Thursday, 7 August 2014

இது பொம்பளைங்க சமாச்சாரம். ஆனா, ஆண்களுக்கு!!

By: Unknown On: 22:30
  • Share The Gag
  • திருமண பந்தத்தினுள் நுழையும் ஆணும் பெண்ணும் இந்த காலகட்டத்தில்தான் பரஸ்பரம் மிக பக்குவமாகவும், மிகுந்த எச்சரிக்கை உணர்வுடனும் நடந்துகொள்ள வேண்டும். பல திருமண வாழ்க்கை, தளிர் நிலையிலேயே கருகிப் போறதுக்கு காரணமே பரஸ்பரம் புரிதல் இல்லாமைதான்.

    அதனால தான் அழுத்தி சொல்றேன், காதல் திருமணமோ… பெரியோர்கள் நிச்சயித்த திருமணமோ… எதுவானாலும் கவுன்சலிங் அவசியம். திருமணத்துக்கு முந்தைய ஆலோசனைகள் (ப்ரீ மெரைட்டல் கவுன்சலிங்), திருமணத்துக்கு பிந்தைய ஆலோசனைகள் (போஸ்ட் மெரைட்டல் கவுன்சலிங்) இரண்டையும் தயங்காமல், தவறாமல் பெற வேண்டியது அவசியம்.

    நிச்சயதார்த்தத்துக்கும் திருமணத்துக்கும் இடைப்பட்ட காலத்துல பெண்ணும், பையனும் பேசி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிறது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனா, அப்போ ரெண்டுபேரும் தங்களோட நெகட்டிவ் குணங்களையும், தங்களோட குறைபாடுகளையும் வெளிப்படையா பேசுறதில்லை.

    முழுக்க பாஸிட்டிவான கோணத்துல காட்டுறதுலயே குறியா இருப்பாங்க. தன்னை ஒரு ஹீரோ, ஹீரோயின் ரேஞ்சுக்கும், தியாகியாகவும், பரந்த மனப்பான்மையும் உதவும் குணமும் உடைய ஆளாகவும் காட்டிப்பாங்க. கிளர்ச்சியிலயும் கிறக்கத்துலயும் இருக்கிற துணையும், அதை நம்புவாங்க.

    திருமணத்துக்குப் பின் பல முறை தாம்பத்ய உறவுகள் நடந்த பிறகும், இயல்பான வாழ்க்கை சூழலாலேயும் மெள்ள மெள்ள அவங்கவங்களோட உண்மையான குணத்தையும், குறைபாடுகளையும் வெளிப்படுத்த ஆரம்பிப்பாங்க. கணவனோட முன்கோபம் புது மனைவியை நிலைகுலைய வைக்கும், அடிக்கடி சந்தேகப்படுற மனைவியின் குணம் புது கணவனை கதிகலங்க வைக்கும்.

    இப்படி ஆரம்பிக்கிற விரிசல்… திருமண வாழ்க்கையில் மிகப் பெரிய பள்ளத்தாக்கையே உருவாக்கிடும். அப்போ தடுமாறிடாம வாழ்க்கையை தக்கவெச்சுக்க, திருமணத்துக்கு முந்தைய கவுன்சலிங் அவசியம்.  ரொம்ப மாடர்னாக வாழ்க்கை முறை மாறிவிட்ட இந்த சூழல்லேயும் கட்டுப் பெட்டியா வளர்க்கப்படுற பொண்ணுங்களும் இருக்காங்க, பசங்களும் இருக்காங்க.

    செக்ஸ் பற்றிய அடிப்படை புரிதலே இல்லாம திருமண பந்தத்துக்குள்ளே போகிற இந்த மாதிரியான நபர்கள், தன்னையும் வருத்திக்கறதோட, துணையையும் வதைப்பாங்க. செக்ஸ் விஷயத்துல ஆண்களுக்கும், பெண்களுக்கும் பெரிய வேறுபாடுகள் இருக்குது. ஆணுக்கு சட்டென்று செக்ஸ் நாட்டம் வரும். ஆனா, பெண்கள் நிதானமா முன்னேறுவாங்க…

    அதேமாதிரி நீடித்தும் இருக்கும் அவங்க உணர்ச்சி. இந்த அடிப்படை அறிவையெல்லாம் திருமண பந்தத்துக்குள்ள நுழையுற ஆணும், பெண்ணும் புரிஞ்சுக்கணும். ”திருமண பந்தத்தின் எந்த நிலையில் இருந்தாலும் சரி… சம்பந்தப்பட்ட தம்பதியால தங்களுக்குள்ள பேசி பிரச்சனையை தீர்க்க முடியலைங்கிற கட்டத்துல, தாமதிக்காம ஒரு குடும்பநல ஆலோசகரை அணுகுங்க.

    நரையை தடுக்க கறிவேப்பிலை குழம்பு சாப்பிடுங்க!

    By: Unknown On: 18:45
  • Share The Gag
  • தற்போது இளம் வயதிலேயே நரைமுடி வருவதால், அத்தகையவர்கள் கறிவேப்பிலையை அதிகம் உட்கொண்டு வந்தால், நரைமுடி வருவதைத் தடுக்கலாம். அதிலும் கறிவேப்பிலையை சற்று வித்தியாசமாக குழம்பு போல் வைத்து சாப்பிட்டால் இன்னும் அருமையாக இருக்கும். மேலும் கறிவேப்பிலை குழம்பானது செய்த மறுநாள் சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும். குறிப்பாக இதனை சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். சரி, இப்போது அந்த கறிவேப்பிலை குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

    தேவையான பொருட்கள்:

    புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு

    கறிவேப்பிலை - 1/2 கப்

    சாம்பார் பொடி - 1 1/2 டேபிள் ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    சின்ன வெங்காயம் - 5-7 (நறுக்கியது)

    பூண்டு - 10-12 பற்கள் (நறுக்கியது)

    உப்பு - தேவையான அளவு

    வெல்லம் - சிறு துண்டு

    மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்

    தாளிப்பதற்கு...

    நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

    கடுகு - 1 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிது

    செய்முறை: முதலில் கறிவேப்பிலையை நன்கு நீரில் கழுவி, மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் புளியை நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்ற காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்க வேண்டும். பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் புளி சாற்றினை ஊற்றி, அத்துடன் கறிவேப்பிலை பேஸ்ட், மஞ்சள் தூள், உப்பு, சாம்பார் பொடி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, எண்ணெய் தனியாக பிரியும் வரை (குறைந்தது 15 நிமிடம்) நன்கு கொதிக்க விட வேண்டும். இறுதியில் அதில் வெல்லம் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கினால், கறிவேப்பிலை குழம்பு ரெடி!!!

    பிரசவ வலிக்கு பயந்து குழந்தை பெற்றுகொல்ல்வதை தள்ளிபோடும் பெண்கள் படிக்கவேண்டிய பதிவு !!

    By: Unknown On: 17:04
  • Share The Gag
  • பிரசவம்’ என்றாலே அது ஒரு பரவச அனுபவம். ஆனால், அந்த கணநேர வலிக்குப் பயந்தே குழந்தைப் பெற்றுக்கொள்வதைத் தள்ளிப்போடும் பெண்கள் இன்று அதிகரித்து வருகின்றனர். இங்கிலாந்தின் இளவரசியான கேத் மிட்டல்டன் முதல் சாதாரணப் பெண்கள் வரை அனைவரும் வலியில்லா பிரசவத்தையே விரும்புகின்றனர். சமீபத்தில் ஆண் குழந்தைப் பெற்ற இங்கிலாந்து இளவரசி கேத் ‘ஹிப்னோபெர்த்திங்’ (Hypnobirthing)என்ற முறையில் குழந்தை பெற்றதாக செய்திகள் வெளியாயின. ஹாலிவுட் நடிகை ஜெஸிகா ஆல்ஃபா, மிராண்டா கேர் போன்ற பல பிரபலங்கள், இந்த முறையில்தான் குழந்தை பெற்றுள்ளனர்.

    தமிழகத்திலும் ஹிப்னோபெர்த்திங் முறையில் சுகப் பிரசவங்கள் சில நடந்துள்ளன. ஆனால், இதுபற்றிய விழிப்பு உணர்வு இல்லை. தமிழ்நாட்டில் ஹிப்னோபெர்த்திங் தெரப்பிஸ்ட் பயிற்சி பெற்ற ஒரே மருத்துவரான ரேகா சுதர்சனிடம் இதுபற்றிப் பேசினோம். ‘இது ஒரு வித்தியாசமான ஹிப்னாடிசம். தியானம், ஹிப்னாடிஸ் போன்ற முறைகளிலிருந்து வேறுபட்டது. இந்தச் சிகிச்சைமுறையில், கர்ப்பிணியின் மனதை ஒருநிலைப்படுத்தி, அவர்களை தியானம் போன்று ஆழ்ந்த சிந்தனைக்குக் கொண்டுசெல்லாமல், அவர்களுடைய மனசின் வாயிலாக உற்சாகப்படுத்துகிறோம்.

    எட்டாத உயரத்தையும் எட்டவைக்கும் ஏணிதான். நேர்மறையான (Positive thinking)எண்ணங்கள். அந்த பாசிட்டிவ் எண்ணங்களை, பிரசவத்துக்கு எதிர்நோக்கியிருக்கும் கர்ப்பிணியின் மனசில் விதைப்பதுதான் ஹிப்னோபெர்த்திங்கின் முக்கிய நோக்கம். வேதனையோ, சோதனையோ நினைக்க நினைக்கத்தான் அதன் வீரியம் கூடும். பிரசவ நேரத்தில் பயமும், அதனை பற்றிய வேதனையும் மனதில் அதிகமாகும்போது, அது உடம்பில் வலியாக மாறும். இதே மாதிரிதான் பெண்களுக்கு ‘பிரசவ வலி’ என்பது கஷ்டமானது என்று நம்முடைய மக்களை நினைக்கவைத்துள்ளது. அது தவறானது. குழந்தையைப் பெற்றெடுத்த பின் பெண்கள் அடைகின்ற சந்தோஷத்தை, அது வயிற்றில் தவழும்போதே ஹிப்னோபெர்த்திங் மூலம் உணர முடியும்.

    இந்தப் பயிற்சியின் மூலம் பயம் நீங்கிவிடுவதால், பெரும்பாலும் வலி குறைந்துவிடும். இதனால், பிரசவம் என்பது எல்லாப் பெண்களுக்கும் சுகமானதாகவே அமையும். குழந்தை பிறந்த அரை மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்கச் சொல்வார்கள். அப்போது அதிக வலியினால் சில தாய்மார்கள் கஷ்டப்பட்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால், அந்த வலிக்கு முட்டுக்கட்டை போட்டு தாய்மார்களை சந்தோஷப்படவைத்திருக்கும் சிறந்த வலி நிவாரணியாக இந்த ஹிப்னோபெர்த்திங் முறை இருக்கிறது. மேலும், குழந்தை பெற்ற பிறகு, பெண்களுக்கு உண்டாகும் முதுகு வலி, மூட்டு வலி போன்ற அனைத்து உடம்பு வலிகளையும் இது நீக்கிவிடும்.

    ‘சுக’மான பயிற்சி!

    பெண்கள் கருவுற்ற 21-வது வாரத்திலிருந்து 27-வது வாரம் வரை, அந்த நேரத்தில் அவர்களால் செய்யகூடிய உடற்பயிற்சிகள், சுவாசப் பயிற்சிகள் மற்றும் குழந்தை பிறப்பிலிருந்து தாய்ப்பால் கொடுப்பது பற்றிய முழுமையான வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

    28-வது வாரத்திலிருந்து மனதை அமைதியாக்கும் வழிமுறைகள் கற்றுத்தரப்படுகின்றன.மனதில் பாசிட்டிவ் சிந்தனைகளை ஏற்படுத்தும் பயிற்சிகள் 38-வது வாரம் வரை கற்றுத்தரப்படும்.இந்த வகுப்புகள், வாரத்துக்கு ஒருநாள் ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரத்துக்கு எடுக்கப்படும்.

    இந்தப் பயிற்சியில் கணவன்-மனைவி இருவரும் கலந்து கொள்ளவேண்டும். கணவன் கூடவே இருப்பதால், பெண்களுக்கு வலி குறைவதுடன் தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது.

    பிரசவத்தின்போது அதிக உயர் ரத்த அழுத்தம் அல்லது சர்க்கரை நோய் உள்ள பெண்கள் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப் பெற்று, இந்த வகுப்பில் பங்கேற்கலாம்.இரண்டாவது பிரசவத்தைச் சந்திக்கும் பெண்கள்கூட, இந்தப் பயிற்சியை மேற்கொள்வது நல்ல பலனைத் தரும்.

    ஆகஸ்ட் 15 ஜெயிக்கப்போவது யார்? சிறப்பு அலசல்!

    By: Unknown On: 16:42
  • Share The Gag
  • சுதந்திர தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு பல விருந்து காத்துக்கொண்டு இருக்கிறது. அதில் முக்கியமாக தொலைக்காட்சிகளில் என்ன படம் போடுகிறார்கள் என்பது தான் தற்போது பலரின் எதிர்பார்ப்பு.

    அந்த வகையில் இந்த வருட சுதந்திர தினத்திற்கு எந்த சேனலை பார்ப்பது என்று நமக்கே குழப்பம் வரப்போகிறது.அந்த அளவிற்கு புதுப்படங்கள் வரிசை கட்டி வருகிறது.

    இதில் இந்த வருடத்தில் அனைவரும் எதிர்பார்த்த கோச்சடையான், கடந்த வருடம் வெளிவந்து மெகா ஹிட் ஆன ஆரம்பம், விஜய்யின் அதிரடி நடிப்பில் வந்த தலைவா என முன்னணி நடிகர்கள் படங்கள் ஒளிபரப்பபடுகின்றன.

    அது மட்டுமில்லாமல் திரைக்கு வந்து சில நாட்களே ஆன அதிதி, வாயை மூடி பேசவும், யாமிருக்க பயமே போன்ற மனம் கவர்ந்த படங்கள் உங்களை கவர இருக்கின்றன.

    இதில் எந்த சேனல் வெற்றிபெரும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

    முகம் கழுவுதலில் நாம் செய்யும் தவறுகள் என்ன ?

    By: Unknown On: 08:17
  • Share The Gag
  • பெண்களுக்கு அழகு என்றாலே அதில் பிரதானம் முக அழகுதான். எனவே, முகத்தை பராமரிக்க பல விதங்களில் முயற்சிப்பர். ஆனால், சில சின்ன சின்ன கவனக்குறைவுகளால் முக அழகு குறையலாம்.

    தவறான சோப்புகளைப் பயன்படுத்துதல்..

    பொதுவாக பெண்கள் அவர்களது சருமத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும். எண்ணெய் சருமம், வறண்ட சருமம் என தெரிந்து அதற்கேற்ற சோப்பு அல்லது முகம் கழுவும் க்ரீம்களை பயன்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல், வறண்ட சருமம் கொண்டவர்கள், எண்ணெய் பசை சருமத்துக்கு ஏற்ற சோப்புகளைப் பயன்படுத்தினால், சருமம் மேலும் வறண்டு போய்விடும். அதிலும், அதிக ரசாயனம் கலந்த சோப்புகளைப் பயன்படுத்தக் கூடாது.

    அடிக்கடி முகம் கழுவக் கூடாது

    பொதுவாகவே ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை முகம் கழுவலாம். அதற்கு மேலும் முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதாக நினைத்து முகம் கழுவினால், அது சருமத்தை பாதிக்கும். எனவே, வீட்டில் இருக்கும் போது அல்லது அலுவலகத்துக்கு செல்லும் போதும், அலுவலகத்தை அடைந்த பிறகு, இடைவேளையில் என அடிக்கடி முகம் கருவினால் சருமம் வறண்டு போகும்.

    சருமத்துக்கும் ஓய்வு கொடுங்கள்

    எப்போதும் முகத்துக்கு மேக்கப் போட்டு வைத்திருந்தாலும், இரவில் படுக்கச் செல்வதற்கு முன்பு, ஈரப் பஞ்சினால் முகத்தில் உள்ள அனைத்து மேக்கப் பூச்சுக்களையும் சுத்தமாக துடைத்து எடுத்துவிடுங்கள். இதனால், சருமத்துக்கு சிறிது ஓய்வு கிடைக்கும்.

    வெதுவெதுப்பான தண்ணீர்

    முகத்தை கழுவும் போது குளிர்ந்த நீரை விட, வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்துங்கள். இதனால், உங்கள் முகத்தில் உள்ள நுண்ணிய துவாரங்கள் திறந்துகொள்ளும். இதனால், அதில் அடைந்துள்ள அழுக்கு மற்றும் மேக்கப் சாதனங்களின் துகள்கள், முகத்தை கழுவும் போது வெளியேறிவிடும். அதே சமயம் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால், நுண்ணிய துளைகள் மூடிக் கொள்ளும். எனவே, முகத்தில் அழுக்கை அகற்றும் வகையில் கழுவ வேண்டும் என்றால் வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்தலாம்.

    காய்கறி தோல்

    வீட்டில் பயன்படுத்தும் சில காய்கறிகளின் தோல், தக்காளி, கோதுமை மாவு, அரிசி போன்றவற்றை முகத்தில் போட்டு தேய்த்து முகத்தை கழுவுவதன் மூலம், சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றலாம். சோப்பு போட்டு கழுவுவதை விட, இந்த முறை நல்ல பலனை தரும்.

    உப்பு தன்மை அல்லது கடின நீரைக் கொண்டு முகம் கழுவ வேண்டாம். இது முக சருமத்தின் தன்மையையே மாற்றிவிடும். அதுபோலவே, மிகவும் கடினமான துணிகளை வைத்து முகத்தை துடைக்கக் கூடாது. மிருதுவான துணிகளைக் கொண்டு முகத்தை ஒற்றி எடுப்பதே நலம்.

    அதேப்போல, ஒருவர் பயன்படுத்திய டவலை மற்றொருவர் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். அதனால் பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. சுத்தமாக நன்கு துவைத்து காயவைத்த டவல்களைப் பயன்படுத்துங்கள்.

    புதிதாக எந்த க்ரீமையோ அல்லது சோப்பையோ பயன்படுத்தும் போது அதில் உள்ள முக்கியக் குறிப்புகளை படித்துப் பாருங்கள்.

    மாய்சுரைஸர்கள் பயன்படுத்துவது நல்லது. மாஸ்சுரைஸர்களைப் பயன்படுத்தும் போது அவை நன்கு சருமத்தில் பரவி காயும் வரை காத்திருந்து பிறகு மேக்கப் சாதனங்களை பயன்படுத்துங்கள்.

    முகத்துக்கு பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களும் இயற்கையான இயற்கைப் பொருட்களால் ஆனவையாக இருப்பதாக பார்த்து வாங்குங்கள்.

    முகத்தை சுத்தப்படுத்த வென்று பிரத்யேகமாக உள்ள இயற்கை எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துங்கள். இது சருமத்தில் உள்ள நுண்ணிய துகள்களில் உள்ள அழுக்குகளை அகற்ற உதவும்.

    யாருக்கும் தெரியாமல் த்ரிஷாவின் திருமணம் முடிந்தது?

    By: Unknown On: 07:56
  • Share The Gag
  • த்ரிஷா ரசிகர்கள் எல்லாம் இதை பார்த்து அதிர்ச்சியில் உள்ளனர். இவர் தற்போது அஜித், ஜெயம் ரவி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

    இந்நிலையில் இவர் நடிகர் ராணாவை காதலிக்கிறார் என்று கூட வதந்தி பரவி வந்தது, அப்படியிருக்க தற்போது இணையத்தளத்தில் வந்த ஒரு புகைப்படத்தினால் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    ஆனால் நன்றாக பார்த்த பின் தான் தெரிகிறது, இது ஒரு கன்னட பட படப்பிடிப்பு, த்ரிஷா அருகில் இருப்பவர் கன்னட நடிகர் புனித் என்று. இவரை நம் மக்களுக்கு அதிகம் தெரியாததால் இதை நிஜ திருமணம் என்றே நம்பிவிட்டார்கள்.

    கணவர் எப்போது பொய் சொல்வார் தெரியுமா..?

    By: Unknown On: 07:24
  • Share The Gag
  • உலகம் முழுவதுமே உள்ள கணவர்கள் தங்கள் மனைவியிடம் பொய் சொல்வதுண்டு. காரணம் மனைவி மனம் வருத்தப்படக்கூடாது என்பதற்காகத்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள். மனைவியுடன் பொது இடத்தில் நடந்து செல்லும்போது அம்சமாய் ஒரு பெண் கிராஸ் செய்தால் அப்படியே ஒரு சின்ன லுக் விடுவது பலருக்கும் இருக்கும் பழக்கம்.

    அப்போது மனைவி கணவரை நோக்கி, இப்ப எதுக்கு அந்தப் பெண்ணை பார்த்தீங்க என்று கேட்டால். சீச்சீ நான் அந்த பெண்ணைப் பார்க்கவே இல்லை, என்னைப் போய் இப்படி நினைத்துவிட்டாயே என்று கேட்பதோடு நீ பக்கத்தில் இருக்கும்போது நான் எதுக்கு ‘அதை’ப் பார்க்கணும் என்பார்கள். வீட்டில் ஏதாவது புதிதாக சமைத்தால் முதலில் பரிசோதனை செய்வது கணவரை வைத்துதான்.

    மனைவியை சந்தோசப்படுத்த கணவரும் மூச்சுவிட முடியாமல் சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவார். என்னங்க நான் புதுசா சமைத்தது எப்படி இருந்தது என்று கேட்பார்கள், மனைவிகள். அதற்கு ஓ, ரொம்ப நல்லா இருந்தது என்று கணவன்மார்கள் பாராட்டுவார்கள். மனைவி உச்சி குளிர்ந்து போய் விடுவார்களாம். சமைத்த சாப்பாடு நல்லா இல்லாவிட்டாலும் கூட, அதையும் பெண்கள் அழகாக சமாளிப்பார்கள்.

    அன்னைக்கு ஒரு நாள் நான் ஏதோ புதுசா ஒரு ரெசிபி சமைச்சேன். அதை வாயில் வைக்கவே முடியவில்லை. ஆனால் என் புருஷன் ஒரு வார்த்தைக் கூட சொல்லாம அமைதியா சாப்பிட்டார். அவர் மாதிரி வருமா என்று பெருமை பேசிக் கொள்வார்கள்.

    அதாவது கணவன் பொய் சொன்னாலும் கூட, அதை பெருந்தன்மையாக கருதுவதுதான் ஒரு மனைவியின் குணம். புதிதாக ஒரு புடவையை கட்டிக் கொண்டு போய் கணவன் முன் நின்று என்னங்க இந்த சேலை எப்படி இருக்கு என்று மனைவி கேட்பாள். உடனே சேலை ரொம்ப நல்லா இருக்கும்மா என்பார்கள்.

    அவர்கள் சொல்வது சேலையைத் தான் அந்த சேலை உங்களுக்கு நன்றாக இருக்காவிட்டாலும் கூட பெரும்பாலானவர்கள் அப்படித்தான் சொல்கிறார்களாம். நல்லா இல்லைன்னு சொன்னா அடுத்து என்ன நடக்கும் என்பது ஆண்களுக்குத்தானே தெரியும்..!

    கணவருக்கு ஒரு சட்டையைத் தேர்ந்தெடுத்து அது அவருக்கு பிடிக்காவிட்டாலும் சூப்பர் என்று சொல்லிவிடுவார்கள் மனைவிகள். உடனே அது தனக்கு பிடிக்காவிட்டாலும் மனைவியின் சந்தோஷத்திற்காக அந்த சட்டையை அணிந்து கொள்வார்கள் ஆண்கள்.

    இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களில் ஆண்கள் பொய் சொல்வது மனைவி மனம் வருத்தப்படக் கூடாது, தாம்பத்யத்தில் இனிமை கெட்டு விடக் கூடாது, குடும்பத்தில் பூசல் வெடித்து விடக் கூடாது என்பதற்காகத் தானாம். இதையே சாக்காக வைத்து எதுக்கெடுத்தாலும் பொய் சொன்னா கண்டிப்பாக பூகம்பம்தான் வெடிக்கும் என்பதை கணவர்கள் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.