Sunday, 7 September 2014

Tagged Under: ,

விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகைக்கு வாய்ப்பு தந்த பாலிவுட் இயக்குனர்!

By: Unknown On: 20:45
  • Share The Gag
  • நடிகை ஸ்வேதா பாசு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் விபசாரத்தில் ஈடுபட்டதாக போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி ஐதராபாத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் அவரை 3 மாதங்கள் வரை தங்குவதற்காக அனுப்பியுள்ளனர்.

    பின்னர், ஸ்வேதா இதுபற்றி விளக்கம் அளிக்கையில், பட வாய்ப்புகள் இல்லாததால் பண நெருக்கடிக்கு ஆளாகி விபசார தொழிலுக்கு தள்ளப்பட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், பல்வேறு தரப்பினரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில் இந்திப்பட இயக்குனர் ஹன்சல் மேத்தா, ஸ்வேதா பாசுவுக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார்.

    தான் இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகி வாய்ப்பு கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

    0 comments:

    Post a Comment