Tuesday, 12 August 2014

சமந்தாவுடன் இணையும் நம்ம முண்டாசுப்பட்டி முனிஷ்காந்த்!

By: Unknown On: 22:13
  • Share The Gag
  • தமிழ் சினிமாவில் என்றும் காமெடி நடிகர்களுக்கு தான் பஞ்சம். அதிலும் இன்றைய சூழ்நிலையில் சந்தானம், சூரி, சிங்கம்புலி என்று விரல் விட்டு எண்ணி விடலாம்.

    ஆனால் நடித்த ஒரே படத்தில் நம் எல்லோரையும் கவர்ந்தவர் முனிஷ்காந்த். முண்டாசுப்பட்டியின் முதல் ஹீரோ என்று சொன்னால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

    தற்போது இவர் விஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடிக்கும் பத்து எண்றதுக்குள்ள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    என்ன லிங்குசார் வாயிக்கு வந்ததெல்லாம் சொல்லலாமா..?

    By: Unknown On: 21:43
  • Share The Gag
  • சூர்யாவின் அஞ்சான் படம் வருகிற 15ம் தேதி கோலாகலமாக உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகிறது.

    இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்த லிங்குசாமி அஞ்சான் அனுபவத்தை பற்றி சமீபத்தில் நம்மளுடன் ஒரு ஆர்வமான விஷயத்தை பகிர்ந்து கொண்டார்.

    அதாவது பையா பட நேரத்திலே அஞ்சான் கதையை எழுதி அதை கார்த்தியிடம் சொன்னாராம். கதை கேட்ட கார்த்தி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, என் அண்ணனும் கூட நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்.

    பின்பு இந்த கதையை என்னால் 2013ம் ஆண்டு சூர்யாவிடம் சொல்ல முடிந்தது, சில காரணங்களால் இப்படத்தில் கார்த்தி நடிக்க முடியாமல் போனது வருத்தமாக இருந்தாலும் அதை ஈடு கட்டும் விதமாக வித்யுத் சிறப்பாக நடித்துள்ளார் என்று கூறினார்.

    கிஷோர் நடிப்புல என்ன குறை...? அவருக்கு எதற்கு சிறப்பு பயிற்சி..?

    By: Unknown On: 19:33
  • Share The Gag
  • ‘இளமி’ படத்தில் கிஷோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். அவர் இதுவரை ஏற்று நடித்திராத வேடம் இது. 18–ம் நூற்றாண்டு காலகட்டத்தை உள்ளடக்கிய கதை என்பதால், கிஷோர் கதாபாத்திரம் மிக வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது.

    அந்த காலகட்டத்தில் பேசப்பட்ட தமிழ் வேறு மாதிரியான உச்சரிப்பாக இருக்கும் என்பதால் கிஷோருக்கு வசனங்களும், அதற்கான அர்த்தமும் முன்கூட்டியே எழுதிக் கொடுக்கப்பட்டது.

    அத்துடன், பல காட்சிகளில் அவர் குதிரையை பயன்படுத்த வேண்டியிருப்பதால், குதிரையேற்ற பயிற்சியும் செய்து வருகிறார்.

    இந்த படத்தின் கதாநாயகன் யுவன், ‘சிக்ஸ் பேக்ஸ்’ உடற்கட்டுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்.

    மயில் இறகாய் வருடும் காவியத் தலைவனின் 'யாருமில்லா' பாடல்.. சூப்பரோ சூப்பர்..!

    By: Unknown On: 18:33
  • Share The Gag
  • சித்தார்த், பிரித்விராஜ் நடித்து வரும் காவியத் தலைவன் படத்தின் யாருமில்லா தனியரங்கில் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பாடல் தான் தற்போது ஃபேஸ்புக்கில் டிரெண்ட் ஆகிக் கொண்டிருக்கிறது.

    வசந்த பாலன் இயக்கத்தில் சித்தார்த், பிரித்விராஜ், வேதிகா, நாஸர் நடித்து வரும் படம் காவியத் தலைவன். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசைப்பணியை கவனிக்கிறார். இந்நிலையில் படத்தில் வரும் யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே என்று துவங்கும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

    மயில் இறகாய் வருடும் காவியத் தலைவனின் 'யாருமில்லா' பாடல்: ஃபேஸ்புக்கில் டிரெண்ட் ஆகிறது

    இந்த பாட்டு தான் தற்போது ஃபேஸ்புக்கில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. ரஹ்மானின் இனிய இசையில் வெளியாகியுள்ள இந்த பாடல் கேட்டதுமே மனதில் பதிந்துவிடும் வகையில் உள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஒரு பாடலுக்கே இப்படி அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் வரும் 18ம் தேதி இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது. யாருமில்லா பாடலின் இசை மனதை மயில் இறகால் வருடுவது போன்று உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆக காவியத் தலைவன் ஏற்கனவே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டான்.

    கத்தி படத்திற்கு ஆதரவு தரும் சீமான் - பின்னணி என்ன? பகலவன்தான் காரணமா..?

    By: Unknown On: 17:33
  • Share The Gag
  • விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் கத்தி.

    இப்படத்தை ஐயங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து லண்டனை சேர்ந்த லைகா புரொடக்ஷ்ன்ஸ் சுபாஷ்கரன் அல்லிராஜா தயாரித்து வருகிறார். இவர், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் நெருங்கிய உறவினர் என்று கூறப்படுகிறது. இதனால் படத்திற்கு பல்வேறு தமிழ் அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால் இதை தயாரிப்பு தரப்பு மறுத்துள்ளது.

    மேலும் இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் தமிழ் தலைவர்களான வைகோ, நெடுமாறன், தொல்.திருமாவளவன், சீமான் உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளனர் கத்தி படக்குழு. இந்நிலையில் கத்தி படத்தை எதிர்க்காமல் சீமான் அமைதி காப்பதன் பின்னணியில் லைகா மொபைல் நிறுவனமே சீமானின் அடுத்த படத்தைத் தயாரிக்கும் திட்டம் இருப்பதாக இணையதளங்களில் பரபரப்பாகச் செய்திகள் பரவி வருகின்றன.

    இது தொடர்பாக சீமான் கூறுகையில், கத்தி படத்தில் தமிழர்களுக்கு எதிரான காட்சிகளோ, கருத்துகளோ இருந்தால் அதனை எதிர்க்கிற முதல் ஆளாக நான் தான் இருப்பேன். அந்தப் படத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதே தெரியாமல் யாரோ கிளப்பும் சர்ச்சைகளுக்காக அந்தப் படத்தை எதிர்க்க நான் ஒன்றும் ஏதும் தெரியாத மூர்க்கன் அல்ல. இரண்டு வருடங்களாக கலைப்புலி தாணு என்னைப் படம் பண்ணச் சொல்லி வருகிறார். அப்படியிருக்க அடுத்த நிறுவனத்துக்கு நான் காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? எதையாவது வம்படியாகக் கிளப்பிவிட்டடால் சீமான் சிலிர்த்துக் கொண்டு கிளம்பிவிடுவார் என யாரும் கனவு காண வேண்டாம்.

    எதை ஆதரிப்பது எதை எதிர்ப்பது என்பது நானும் என் கட்சியும் முடிவு செய்ய வேண்டிய விசயம். சீமான் எதற்கு கத்தி படத்தை எதிர்க்கவில்லை என பலரும் உசுப்பேற்றுவதற்காக நான் என் சொந்தத் தம்பிகள் மீது பாய முடியாது. லைகா மொபைல் நிறுவனம் தமிழகத்தில் இல்லை. அப்படியிருக்க அந்த நிறுவனத்துக்கும் ராஜபக்சேவுக்கும் தொடர்பு இருக்கிறது எனச் சொல்பவர்கள் அந்த நிறுவனம் வர்த்தகத்தை மேற்கொள்ளும் லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் அதற்கான எதிர்ப்பைக் காட்ட வேண்டும். என ஆவேசமாகச் சொன்னார் சீமான்.

    இதனிடையே கத்தி படத்தை சீமான் எதிர்க்காததற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. சீமான் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்த பகலவன் படத்தை லைகா நிறுவனமே தயாரிக்கப் போவதாகவும் ஆனால், அதில் நாயகனாக விஜய் அல்ல சிம்பு நடிக்கவிருப்பதாகவும் இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. கத்தி படத்தை ஆதரித்தாலோ அல்லது எதிர்க்காமல் இருந்துவிட்டாலோ நடிகர் விஜய்யின் ரசிகர்களை தன்னுடைய அரசியல் பாதையில் இணைக்கலாம் என்றும் அது தன் தமிழ்நாட்டு அரசியலுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் சீமான் கருதுவதாகவும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    பாலா பார்த்தா திட்டுவாரே..! பதறுகிறாராம் வரலட்சுமி..! ‘சுமார் மூஞ்சு குமாரிகளும் விதிவிலக்கல்ல..?

    By: Unknown On: 16:49
  • Share The Gag
  • நல்லா வந்துச்சும்மா டாட்டூ கலாச்சாரம்! முன்னணி நடிகைகள் மட்டுமல்ல, பின்னணியேயில்லாத ‘சுமார் மூஞ்சு குமாரிகளும்’ கூட இந்த டாட்டூவில் மயங்கிக் கிடக்கிறார்கள். உள்ளங்காலில் மட்டும்தான் போடவில்லை. மற்றபடி உடம்பின் எல்லா பாகங்களிலும் இந்த டாட்டூ வந்து உட்கார்ந்து கொள்கிறது. இதற்கான ஸ்பெஷல் மையங்கள் சென்னையில் பல இடங்களில் இருந்தாலும், இதற்கு நுங்கம்பாக்கம்தான் ஃபேமஸ் என்கிறார்கள் திரையுலகத்தில். இங்குதான் முன்னணிகள் வந்து போகிறார்களாம். ரேட்? இதற்காகவே லட்சங்களை கொட்டுகிற நடிகைகளும் இருக்கிறார்கள். கொடுமை என்னவென்றால், பெண்ணுக்கு பெண்ணே என்கிற நியதியெல்லாம் இங்கு இல்லை. டாட்டூ குத்துகிற கலையில் நன்கு தேர்ந்திருக்கும் ஆண்களும் படம் வரைகிறார்களாம். இவர்களிடம் வரைந்து கொள்ளவும் குவிகிறார்கள் இவர்கள்.

    நயன்தாரா வரைந்து கொண்ட டாட்டூ ஒன்று அவர் விரும்பாமலே இன்னும் கையில் இருக்கிறது. அழிக்க வேண்டும் என்றால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டால்தான் ஆச்சாம். அதற்கும் தயாராகிக் கொண்டிருக்கிறார் அவர். குஷ்புவின் பின் கழுத்தோரம் அமைந்திருக்கிறது அழகான டாட்டூ. த்ரிஷாவுக்கு கழுத்துக்கு கீழே, நெஞ்சுக்கு மேலே லேசாக எட்டிப்பார்க்கிறது டாட்டூ. இப்படி பட்டும் படாமலும் வரையப்படுகிற டாட்டூக்கள் ஏக கவர்ச்சியாக இருப்பது வேறு விஷயம்.

    இந்த டாட்டூ அழகில் கவரப்பட்டதால், இப்போது கவலைப்பட்டு நிற்கிறாராம் வரலட்சுமி. பாலா படத்தில் கரகாட்டக்காரியாக நடிக்கும் இவர் தனது கையில் பளிச்சென்று தெரிகிற இடத்தில் ஒரு டாட்டூவை வரைந்து வைத்திருக்கிறார். கதைப்படி கிராமத்து கரகாட்டக்காரி இவ்வளவு ஸ்டைலான டாட்டூவை வரைந்திருக்க முடியாதுதானே? பாலா கொந்தளிப்பதற்குள் அதை மறைத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாராம்.

    சொல்ல முடியாது. நகரத்தில் அதன் பெயர் டாட்டூ. கிராமபுறங்களில் பாட்டியம்மாக்களெல்லாம் குத்திக் கொள்ளாத பச்சையா? பாலாவுக்கு தெரிந்தாலும் பிரச்சனையில்லை என்பதே இப்போதைய சமாதானம்!

    சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்ட அஜித்; அதிர்ச்சியூட்டும் தகவல்கள்..!

    By: Unknown On: 07:35
  • Share The Gag
  • அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் என்றாலே அதில் கொஞ்சம் காரமும், சாரமுமாக போகிறது சில முக்கிய ஸ்டார்களின் நிலைமை… விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அடைய நினைப்பதாகவும், இதனால் அஜித் ரசிகர்கள் அனைவரும் விஜய் ரசிகர்களை கலாய்த்தே கொன்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் அஜித் ரசிகர்களே ஆச்சர்யபடும் அளவுக்கு சில வருடங்களுக்கு முன் அடுத்த சூப்பர் ஸ்டார் நான் தான் என்று அஜித்தே அவர் வாயால் பேட்டி கொடுத்திருக்கிறார்.

    கிட்டத்தட்ட 11 வருடத்திற்கு முன்பே அஜித் இந்த பேட்டியை கொடுத்திருக்கிறார். ஆஞ்சநேயா படத்தில் நடித்து முடித்துவிட்டு அப்படத்தின் புரமோஷன் வேலைகளில் பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த அஜித், சன் டிவியின் பேட்டியில் ஆஞ்சநேயா படம் எனது சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படம் இந்த படம் வெளியானால் அடுத்த சூப்பர் ஸ்டார் நான் தான் என்று மனதில் பட்டதையெல்லாம் பேசி தொலைக்க ஆஞ்சநேயா படம் செமத்தியாக அடி வாங்கியது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக மீடியாவுக்கும் அஜித்துக்கும் இருக்கும் இடைவெளி பெரிதாகிப்போனது.

    ஒரு காலத்தில் அஜித்தும் சூப்பர் ஸ்டார் கனவில் இருந்தது மறுக்கமுடியாத உண்மை..!

    விஷாலை சீண்டுகிறாரா சூர்யா? ஒரு பரபரப்பு பெருமூச்சு!

    By: Unknown On: 06:54
  • Share The Gag
  • ‘உங்க கடையில இந்த மருந்து இல்லையா? சரி… விடுங்க. பக்கத்துல எங்க கிடைக்கும்?’ இப்படி ஏதாவது ஒரு மருந்து கடையில் கேட்டுப் பாருங்களேன். கடைக்காரர் அருகாமையில் இருக்கிற கடையை காட்டவே மாட்டார். ‘அதுவா, நாலு கிலோ மீட்டர் தள்ளிப் போனா ஒரு கடை இருக்கு. அங்க கிடைக்கும்’ என்று அனுப்பி வைப்பார். ஒருவகையில் இது தொழில் பாதுகாப்பு. அருகாமையிலிருக்கிற கடையை காட்டிவிட்டால், வாடிக்கையாளர் அதற்கப்புறம் அங்கேயே செல்ல நேரிட்டால்?

    சினிமாவிலும் அப்படியெல்லாம் பாதுகாப்புகள் உண்டு. ‘கோச்சடையான்’ படம் வெளியாகிற தேதிக்கு முன்னாலேயே ‘லிங்கா’ படம் டிசைன் செய்யப்பட்டு விட்டது. ஆனால் ‘கோச்சடையான்’ வெளியீட்டுக்காக காத்திருந்தார் ரஜினி. படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் போதுதான் ‘லிங்கா’ பட அறிவிப்பு வெளியே வந்தது. அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாருக்கே ஒரு தொழில் பாதுகாப்பு தேவைப்படுகிற காலம் இது. சரி, மெயின் விஷயத்திற்கு வருவோம்.

    விஷாலும் ஹரியும் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் படம் ‘பூஜை’. படத்தை தயாரிப்பதும் விஷாலே! படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருக்கிறது. இந்த நேரத்தில்தான் படத்தின் வியாபார விஷயங்களையும் ஆரம்பிப்பார்கள். சரியாக இந்த நேரம் பார்த்து ‘சிங்கம் 3’ மீண்டும் துவங்கும் என்கிற மாதிரியான செய்திகளை சூர்யா வட்டாரங்களும், ஹரி வட்டாரங்களும் கசிய விடுவதுதான் விஷாலுக்கு ஷாக்! மார்க்கெட்டில் விஷாலுக்கு ஏறுமுகம் இருந்தாலும், சூர்யாவோடு ஒப்பிடும்போது சற்றே மாற்று கம்மிதான். இந்த நிலையில், ‘சூர்யா ஹரி படமே இந்த ரேட்டுன்னுதான் சொல்றாங்க. நீங்க ஏன் இவ்வளவு விலை கேட்கிறீங்க?’ என்று சும்மாவே ஒரு பொய்யை சொல்லி விலையை குறைப்பார்கள் வியாபாரிகள்.

    இப்படியெல்லாம் நடக்கும் என்று உணராதவரல்ல ஹரி. அப்படியிருந்தும் அவர் தனது அடுத்த படம் சூர்யாவுடன்தான் என்று பேட்டியளித்து வருவதை எந்த முகத்தோடு ஏற்றுக் கொள்வார் விஷால்? கடந்த சில தினங்களாகவே ஹரி மீது கடும் கோபத்திலிருக்கிறாராம் விஷால். சூர்யா பிராஜக்ட் இன்னும் முடிவாகல… என்று சொல்லிடுங்களேன் என்றும் வற்புறுத்துகிறாராம் ஹரியை. விஷாலுக்காக சூர்யாவை பகைத்துக் கொள்வாரா ஹரி.

    கண்ணாமூச்சு ஆட்டம் நடந்து கொண்டேயிருக்கிறதாம் இருவருக்கும் இடையில்!