லது வைரஸ் அழித்து விட்டாலோ இதைக்கொண்டு கோப்புகளை மீட்கலாம்.

    இது மட்டுமின்றி உங்கள் ஹார்ட் டிஸ்கை ஒரு இமேஜ் கோப்பாக சேமித்து
    வைக்கும் வசதியும் உண்டு. இதை வைத்தும் நீங்கள் பின்னாளில் உங்கள்
    கோப்புகளை மீட்கலாம்.

    இது போல மற்ற இலவச மென்பொருள்கள் :

    Pandora Recovery
    Recover Files 2.1
    PC Inspector File Recovery 4
    Data Recovery 2.3.1
    EASEUS Deleted File Recovery 2.1.1
    Glary Undelete 1.3
     
     
     

    Youtube Schools - பள்ளி/கல்லூரிகளுக்கான யூடியுபின் புதிய சேனல்!

    By: Unknown On: 16:44
  • Share The Gag

  •  
     
                    முன்பெல்லாம் பள்ளிகள்/கல்லூரிகளில் எதேனும் கட்டுரை எழுதி வரச்சொன்னால் மாணவர்கள் நூலகத்தில் தேடி குறிப்பெடுப்பார்கள். இல்லையெனில் பக்கத்திலிருக்கும் அறிவான நபர்களிடம் பொறுப்பைக் கொடுத்து உதவி கேட்பார்கள். இன்றைய தொழில்நுட்ப உலகில் இதெல்லாம் மறந்து எதாவது ஒரு விசயம் தெரியலையா கூகிள் போப்பா என்று சொல்லுமளவுக்கு வந்து விட்டது. இணையத்தில் நல்ல விசய்ங்களோடு கெட்ட விசயங்களும் இணைந்தே தான் இருக்கின்றன. இணையத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி சார்ந்த வீடியோக்களை பார்ப்பதன் மூலம் குறிப்பிட்ட ஒன்றை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். கூகிள் தனது யூடியுப் சேவையில் பள்ளி மாணவர்களுக்காக ஒரு சேனல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

    Youtube for Schools என்ற இந்தப் பிரிவின் மூலம் பள்ளி மாணவர்கள் கல்வி சார்ந்த வீடியோக்களை பார்த்து பயன்பெற முடியும். இதற்கு பள்ளி முதல்வர்கள் பள்ளிகளுக்கான கூகிள் கணக்கொன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தங்கள் பள்ளியின் பாடம் சம்பந்தப்பட்ட வீடியோக்களைத் தரவேற்றிக் கொள்ளலாம். யூடியுபில் ஏற்கனவே Youtube Education என்ற சேனலில் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் பல கல்வி நிறுவனங்களால் தரவேற்றப்பட்டுள்ளன. இவைகளின் மூலம் கணிதம், மொழிகள், வரலாறு, அறிவியல் சோதனைகள் போன்றவற்றை மாணவர்கள் கற்றுக் கொள்ளலாம். (educational videos, maths help, learn foreign languages, university lectures, science experiments and world events)

     
     
    பள்ளி முதல்வர்கள்/ஆசிரியர்கள் யுடியூபில் எந்த வீடியோவினையும் பார்க்க முடியும். ஆனால் மாணவர்களுக்கு Youtube Education சேனலில் உள்ள வீடியோக்களும் தங்கள் பள்ளி சம்பந்தப்பட்ட வீடியோக்களையும் மட்டுமே பார்க்க முடியும். மாணவர்கள் பார்க்கும் போது வீடியோக்களின் கீழே எந்த கருத்துரையும் வராது. Related Videos என்பதும் வராது. தேடினாலும் பாடங்கள் குறித்தான வீடியோக்கள் மட்டுமே வரும். இதனால் வேறு எதேனும் வீடியோக்களைப் பார்த்து மாணவர்களின் கவனம் சிதறாது.
     

     
     
    பள்ளி ஆசிரியர்களுக்கென்று Youtube for Teachers என்ற சேனல் இருக்கிறது. இதில் மற்ற ஆசிரியர்களின் பாட வீடியோக்களை நம் பள்ளி ஆசிரியர்கள் பார்த்து அறிவை மேம்படுத்தலாம். மேலும் பள்ளியின் மூலம் தரவேற்றப்படும் வீடியோக்களை தங்கள் பள்ளி மட்டுமே பார்க்க முடியுமாறு அமைக்க முடியும். மாணவர்களுக்கு பள்ளியிலேயே கல்வி சார்ந்த வீடியோக்களை மட்டும் காண்பித்து அறிவைப் பெருக்கும் யூடியுபின் இந்த சேவை பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

    கூகிள் கிளவுட் பிரிண்டர் ( Google Cloud Printer)!

    By: Unknown On: 07:50
  • Share The Gag

  •  
     
     
    நமக்கு வேண்டிய தகவல்களை அச்சிட்டுப் பயன்படுத்த கணிணியில் இணைத்திருக்கும் பிரிண்டரின் (Printer) மூலம் செய்துகொள்கிறோம். வெளியில் வேறு இடங்களில் இணைய மையங்களில் இணையத்தில் உலவும் போது எதாவது ஒரு முக்கியமான தகவலைப் பார்க்கும் போது அதனை அச்சிட்டு வைத்துக் கொள்ள நினைப்பீர்கள் . அந்த இடத்தில் பிரிண்டர் இருந்தால் எடுத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இல்லையெனில் இந்த விசயத்தை அப்படியே மறந்து விடுவீர்கள்.

    கூகிள் நிறுவனத்தின் சேவையான Google Cloud Print இதற்கு உதவக்கூடும். முதலில் கிளவுட் அல்லது மேகக்கணிணி என்பது எந்தவொரு கணிணிப் பயன்பாட்டையும் இணையத்திலும் செய்வதாகும்.உதாரணமாக நமது கோப்புகளை இணையத்தில் சேமித்துப் பயன்படுத்துவது ஒரு கிளவுட் பயன்பாடாகும்.

    இந்த சேவையில் உங்களிடம் இருக்கும் பிரிண்டரை ஒருமுறை இணையத்தில் இணைத்து விட வேண்டும். பின்னர் உலகில் நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் பிரிண்டருக்கு தகவலை அச்சிடச் சொல்லி கட்டளையிடலாம். உடனடியாக உங்கள் வீட்டு பிரிண்டரில் அச்சிடப்படும். மின்சாரம் இல்லையெனில் மறுபடி மின்சாரம் வந்த பின்னர் தகவல்கள் அச்சிடப்படும். ஆண்ட்ராய்டு ஒஎஸ்க்கு தயாரிக்கப்பட்ட இந்த பயன்பாடு தற்போது கூகிள் நீட்சியின் மூலம் விரிவாக்கப்பட்டுள்ளது. மேலும் கைப்பேசியிலிருந்தும் அச்சிட தகவலை அனுப்பலாம். இதில் doc, pdf, txt போன்ற வகைகளில் முடியும் இணைய முகவரியில் இருக்கும் கோப்புகளை அச்சிடலாம்.
     
     
    உங்கள் பிரிண்டரை எப்படி Google Cloud Print இல் இணைக்க:

    1. கூகிள் கணக்கில் நுழைந்த பின்னர் குரோம் உலவியின் மூலம் கீழே உள்ள சுட்டியில் சென்று உங்களிடம் இருக்கும் பிரிண்டரைத் தேர்வு செய்து இணைக்கவும். http://www.google.com/landing/cloudprint/win-enable.html

    2. கீழுள்ள இணைப்பில் சென்று குரோம் கிளவுட் பிரிண்ட் நீட்சியை Install என்பதைக் கிளிக் செய்து நிறுவிக் கொள்ளவும்.
    https://chrome.google.com/extensions/detail/ffaifmgpcdjedlffbhenaloimajbdkfg?hl=en

    3. பின்னர் இணையத்தில் நீங்கள் எதாவது ஆவணங்களைப் பார்க்கும் போது குரோம் உலவியின் மேல் வலது புறம் பிரிண்டர் ஐகான் காணப்படும். அதனைக் கிளிக் செய்தால் தகவல்கள் பிரிண்டருக்கு அனுப்பப்படும்.
     

     
    இந்த சேவையில் எத்தனை பிரிண்டரை வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம். பிரிண்டர்களை நிர்வகிக்கவும், அச்சுக்கு அனுப்பியதை கேன்சல் செய்யவும் குரோம் உலவியின் Settings -> Options -> Under the Hood -> Google cloud Print என்பதில் சென்று பார்த்துக் கொள்ளலாம். 
     

    புதிய இந்தித் திரைப்படங்களை இலவசமாகப் பார்க்க YouTube BoxOffice!

    By: Unknown On: 07:42
  • Share The Gag


  •  
     
    கூகிளின் யூடியுப் சேவை (Google Youtube) வீடியோக்களை இலவசமாக கண்டுகளிக்க உதவுகிறது. இந்த இணையதளத்தில் ஏராளமான இலவச வீடியோக்கள் உள்ளன. வேண்டுமென்றால் நாம் இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம். கடந்த வருடமே யூடியுப் தளத்தில் இலவசமாக இந்தித் திரைப்படங்களை முழுவதுமாகப் பார்ப்பதைக் கொண்டு வந்தது. இதற்காக சில திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருந்தது.

    மேலும் யூடியுப் இணையதளம் ஐபிஎல் போட்டிகளை நேரலையாக ஒளிபரப்பி புகழடைந்தது. இப்போது இத்தளத்தில் புதிய வசதியாக இந்தி மொழியில் சமீபத்திய வெற்றித் திரைப்படங்களை முழுவதும் பார்க்க வழி செய்திருக்கிறது. இனி மேல் புதிய இந்தித் திரைப்படங்களை High Definition உயர்தரத்தில் பார்த்து ரசிக்க முடியும்.வீடியோவின் தரம் அருமையாக உள்ளது. தரவிறக்கமும் செய்துகொள்ள முடியும். இந்த சேவை Youtube BoxOffice என்று அழைக்கப் படுகிறது.

    இணைய முகவரி: http://www.youtube.com/boxoffice


     இதில் ஒவ்வொரு மாதமும் புதிய வெற்றியடைந்த திரைப்படங்கள் பதிவேற்றப்படும். பழைய படங்கள் மற்றும் முன்னர் சேர்க்கப்பட்டுள்ள படங்களை எப்போதும் போல Bollywood பகுதியிலும் அல்லது இதன் கீழேயே More Videos என்பதைக் கிளிக் செய்தும் பார்த்துக் கொள்ளலாம். தமிழ் படங்களுக்கும் இந்த மாதிரி செய்தால் நன்றாக இருக்கும்.


    இணைய முகவரி: http://www.youtube.com/boxoffice
     

    Youtube இல் வீடியோ பார்க்கும் போது பாடல் வரிகள் தோன்ற...

    By: Unknown On: 07:38
  • Share The Gag

  •  
     
    கூகிளின் யுடியூப் (Google youtube) பிரபலமான வீடியோ தளமாக இணையத்தில் இருக்கிறது. பெரும்பாலானோர் எந்த வகை வீடியோ அல்லது பாடல்கள் பார்ப்பது என்றாலும் யுடியூப் பக்கமே செல்வார்கள். இதில் வீடியோ சாங்ஸ் அதிக அளவில் பார்க்கப் படுகின்றன. உலகெங்கும் உள்ள வீடியோக்கள் இருப்பதால் உலகளவில் பிரபலமான மைக்கேல் ஜாக்சன், ஜெனிபர் லோபஸ், ஷகிரா போன்ற பாடகர்களின் பாடல்களைத் தேடி எடுத்து பார்த்து விடலாம். ஆனால் சிலருக்கு ஆங்கில வீடியோக்களைப் பார்க்கும் போது அதன் பாடல் வரிகள் புரியாமலே இருக்கும். பாடல்வரிகள் வேண்டுமென்றால் மெனக்கெட்டு அதனை முன்னும் பின்னும் ஓடவிட்டு கேட்பார்கள். இல்லையெனில் இணையத்தில் குறிப்பிட்ட பாடலை வைத்து வரிகளைத் தேடுவார்கள்.

    1. Lyrics for Firefox

    யுடியூபில் பாடல்களை வீடியோவாகப் பார்க்கும் போதெ பக்கத்தில் பாடல் வரிகளும் தோன்றினால் நன்றாக இருக்கும் என நினைக்கலாம். இதற்கு உதவக்கூடியதாக பயர்பாக்ஸ் நீட்சி ஒன்று இருக்கிறது. இதன் பெயர் Lyrics. இது பாடலுக்கு ஏற்ற பாடல்வரிகளை இணையத்தில் தேடி எடுத்து அருகிலேயே காண்பித்து விடும். இதனால் நாம் பாடல்வரிகளைத் தேடும் வேலை மிச்சமாகிறது. ஆனால் தற்போது ஆங்கிலப் பாடல்களுக்கு மட்டுமே அதிமாக பாடல் வரிகள் வருகின்றன. சில தமிழ்ப் பாடல்களுக்கும் ஆங்கில வரிகள் கிடைக்கின்றன. இதை கீழே உள்ள சுட்டியில் கிளிக் செய்து நிறுவிய பின் ஒருமுறை பயர்பாக்சை ரீஸ்டார்ட் செய்து கொள்ளவும்.

     
    பின்னர் யுடியூபில் வீடியோ பார்க்கும் போது அதன் அருகிலேயே சைட்பாரில் Lyrics என்ற இடத்தில் பாடல்வரிகளைக் காண்பிக்கும்.
    மின்னலே வசிகரா பாடல்- http://www.youtube.com/watch?v=e_TZaqqnyJg

    2.Chrome - Music video lyrics for Youtube

    நீங்கள் குரோம் உலவி பயன்படுத்தினால் அதற்கு தனியாக ஒரு நீட்சி இருக்கிறது. ஆனால் இது மேற்குறிப்பிட்ட பயர்பாக்ஸ் நீட்சி அளவுக்கு அதிகான வீடியோக்களுக்கு பாடல்வரிகளைக் காண்பிக்க வில்லை. இருந்தாலும் பயன்படுத்தலாம்.குரோம் உலவியில் இந்த சுட்டியைக் கிளிக் செய்து நீட்சியை Add to Chrome கொடுத்தால் நிறுவப்படும். Download Music video lyrics for youtube

     
     
    பிறகு குரோம் உலவியில் யுடியூபில் எதேனும் வீடியோ பார்க்கும் போது அதற்குப் பொருத்தமான பாடல் வரிகள் இருந்தால் உலவியின் மேல்பகுதியில் அட்ரஸ்பாரில் இருக்கும் ஐகான் Lyrics என்று காட்டும். அதைக் கிளிக் செய்தால் பாடல் வரிகள் காட்டப்படும்.

     
    நிறுவிய பின்னர் உதாரணத்திற்கு இந்த வீடியோவை மாதிரிக்குப் பார்த்துக் கொள்ளுங்கள். http://www.youtube.com/watch?v=weRHyjj34ZE&feature=relmfu
     

    ஆபாச வீடியோக்களை முற்றிலுமாக youtub இல் இருந்து தவிர்ப்பதற்கு

    By: Unknown On: 07:32
  • Share The Gag

  •  

     


     
     
    இணையம் என்பது எந்த அளவிற்கு நல்ல செய்திகளை கொடுக்கிறதோ அதற்கு இருமடங்கு கெட்ட செய்தியையும் கொடுக்கிறது. இணையத்தில் வீடியோவை காண பெரும்பாலானவர்கள் உபயோகிப்பது இந்த youtube தளம். படிப்பிற்கு சம்பந்தமான வீடியோக்கள் மற்றும் நகைச்சுவை வீடியோக்கள் இப்படி பல வகைகளில் வீடியோக்கள் குவிந்து உள்ளன இதில் பல ஆபாச வீடியோக்களும் உள்ளன.

    youtube ல் இந்த ஆபாச வீடியோக்களை முற்றிலுமாக தவிர்க்க ஒரு வசதியை youtube தளம் வழங்குகிறது.


    முதலில் இந்த லிங்கில் www.youtube.com க்ளிக் செய்து youtube தளத்திற்கு செல்லுங்கள்.
    இப்பொழுது உங்களுக்கு youtube தளம் வந்து இருக்கும். அதில் நீங்கள் கீழ் பகுதிக்கு செல்லுங்கள்.

    அங்கு Safety mode : Off என்று லிங்க் இருக்கும் அதை க்ளிக் செய்யுங்கள். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளுங்கள்.


    இந்த லிங்கை க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும்.
    இதில் நீங்கள் On என்பதை க்ளிக் செய்து Save கொடுத்து விடுங்கள்.



    அவ்வளவு தான் youtube ல் ஆபாச வீடியோக்கள் முற்றிலுமாக தவிர்க்க பட்டுவிட்டது.
    இதை உறுதி செய்ய நீங்கள் ஏதேனும் கொடுத்து தேடி பாருங்கள் No videos found என்ற செய்தியே வரும்.