Saturday, 26 July 2014

கமல் வெளியிடும் சிகரம் தொடு!

By: Unknown On: 21:10
  • Share The Gag
  • கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விக்ரம் பிரபு. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான இவர், தொடர்ந்து இவன் வேற மாதிரி, அரிமா நம்பி படங்களில் நடித்தார்.

    இப்போது தூங்காநகரம் இயக்குநர் கெளரவ் இயக்கத்தில் சிகரம் தொடு என்ற படத்தில் நடித்து வருகிறார். விக்ரம் பிரபு ஜோடியாக மோனல் கஜார் நடிக்கிறார். இமான் இசையமைத்துள்ளார். அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

    இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீடு ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெற இருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் படத்தின் ஆடியோவை வெளியிடுகிறார். இதற்கான விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    ஏழைகளின் சத்துள்ள தாவர டானிக்.....??

    By: Unknown On: 19:20
  • Share The Gag

  • பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை செய்யும் சத்து உள்ள எளிய உணவு வேறு இல்லை எனலாம்
    .

    பசலைக் கீரை பொதுவாக மூன்று வகைப்படும். சிறு வெற்றிலை அளவில் செந்நிறமுடையதாக இருக்கும் இலைகளுடன் கொடியாகப் படரும் பசலை கொடிப்பசலை எனப்படுகிறது. இதை வீட்டுத் தோட்டத்திலும் தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம்.


    தரைப் பசலையின் இலைகள் மிகவும் சிறுத்து இளஞ் சிவப்பாகவும், பச்சையாகவும் இருக்கும். இது தரையில் படரும்.


    இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம்.


    ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது. அதே சமயம் இதிலிருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் உடலில் இரும்பு, கால்சியம் சேராமல் தடுக்கிறது. இதனால் இதய நோயாளிகள் இந்தக் கீரையை அளவுக்கு மீறி சாப்பிடக் கூடாது.


    இந்தக் கீரையில் வைட்டமின் A B C சத்துகள் உள்ளன. சுண்ணாம்புச் சத்து, நார்ச் சத்து, இரும்புச் சத்து அடங்கியது. இது தாதுவைக் கெட்டிப்படுத்தும். மூளைக்கு சக்தி கொடுக்கும். உடல் வறட்சியை அகற்றும். உள் சூட்டைப் போக்கும். மருத்துவக் குணங்கள் இதில் மிக அதிகமாக உள்ளன. பச்சையம் கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது.


    பசலைக் கீரை ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது. ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது. இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது.


    இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறைத் தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த விருத்திக்கும் உதவுகிறது.


    ஒரு கப் பசலைக் கீரையில் இருக்கும் உணவுச் சத்து: கலோரி 40, கொழுப்பு 0, சோடியம் 80 மில்லி கிராம், விட்டமின் ஏ 6800 IU (இது ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவை விட ஒன்றரை மடங்கு அதிகம்), விட்டமின் சி 28 மி.கிராம், ஃபோலாசின் 200 மி.கிராம், கால்சியம் 100 மி.கிராம், பொட்டாசியம் 560 மி.கிராம்.


    இலையை நன்றாக அரைத்து கொப்புளம், கழலை, வீக்கம் ஆகியவற்றின் மீது பற்றிட்டால் அவை குணமாகும். இலையை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் சூட்டினால் உண்டான தலைவலி நீங்கும். பசலைக் கீரை ஏழைகளின் சத்துள்ள தாவர டானிக்!

    அம்மாவின் அறிக்கையால் உடைந்து போன விஜய்...?

    By: Unknown On: 16:25
  • Share The Gag
  • ஒரு வார இதழ் ஒன்று விஜய்க்கு ஆகஸ்ட் 15ம் தேதி மதுரையில் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை வழங்க இருப்பது நமக்கு தெரியும்.

    இதற்காக விஜய் அவரது நண்பர்களை இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு நிறைய பேருக்கு போன் போட்டு அழைப்பு விடுத்துவருவதாக நாம் அறிவித்திருந்தோம்.

    இந்நிலையில், இச்செய்தி முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் அலுவலகத்துக்கு சென்றுள்ளது.

    இச்செய்தியை அறிந்த அம்மா, ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர போராளிகளுக்கு மரியாதை செலுத்தும் நாளாக நாம் கொண்டாடுகிறோம்.

    அதை இதுபோன்ற விழாக்களை நடத்தி உங்கள் தனிப்பட்ட செயல்களுக்காக தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று விஜய்க்கு செய்தி அனுப்பியுள்ளார்.

    அம்மாவின் இந்த செய்தியால் மிகவும் வருத்தத்தில் இருக்கிறாராம் விஜய்.


    ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது எது?

    By: Unknown On: 15:41
  • Share The Gag

  • 1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும்.

    2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம்
    " இதெல்லாம் எங்க உறுப்படப்போது? " என்பது
    போன்றே இருக்கும்.

    3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம் , அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்குவார்கள்.உங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள்.

    4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும்
    ரசிப்பீர்கள்.

    5) உடல் பருமன் ஏறாமல் , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது.

    6) தினமும் shave செய்யாவிட்டால் , வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள்.

    7) ஞாயிற்று கிழமைகளில் விளையாடும் கிரிக்கெட் மேட்ச் க்கு உங்களை கூப்பிட உங்கள் தெரு இளவட்டங்கள் மறந்து விடுவார்கள்.

    உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ , சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம் எப்போது திருமணம் என்பார்கள்?மாமாக்களோ உன் career பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க என்பார்கள்?

    9) இந்த உலகை வெல்வதற்கான அத்தனை தன்னம்பிக்கையும் உங்களிடம் நிறைந்திருக்கும்.ஆனால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் குறைவாக இருக்கும்.

    10) இந்த உலகைப் பற்றி உங்களுக்கு பள்ளிகளில் என்னக் கற்பிக்கப் பட்டதோ , அது அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியவந்திருக்கும்.

    11) வேலைக்காக எழுதும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் கூட , வேலை கிடைத்திருக்காது.

    12) சிபாரிசு என்றவுடன் வேலை கிடைக்கும்.இங்கு எல்லாமே அரசியல் தான் என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.

    13) காதலுக்கு கண்கள் உண்டு என்பீர்கள்.காதலை விட நட்புச் சிறந்தது என்று உணர்வீர்கள் .

    14) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக் கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை மட்டுமே உங்கள் மனசாட்சியை வழி நடத்தும்.

    15) இப்படி ஒரு வாழ்க்கையைத் தான் எதிர்க்கொள்ளப் போகிறோம் என்று சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள்.

    # எந்த அளவுக்கு துல்லியமாய் எழுதி இருக்கிறேன் என்றுத் தெரியாது.இதைப் படிக்கையில் நீங்கள் மகிழ்ச்சி அடைந்தால் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

    மகளிர் பெண்களே இப்படி சமாளியுங்க…!

    By: Unknown On: 12:01
  • Share The Gag
  • மகளிர் பெண்களே இப்படி சமாளியுங்க…!

    `உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி’ என்று பழமொழி சொல்வார்கள். பெண்களுக்கு இந்த சொலவடை நிச்சயம் பொருந்தும்.

    புதிதாக மணம் முடித்து கணவர் வீட்டில் காலெடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் `கடி’கள், ஏச்சு பேச்சுகள் அவர்களின் மனதை ரொம்பவே துடிக்க வைத்து விடும். அப்படிப்பட்ட நிலைமையை எப்படி சமாளிப்பது? இங்கே சில ஐடியாக்கள்…

    `இந்த வீட்ல நான்தான் எல்லா வேலையும் பார்க்க வேண்டி இருக்குது. வேலைக்குப் போனா வீட்டு வேலையை பார்க்கக்கூடாதா? பார்த்தா குறைஞ்சு போகுமோ’ – வேலைக்குப் போகும் மருமகளை, ஏதோ சிங்காரித்து சினிமாவுக்கு சென்று வருவதைப்போல நினைத்து இப்படிப் பேசும் மாமியார்கள் இருக்கிறார்கள்.

    இப்படிப்பட்ட சூழலை நீங்கள் சந்தித்தால், “நான் தினமும் ஆபீஸ் போய்விட்டு, இத்தனை மணிக்குத்தான் திரும்புவேன், நான் வந்தபிறகு இந்தெந்த வேலைகளை கவனித்துக் கொள்கிறேன்” என்று முன்கூட்டியே சொல்லிவிடுங்கள்.

    `உங்கப்பா நல்லா இருக்கும்போதே உனக்கு வேணுங்கறதை கேட்டு வாங்கிட்டு வந்துடு, பின்னாடி உங்க அண்ணன்கள்கிட்டே எதிர்பார்த்துகிட்டு நிக்க முடியாது பாரு…”

    இந்த வார்த்தைச் சாட்டைக்கு இப்படி பதிலளியுங்கள்..”எனக்கு என்ன செய்யணும்னு எங்க அப்பா அம்மாவுக்குத் தெரியும். நான் போய் கேட்க வேண்டியதில்லை, கேட்கவும் மாட்டேன். எனக்கு தேவைன்னு தெரிஞ்சா அவங்களே தேடி வந்து செய்வாங்க”

    “உன் பெண்டாட்டி வரவர என்னை மதிக்கிறதே இல்லை. நான் சொன்னா காதிலேயே வாங்காமப் போறா, ஆபிசிற்கு ரொம்ப குலுக்கி மினுக்கிப் போறா?”

    இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பத்திலேயே உங்களின் உண்மை நிலையை கணவரிடம் விளக்கி விடுவதுதான் சிறந்த வழி. மாமியாரின் கோபத்துக்கான காரணத்தை தெரிந்து பேசித் தீர்க்க முடியுமா? என்றும் முயற்சி செய்யுங்கள்.

    “இவள் காசை கன்னாபின்னான்னு செலவழிச்சு கரியாக்குறா. திடீர்ன்னு ஆயிரம், ரெண்டாயிரத்துக்கு புதுப்புடவை எடுத்துக்கிறா, நகைநட்டு வாங்கி குவிக்கிறா, என் மகன் பாவம் வாயில்லாப்பூச்சி, எதையும் கேட்கறதில்லை.”எல்லோர் வீட்டு மாமியார்களும் கூறும் பொதுவான `கம்ப்ளெயிண்ட்’ இது…

    “சிக்கனம் தேவைதான். அதுக் காக டிரஸ்ஸில் சிக்கனம் பிடிக்கலாமா? தேவைக்குத்தான் வாங்கி இருக்கிறேன்” என்று சொல்லுங்கள். அடுத்து விசேஷ நாட்களில் மாமியார், நாத்தனாருக்கும் (கடமைக்காக அல்லாமல் அன்புடன்) ஒரு புடவை எடுத்துக் கொடுங்கள். பிரச்சினை வந்தவழி தெரியாமல் ஓடிப் போய்விடும்.

    “பெரிய ஆபீசர் வீட்ல இருந்து வந்தவளே பாத்திரம் கழுவுறா, எல்லா வேலையும் பாக்குறா? இவளுக்கென்ன? மூத்த மருமகள் கேட்ட அடுத்த மாசமே என் மகனுக்காக பைக் வாங்கி தந்துட்டா..! உன்கிட்ட கேட்டாலும் கிடைக்குமா, உங்கப்பா நெலமைதான் ஊருக்கே தெரியுமே?

    `இப்படிப் பேசுவது சுத்தமாகப் பிடிக்கவில்லை’ என்பதை கணவரிடம் நேரடியாகச் சொல்லி விடுங்கள். அதன்பிறகு ஓரளவாவது இந்த மாதிரி ஒப்பீடு குறையும்.

    எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் `எங்கம்மாவை அப்படிப் பேசாதே’ என்று சொல்ல வாரிசு வளரும் வரை நீங்களாகத்தான் சமாளிக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் புதுப்பெண்களே!

    30 முறை காதலில் தோற்ற ‘கழுகு’ கிருஷ்ணா!

    By: Unknown On: 11:28
  • Share The Gag
  • கழுகு’ கிருஷ்ணா நடித்துவரும் ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தில் கிருஷ்ணாவின் தம்பியாக, இரண்டாவது ஹீரோவாக நடித்திருக்கிறார் விஜய் டிவி புகழ் மா.கா.பா. இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி  இயக்குகிறார்  ராஜமோகன்.

    படம் பற்றி இயக்குனர் ராஜமோகனிடம் கேட்டால், “14 முறை தோற்ற கஜினி முகமதுவை மிஞ்சி 30 முறை காதலில் தோற்ற வானவராயன் (கிருஷ்ணா),  யாருமே என்னை காதலிக்கவில்லையே என்று ஏங்கும் வல்லவராயன் (மா.கா.பா.ஆனந்த்), மோனல் கஜாரின் காதல்,  வயதான சௌகார்ஜானகியின் அழிச்சாட்டியம் என காமெடி கலாட்டா தான் இந்த படம்” சிம்பிளாக இப்படி சொல்கிறார் ராஜமோகன்..

    சுருக்கமாக சொன்னால் இது நம்ம வீட்டில் நடந்த, நடக்கும், நமக்கு அடுத்த வீட்டில் நடந்து கொண்டிருக்கும் கதையாம். இந்தப்படத்தை பார்த்த டாக்டர் எல்.சிவபாலன் அவர்கள் படத்தின் முழு உரிமையையும் வாங்கி விரைவில் வெளியிடுகிறார்

    சிம்பு இப்படி செய்யலாமா - கவலையில் பாண்டிராஜ்

    By: Unknown On: 09:54
  • Share The Gag
  • சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுத்து போர் அடித்து போய் ஒரு புதிய மாற்றத்துக்காக சிம்புவிடம் கதை சொல்லி இது நம்ம ஆளு படத்தை எடுக்க ஆரம்பித்தார் பாண்டிராஜ்.

    ஆனால் படம் ஆரம்பித்ததிலிருந்து ஒரே பிரச்சனை தான், ஷூட்டிங் தள்ளிபோய் கொண்டு இருந்தது பின்னே சிம்பு வைத்து படம் எடுப்பது என்றால் சும்மாவா, தற்போது வரை படம் 75 சதவிதம் கூட படம் முடியவில்லை.

    இது வேலைக்கு ஆகாது என்று பாண்டிராஜ் சூர்யாவிடம் சிறுவர்கள் பற்றி வேறு ஒரு பரிமாணத்தில் கதை சொல்லி ஓகே வாங்கி படப்பிடிப்பு ஜோராக நடந்து கொண்டு இருக்கிறது, இருந்தாலும் அவருக்கு சிம்பு படம் முடிக்கவில்லையே என்று ஒரு கவலை இருந்தது, இடையில் இது நம்ம ஆளு படத்தில் இன்னொரு வேடத்துக்காக டாப்சியை புக் செய்தார் பாண்டிராஜ், அவரும் அவர் கதாபாத்திரம் பிடித்து போக ஓகே சொல்லியுள்ளார். சரி என்று சம்பளம் விஷயமாக (படத்தின் தயாரிப்பாளர் சிம்பு தானே) சிம்பு பாக்க சென்றவருக்கு செம அதிர்ச்சி.

    இந்த வாரம் இது நம்ம ஆளு படப்பிடிப்பை நடத்தி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவரின் நினைப்பில் விழுந்தது சம்மட்டி அடி. சிம்பு தன் ஹேர் ஸ்டைலை முற்றிலும் மாற்றியிருந்தாராம். அதுவும் இரண்டு பக்கமும் டைட்டாக கட் பண்ணி.

    நீங்க இப்படி கட் பண்ணிட்டு நின்னா, கன்ட்டினியூட்டியே இருக்காதே? இது வளர இன்னும் ஒரு மாசம் ஆகும் போலிருக்கே’ என்று பதறிப் போயிருக்கிறார் பாண்டி. ‘வளரட்டுமே… அதுக்கென்ன இப்போ? வளர்ந்த பிறகு சொல்லியனுப்புறேன்… வாங்க’ என்றாராம் சிம்பு. டாப்ஸி விவகாரத்தை அப்படியே மறந்துவிட்டு ரிட்டர்ன் ஆகிவிட்டார்


    ஆண்கள் மறைக்க விரும்பும் ரகசியங்கள்!

    By: Unknown On: 09:09
  • Share The Gag
  •  * ஆண்கள் தங்கள் சம்பளம் எவ்வளவு என்பதை மற்றவர்களிடம் மறைக்க விரும்புகிறார்கள். அதுபோல் தங்கள் செலவையும் ரகசியமாகவே வைத்திருக்க விரும்புகிறார்கள். அவர்களுடைய வரவு – செலவுகளை மற்றவர்கள் கணக்கிடுவதை விரும்பமாட்டார்கள். வருமானம் என்பது அவர்களுடைய பலம். செலவு என்பது பலவீனம். இரண்டுமே மற்றவர்களுக்கு தெரியக் கூடாது என்று நினைக்கிறார்கள். ஆண்கள் எது எதற்கு செலவிடுகிறார்கள் என்பதை அறிந்தாலே, அவர்களுடைய பலவீனம் வெளிப்பட்டுவிடும். அதனால் செலவை மிகமிக ரகசியமாக பாதுகாக்கிறார்கள்.

     * ஆண்கள் தங்கள் வாகனம் ஓட்டும் திறமையை மற்றவர்கள் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதை வெறுக்கிறார்கள். ஆண் தனக்கு கார் ஓட்டத் தெரியும் என்று கூறும்போது, அவரோடு நெருக்கமாக பழகும் பெண், ‘உங்களை நம்பி நான் காரில் ஏறலாமா?’ என்று கேட்டு விடக்கூடாது. தன்னிடம் அந்தப் பெண் பாதுகாப்பாக இல்லை என்ற உணர்வு ஆணுக்கு ஏற்பட்டு, தனது ஆண்மைக்கே அது ஒரு சவால் என்று நினைத்துவிடுகிறார்கள். அதனால் பெண்கள், தங்களுக்கு பிடித்தமான ஆண் கார் ஓட்டுவதில் சந்தேகம் இருந்தால் அதை அவரிடம் நேரடியாக தெரிவிக்காமல், ‘நாம் வாடகைக்காரில் சென்றால் அதிக மகிழ்ச்சியாக இருக்கும்’ என்று கூறலாம். வேறு டிரைவரை நியமிப்பது தங்களது மகிழ்ச்சியை அதிகரிக்கும் செயல் என்றும் கூறலாம்.

     * எப்போதும் தங்கள் தாய்மீது அதிக பற்று வைத்திருப்பார்கள். அந்த பற்று திருமணத்திற்கு பின்பும் தொடரும். இதை தடுக்க நினைத்தால் குடும்பத்தில் பிரச்சினைகளே மிஞ்சும். அவர்கள் தங்கள் தாய்மீது வைத்திருக்கும் அன்பால் மற்றவர்களுக்கு எந்த தீங்கும் விளையாது என்பதை மனதில் கொண்டு, அவரை போட்டியாளராக நினைக்காமல் வாழ்வதே அமைதிக்கு வழி. அது மட்டுமல்ல ஆண்களை எளிதில் வசப்படுத்த, அவர்களுடைய தாய்மீது அன்பு செலுத்துவதே குறுக்கு வழி. தங்களுடைய தாயை மற்றவர் மிகுந்த மரியாதையோடு நடத்த வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்ப்பார்கள். மாறாக தாயின் குறைகளை மற்றவர்களிடம் கூறுவதையோ, மற்றவர்கள் முன்னிலையில் தாயை மோசமாகநடத்துவதையோ அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

     * நட்புக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். அதனால் தங்கள் நண்பர்களைப் பற்றிய ரகசியங்களை காப்பார்கள். திருமணமான பின்பு, தனது மனைவியும் மற்றவர்களும் தங்கள் நண்பர்களை தன்னைப்போல் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். தன் நண்பன் எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும், அவனுக்கு நல்லவன் என்ற மேல்பூச்சு பூசுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். அவர்கள் நட்பு விஷயத்தில் யாரும் தலையிட்டால்அவர்களுக்குபிடிக்காது.

    ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?

    By: Unknown On: 01:03
  • Share The Gag
  • ஒரு ஆண் கடுமையா உழைச்சா... பொண்டாட்டியைக் கண்டுக்க மாட்டேங்கறான்னு மட்டம் தட்டுவாங்க.

    பொண்டாட்டியை கவனிச்சுக்கிட்டா.. அவளையே சுத்தி சுத்தி வரான். வேலை வெட்டி இல்லாத பயன்னு கட்டம் கட்டுவாங்க..

    அது போகட்டும்.. ஒரு பொண்ணைப் பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னா அது ஈவ் டீசிங்..ன்னு கெளப்பி விடுவாங்க.

    கண்டுக்காம போனா அழகை ரசிக்கத் தெரியாத ஜடம்..!ன்னு அமுக்கி வைப்பாங்க.

    எதுக்காச்சும் அழுதோம்ன்னா பொம்பள மாதிரி அழறான் பாரும்பாங்க..

    திடமா இருந்தா நெஞ்சுல ஈவு இரக்கம் இல்லாத அரக்கன்னு வாருவாங்க..

    பொண்டாட்டியை கேட்டு முடிவெடுத்தா தானா முடிவெடுக்கத் தெரியாத முட்டாள்..ன்னு பட்டம்.

    சரின்னு நாமளே ஒரு முடிவு எடுத்தா தான் ஆம்பிளைங்கற அகங்காரம்..ன்னு திட்டும்.

    ஏதாவது பிடிச்சது வாங்கிட்டுப் போய் கொடுத்தா "என்னத்துக்கு இப்போ காக்கா பிடிக்கிறீங்க..?" அப்படின்னு ஒரு நக்கல்.

    ஒன்னும் வாங்கிட்டுப் போகலேன்னா "ஒரு முழம் பூவுக்கு விதியத்துப் போயிட்டேனே..!" ன்னு மூக்கை சிந்திக்கிட்டு விக்கல்..

    ஒரு குறிக்கோளோடு உழைச்சா, " வேலையைக் கட்டிகிட்டு மாரடிக்க வேண்டியதுதானே.. எதுக்கு உங்களுக்கு பொண்டாட்டி..?" ன்னு ஏசல்.

    சரின்னு சினிமாவுக்கு அழைச்சுட்டுப் போனா, " அந்த ஹீரோ மாதிரி ஒரு லட்சியம் வேணுமுங்க மனுஷனுக்கு.. எப்படி உழைச்சு முன்னேறி கார் பங்களா வாங்கினான் பாத்தீங்களா..?" ன்னு பூசல்..

    இந்த கருத்து ஒஹோ என்று இருக்கிறதுன்னு எழுதினா, ஆனாதிக்க உலகம் அப்படின்னு சொல்லுவாங்க.

    இது தப்பு பெண்கள் நல்லவர்கள்ன்னு எழுதினா உலகம் தெரியாத பைத்தியம்ன்னு சொல்லுவாங்க.


    இது தான் காரணங்களாம் ஆண்கள்  சீக்கிரம் சாகறத்துக்கு... இது உண்மையா நண்பர்களே?