Sunday, 7 September 2014

மூலிகை வயாகரா வேண்டுமா? - செய்முறை

By: Unknown On: 23:10
  • Share The Gag
  •  சித்தர்கள் காலத்திலிருந்து இன்றையநவீன காலம் வரை ஆண்மையைஅதிகரிக்கச்செய்யும் மருந்துகளின்வசீகரம் குறைந்தபாடு இல்லை அது போலவே அனைத்து நோய்களையும் போக்கும் சர்வரோக நிவாரணிகளை கண்டு பிடிப்பதில் தான் சித்தர்கள் தங்கள் வாழ்நாளின் பெரும் பகுதிகளை பயன்படுத்தினர் . ஆண்மையை அதிகரிக்கச்செய்வதோடு சர்வரோக நிவாரணியாக அனைத்து நோய்களையும் தீர்க்கும் தண்ணீர் விட்டன் கிழங்கின் மகத்துவம் நம்முடைய சித்தர்கள் மட்டுமல்ல வடநாட்டு ஞானிகளும் அறிந்துள்ளனர்

    வளரியல்பு

    அல்லி குடும்ப(Lilliaceae) தாவரமான தண்ணீர் விட்டான் கிழங்கின் அறிவியல் பெயர் அஸ்பாரகஸ் ரெசிமோசஸ்(Asparagus Recemouses ) என்பதாகும் வேலிகளில் படர்ந்து வளரும் இலைகள் முட்களாகவும் நுனி கிளைகளே இலைகளாகவும் உருமாறியுள்ளன முழுத்தாவரமும் அடர்த்தியான பச்சை நிறம் கொண்டவை , வேர்கிழங்குகள் சதைப்பற்றும் அதிக நீர்தன்மையும் கொண்டவை .வேர்கிழங்குகள் மூலமாகவும் , விதைகள் மூலமாகவும் இனப்பெருக்கம் அடைகின்றன நிலத்தடியில் கொத்து அவரைக்காய்கள் போல வேர்கள் காணாப்படுகிறது வடமொழியில் சதாவரி என்று அழைக்கப்படுகிறது

    தண்ணீர் விட்டான் கிழங்கின் இரசாயன அமைப்பு

    தண்ணீர் விட்டான் கிழங்கின் மருத்துவ குணத்திற்கு காரணன் அவற்றில் காணாப்படும் பாலிபீனல் மூலப்பொருள்களும் அசபராஜின் என்ற நைட்ரஜன் காரப்பொருளும் தான்.

    மருத்துவ குணங்கள்

    பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் இரத்தப்போக்கை கட்டுபடுத்துகிறது தாய்பால் சுரத்தலை அதிகப்படுத்துகிறது உடலினை உறுதியாக்கி ஆண்மையை அதிகரிக்கசெய்கிறது, உடல் உள்ளுருப்புகளின் புண்களை ஆற்றுகிறது முக்கியமாக அல்சர் எனப்படும் வயிற்று புண்களுக்கு மிகச்சிறந்த மருந்து தண்ணீர்விட்டான் கிழங்கு ஆகும் . பல்வேறு நோய்களை தீர்க்கும் சக்தி இருப்பதால் தண்ணீர்விட்டாண் கிழங்கை வடநாட்டு ஞானிகள் நூறு நோய்களின் மருந்து எனப்பொருள்படும் சதாவரி (சதா= நூறு , வரி = நோய்களின் மருந்து ) என பெயரிட்டுள்ளனர்.

    அழகுதாவரம் தண்ணீர்விட்டன் கிழங்கு

    தண்ணீர் விட்டான் கிழங்கின் வெண்மை நிற பூக்கள் மிகவும் வசீகரமானவை சில சிற்றினங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வீட்டிலும் பூங்கவிலும் அழகிற்காக வளர்க்கப்படுகிறது அழகிற்காக வளர்கப்படும் சிற்றினங்களில் வேர்கள் பெரியதாக காணப்படுவது இல்லை

    தண்ணீர் விட்டான் கிழங்கு ஆரோக்கிய பானம் தயாரிப்பு

    நான் கூறப்போகும் ஆரோக்கிய பானம் தயாரிப்பு முறை இந்திய மருத்துவ கழகம் வெளியிட்ட இந்திய மருத்துவ முறைகள் என்னும் நூலினில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.

    பசுமையான தண்ணீர் விட்டான் கிழங்குகளை தோல் நீக்கி இடித்து சாறு எடுக்க வேண்டும் ஒரு கோப்பை சாறுடன் ஒரு தேக்கரண்டி சர்கரை கலந்து காலையில் பருக வேண்டும் இது ஒரு பல்நோக்கு ஆரோக்கிய மருந்தாகும் தண்ணீர் விட்டான் கிழங்குகள் பல்வேறு பகுதிகளில் பணப்பயிராக பயிரிடப்பட்டு வருகிறது நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும்.

    முட்சங்கன்’ மூலிகையின் மருத்துவக் குணங்கள்!

    By: Unknown On: 22:34
  • Share The Gag
  • புதர்ச்செடியாக வளரும் இந்த வகைத் தாவரம் அற்புத மூலிகைகளில் ஒன்றாகும். இலைகள் தடித்து நீளமுட்டை வடிவமானவை. இலை நுனியில் கூர்மையான 4 முட்கள் காணப்படும்.சிறிய பழுப்பு நிற பூக்களும், உருண்டையான சதைப்பற்றுள்ள கனிகளும் காணப்படும்.

    ஒவ்வொரு பழத்திலும் 2 விதைகள் இருக்கும். முட்சங்கு, சங்கன்,செடிச்சங்கன், சங்கமுள், ஆகிய மாற்றுப் பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இலை, வேர் ஆகியவை மருத்துவத்தில் பயன்படுகிறது.

    இருமலை போக்கவும், சிறுநீரை பெருக்கவும், காய்ச்சலை குறைக்கவும், முடக்குவாதம், கீல்வாதத்தை குணமாக்கவும் பயன்படுகிறது. இதன் வேர் கண்பார்வையை அதிகரிக்கச் செய்கிறது. ரத்தத்தை விருத்தியாக்குகிறது.

    காயம், சொறி, சிரங்கு குணமாக முட்சங்கன் இலைகளை அரைத்து பூசி வர வேண்டும். முட்சங்கன் வேரை 2 கிராம் அளவில் எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து, 4 மிளகுடன் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதை பாலில் கலந்து தினமும் 2 வேளைகள் வீதம் 3 நாட்கள் குடித்து வந்தால், காணாக்கடி மற்றும் பூச்சிக்கடி விஷம் குணமாகும்.

    முட்சங்கன் இலை, தூது வேளை இலை ஆகிய இரண்டையும் ஒரு பிடி அளவில் அரைத்து நெல்லிக்காய் அளவில் உருட்டி, ஒரு தம்ளர் பசும் பாலில் கலக்கி குடித்தால் சளி வெளியாகும்.

    இலையை அரைத்து அம்மைப் புண்களின் மேல் பூசினால் கொப்புளங்கள் மறையும். வேர்ப்பட்டையை அரைத்து அடிப்பட்ட வீக்கத்தில் பூசி வந்தால் வீக்கம் கரையும்.

    விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகைக்கு வாய்ப்பு தந்த பாலிவுட் இயக்குனர்!

    By: Unknown On: 20:45
  • Share The Gag
  • நடிகை ஸ்வேதா பாசு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் விபசாரத்தில் ஈடுபட்டதாக போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி ஐதராபாத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் அவரை 3 மாதங்கள் வரை தங்குவதற்காக அனுப்பியுள்ளனர்.

    பின்னர், ஸ்வேதா இதுபற்றி விளக்கம் அளிக்கையில், பட வாய்ப்புகள் இல்லாததால் பண நெருக்கடிக்கு ஆளாகி விபசார தொழிலுக்கு தள்ளப்பட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், பல்வேறு தரப்பினரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில் இந்திப்பட இயக்குனர் ஹன்சல் மேத்தா, ஸ்வேதா பாசுவுக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார்.

    தான் இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகி வாய்ப்பு கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

    போலீஸ் வெரிபிகேஷன்' இனி தேவையில்லை

    By: Unknown On: 19:52
  • Share The Gag
  • அரசு வேலைக்கு தேர்வானவர்கள் மற்றும் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்த வர்களுக்கு இனிமேல், 'போலீஸ் வெரிபிகேஷன்' எனப்படும், போலீசின் நற்சான்று தேவைப்படாது. சம்பந்தப்பட்டவரின் சுயஒப்புதலே போதுமானது என, மத்திய அரசு விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளது.
    பா.ஜ.,வைச் சேர்ந்த பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வந்ததில் இருந்து, பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.சமீபத்தில், அரசு வேலை மற்றும் அரசிடம் இருந்து பிற தகவல்களை பெற விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்ப படிவங்களில், அரசு அங்கீகாரம் பெற்ற, உயரதிகாரிகளிடம் கையெழுத்து பெறத் தேவையில்லை; அத்தகையவர்களின் சுய ஒப்புதலே போதுமானது என, மத்திய அரசு அறிவித்தது.

    இதனால், அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து, ஒப்புதல் பெற வேண்டிய தேவையில்லாமல் போனது.இப்போது அதில் கூடுதல் சலுகையாக, அரசு வேலை பெற்றவர்கள் மற்றும் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தவர் களுக்கு நடத்தப்படும், போலீஸ் விசாரணை தேவையில்லை என, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    அதற்கு பதில் வேலை கிடைத்தவர்கள் மற்றும் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்த வர்களின் சுய ஒப்புதல் உறுதிமொழியே போதும் என, அரசு விரும்புகிறது. இதன் மூலம், கால விரயம் தவிர்க்கப்படுவதுடன், லஞ்சம் கொடுக்கப்படுவதும் தடுக்கப்படும் என, அரசு நம்புகிறது.
    எனினும், இதில் உடனடியாக அறிவிப்பு வெளியிடாமல், சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் மாநில அரசுகளிடம் கருத்து கேட்டறிந்த பிறகு, அறிவிப்பு வெளியிட உள்ளது.இதற்கான பரிந்துரையை செய்துள்ள, மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையை பரிசீலித்து, அதற்கான உத்தரவை, மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் வெளியிட உள்ளது.

    பாலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர்களை பின்னுக்கு தள்ளிய யுவன்!

    By: Unknown On: 19:02
  • Share The Gag
  • தென்னிந்தியா சினிமா முழுவதிலும் அனைவருக்கும் இசையமைப்பாளர் யுவனின் இசை பற்றி தெரியும். இந்நிலையில் இவர் பாலிவுட்டில் இம்ரான் ஹஸ்மி நடிப்பில் ராஜ் நட்வர்லால் படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்துள்ளார்.

    முன்பெல்லாம் தமிழ் கலைஞர்களை பெரிதும் வரவேற்காத பாலிவுட், தற்போது சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கிறது.

    கடந்த வாரம் முன்னணி வானொலி ஒன்றில் டாப் 10 பாடல்கள் வரிசையில் பிரித்தம், விஷால் பரத்வாஜ் போன்ற பாலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர்களின் பாடல்களை ஓரங்கட்டி முதல் இடத்தை பிடித்தது யுவனின் ராஜ் நட்வர்லால் பாடல்கள்.

    நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த முந்திரி பழம்!!!

    By: Unknown On: 18:15
  • Share The Gag
  • முந்திரி வெப்பமண்டல பகுதிகளில் அதிகளவில் சாகுபடியாகிறது. தமிழகத்தில் அரியலூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகளவு பயிர் செய்யப் படுகிறது. ஒரு எக்டேரில் முந்திரி கொட்டையின் விளைச்சல் 500 கிலோவாகும். நம்மிடையே முந்திரி கொட்டைகளை போல முந்திரி பழங்களை பயன்படுத்துவது குறைவு. நாட்டில் உற்பத்தியாகும் 500 டன் முந்திரி பழங்களில் 10 சதவிகிதம் கூட பயன்படுத்துவதில்லை.

    ஏனெனில் பழத்தில் உள்ள டானின் எனும் வேதிப் பொருளே காரணம். இதனால் பழம் சாப்பிடும்போது தொண்டையில் கரகரப்பு தன்மை ஏற்படுகிறது. இதனை போக்க பழத்தை நீராவியில் பத்து நிமிடம் வேகவைத்து அல்லது உப்புநீரில் ஊறவைத்து சாப்பிடலாம். மா, பலா, ஆரஞ்சு போன்று அதிக சத்துகள் நிறைந்தது முந்திரிபழம். முக்கியமாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட, முந்திரிபழத்தில் அய்ந்து மடங்கு அதிகமுள்ளது.

    வைட்டமின் சி மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு நோயை குணமாக்குகின்றது. பற்கள், நகங்களை உறுதிப்படுத்துகின் றது. ஸ்கர்வி என்ற வைட்டமின் சி குறைபாடு நோயை குண மாக்குகின்றது. மேலும், கிருமி நாசினியாக செயல்பட்டு தொற்று வியாதிகளை குணமாக்க பயன்படுகின்றது. இவற்றில் புரதம், பீட்டோ கரோட்டின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.

    மேலும், பழத்தில் டானின் உள்ளதால் ஆன்டி ஆக்ஸி டன்ட் ஆக செயல்படுகின்றது. இச்சிறப்புமிக்க பழத்தில் இருந்து ஜூஸ், சிரப், ஜாம், மிட்டாய் போன்ற மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரித்து பயன்படுத்தலாம்.