கமல்ஹாசன் விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்து முடித்து விட்டு, அடுத்த படமான த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கிலும் நடிப்பதற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டார். ஆனால், விஸ்வரூபம் 2 படம் எப்போது வெளி வரும் என்பது மட்டும் இன்னும் உறுதியாகத் தெரியாமலே உள்ளது. இந்தப் படத்தை முடித்துவிட்டுத்தான் உத்தம வில்லன் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இப்போது உத்தம வில்லன் படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் ஆரம்பமாகிவிட்டன. இந்த படமே விரைவில் வெளிவந்துவிடலாம் என்ற நிலையில் விஸ்வரூபம் 2 படத்தைப் பற்றிய சத்தத்தையே காணோம்.
அதற்குக் காரணமாக பல விஷயங்கள் சொல்லப்படுகிறது. படத்தை வாங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனம் அவர்கள் தயாரித்துள்ள மற்ற படங்களின் வெளியீட்டை முடித்துவிட்டுத்தான் இந்த படத்தை வெளியிட முடிவெடுத்துள்ளதாகவும் சிலர் சொல்கிறார்கள். ஆனால், சிலரோ தயாரிப்பு நிறுவனம் பல படங்களை ஒரே நேரத்தில் தயாரித்ததால் சிக்கலில் மாட்டிக் கொண்டார்கள் என்கிறார்கள். இன்னும் சிலரோ கமல்ஹாசன் உத்தம வில்லன் படம் முதலில் வருவதை விரும்புகிறார், அதற்குப் பின்னர் விஸ்வரூபம் படத்தை வெளியிடலாம் என முடிவு செய்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.
உத்தம வில்லன் அநேகமாக செப்டம்பர் மாதம் வெளிவர வாய்ப்புள்ளது என்றும் அதற்குப் பின்னர் தீபாவளி நாளில் விஸ்வரூபம் 2 வரலாம் என்றும் கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். கமல்ஹாசன் தற்போது நடிக்க ஆரம்பித்துள்ள த்ரிஷ்யம் ரீமேக் படம் டிசம்பரிலோ, அல்லது பொங்கலுக்கோ வெளிவரும் என்கிறார்கள். ஒரே வருடத்தில் கமலின் மூன்று படங்கள் வர வாய்ப்புள்ளது ஆச்சரியமான ஒன்று.